/* ]]> */
Jan 292013
 

சொல்லவில்லை நீ – காதல் கவிதை – Sadhu Chandu

 

கண்மூடி மௌனித்து
அமரும் வேளையிலும்
உள்ளே இரைச்சலாய்
உன் நினைவுப் பேரலைகள் !

காதல் கவிதை

காதல் கவிதை

உனக்கான காத்திருத்தல்கள்
என் கடைசிப் பயணமாகுமுன்னே
கடைசியாய் ஓர் முறை
என்னைப் பார்க்க வா !

உன் பயணக்கட்டுரையை
இப்போது தான் வாசித்து முடித்தேன்
உலக உருண்டையில் குதிரை மீது
நீயும் நானும் !

அறையெங்கும் புத்தகங்கள்
காதல் கவிதை தேடினேன்
நம் காதல் சொல்ல நீயே ஒரு
கவிதை என்பதை மறந்து !

கடைக்கண் பார்வையால்
எனைக் குருடாக்கினாய்
சொல்லவில்லை நீ மின்னல்
என்று
இதழோரப் புன்னகையால்
எனை ஊமையாக்கினாய்
கூறவில்லை நீ மோனலிசா
என்று !

 

-

Sadhu Chandu

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.