நீ – காதல் கவிதை – அபி -
tamil love poem – kathal kavithai – Abhi
நீ – காதல் கவிதை – அபி – tamil love poem – kathal kavithai – Abhi
வெட்ட வெளியில்
திடீரென முளைத்த
மெக்சிகன் க்ராஸ் நீ !
தாகத்தில் வரள
தானாக கிடைத்த
சில்ட் மினரல் வாடர் நீ !
ஓட்டத்திற்குப் பிறகு
ஓரமாய் அமரும்
அக்ரிலிக் சேர் நீ !
பயண நெரிசலில்
எஃம் ரேடியோவின்
பிடித்து மறந்த பாடல் நீ!
பணி உளைச்சலில்
பக்கத்து இருக்கை சொல்லும்
ஆஃபீஸ் ஸ்காண்டல் நீ !
முக்கிய டின்னரில்
கர்சீஃப் மறக்கையில் ஈரக்கையில்
டிஷ்யூ பேப்பர் நீ !
காலை அவசரத்தில்
கை தட்டி கூப்பிடாமலே
நிற்கும் ஷேர் ஆட்டோ நீ !
ஃப்ரிட்ஜ் திறக்கையில்
எப்போதோ வைத்து மறந்த
சில்ட் பீர் நீ !
பண்டிகை நாளில்
பக்கத்து வீடு தரும்
படையல் விருந்து நீ !
புதுப்பட ரிலீசின்
டிக்கெட் போர் தோல்வியில்
டிவிடி நீ !
என் நாளின் நிகழ்வுகளில்
அனுமதி கேட்காமலே
ஆஜராகி விடுகிறாய் நீ !
உனக்குள் நான் வர மட்டும்
உன் அனுமதி வேண்டும் என
உரக்கச் சொல்கிறாய் நீ!
- அபி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments