/* ]]> */
Nov 022012
 

 

காகம் தேடல் – கவிதை – அபர்ணா

 

crows - tamil kavithai - Amavasai

crows – tamil kavithai – Amavasai

 

தேடல்

என் அம்மாவைத் தேடுகின்றேன்,
இக் காக்கைகளின் கூட்டத்தில்;

அந்த ஒற்றைக் காகமோ?
அம்மா சுற்றம்சூழ வாழ்ந்தவள்
தனிமையை விரும்ப மாட்டாள்.

கழுத்தில் வெண்மை கொண்டதோ?
அம்மா சுட்டதங்கம் போல்
மாசு மரு அற்றவள்.

தேடல் – கவிதை – அபர்ணா

எல்லோருக்கும் நடுவமர்ந்து சம்பாசிக்கறததுவோ?
அவள் பிறரைக் கவர
உள்ளொன்றுவைத்து புறமொன்று பேசாதவள்.

அன்ன மிட்டு அழைக்கின்றேன்
எதுவும் அண்டவில்லை என்அருகாமையால்,
அம்மா தனக்குரியதை தைரியமாகஏற்பாள்;

நான் விலகி விட
ஒற்றை தலைசாய்த்து ருசிக்கிறததுவோ
அம்மாவிற்கு நாச்சுவை அதிகம்.

அனைத்தும் உண்ண வர
ஒன்றுமட்டும் அனைத்தையும் உண்ணவிட்டு
காவல் காக்கிற ததுவோ?

அம்மா விருந்தோம்பலில் வந்தவர்
வயிறோடு மனமும் நிறைந்துபோகும்
அதில் ஒருவர்கூட வாழ்த்தவில்லையோ
அவள் நோய்நொடியின்றி நூறாண்டு வாழ!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>