/* ]]> */
Aug 192011
 

குழந்தை கீழே விழும் கனவு – கனவு பலன்

நான் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்ததைப் போல என்னுடைய “கனவுகள் மூலம் பலன் பெறுவது எப்படி?” என்ற புத்தகத்தின் சில அறிமுக பக்கங்களை வெளியிட்டு உங்களுக்கு கனவுகளின் முக்கியத்துவத்தையும் அதன் முழு வீச்சையும் முழுமையாக புரிய வைத்து விட்டேன் என்றே எண்ணுகிறேன்.

பெயர் சொல்ல விரும்பாத வாசகி ஒருவர் moonramkonam@gmail.com  க்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். கடிதம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து இருந்தது. அவர் கண்ட கனவின் முழுமையான தமிழாக்கம் இங்கே :

சார்,

எனக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அதில் நான் படுக்கையிலிருந்து விழிக்கிறேன். என் பக்கத்தில் ஒரு குழந்தை தவழ்ந்து கொண்டிருக்கிறது. கொஞ்ச நேரம் கழித்துத்தான் அது என் குழந்தை என புரிந்தது. உடனே நான் அந்த குழந்தையை தூக்குக் கொண்டு நான் வசிக்கும் மாடி வீட்டின் பால்கணியின் ஓரத்துக்குப் போகிறேன்.. அப்போது என் குழந்தை என்னைப் பார்த்து முதன்முதலில் அம்மா என்கிறது… நான் குழந்தையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும்போதே குழந்தை கீழே தவறி விழுந்து விடுகிறது. நான் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என எட்டிப் பார்க்கிறேன். ஆனால் அதற்குள் கீழே கூட்டம் கூடி விடுகிறார்கள். நான் என் தலையை சன்னலோரத்திலிருந்து வெடுக்கென உள்ளிழுத்துக் கொள்கிறேன். யாரோ கதவைத் தட்டுகிறார்கள். திறந்தால்… பக்கத்து வீட்டு மாமி.

“யாரோட குழந்தையோ கீழ விழுந்துடுத்துடி பாவம் !” என்கிறார். நான்

“எனக்குத்தான் இன்னமும் கலயாணமே ஆகலையே மாமி” என்கிறேன்.

மாமி

“ஆமாண்டி நேக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

நான் கீழே போய் பார்த்தால் எங்கே எல்லாருக்கும் என் குழந்தை தான் என தெரிந்து விடுமோ என யோசித்து என் கட்டிலில் போய் படுத்து விடுகிறேன்”

இதுதான் அந்த வாசகி அனுப்பிய சாராம்சம். இந்தக் கனவுக்கு என்னை அர்த்தம் சொல்ல சொன்னார்கள்.

கனவை தனியே கேட்டு அதற்கு அர்த்தம் சொல்வது என்பது ஒரு படத்தின் ஒரே ஒரு காட்சியை பார்த்து முழுப் படத்துக்கு விமர்சனம் எழுதுவது போல. சிறிதாவது கனவு கண்டவரைப் பற்றி சில விபரங்கள் தெரிய வேண்டும். நான் மீண்டும் அந்த வாசகியை தொடர்பு கொண்டு அவரைப் பற்றி சில விபரங்கள் கேட்டேன்… தயங்கி தயங்கி சொன்னாகள்…

வயது : 40

தொழில் : டாக்டர் ( கைனகாலஜிஸ்ட்)

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள்.. இரண்டு மகள்கள் இருவரும் பள்ளி பயில்கிறார்கள்.

கணவரும் டாக்டர்.

இதுதான் அவர் தன்னைப் பற்றி சொன்னது.

நான் அந்தக் கனவை ஆராய்ந்தேன்… அதில் இருந்த குழந்தை ஃபேக்டர் என்னை பெரிதும் கவர்ந்தது… அது ஏதோ ஒரு கடந்த கால நினைவு என பட்டது. அதோடு கனவு முழுக்க ஒரு குற்ற உணர்வு பிரதிபலித்தது. இதை வைத்து ஆரம்பத்தில் அந்தப் பெண்மணி அபார்ஷன் எதும் செய்து கொண்டாரா என்றெல்லாம் யோசித்தேன்… ஆனால் சற்றே இன்னும் கூர்ந்து ஆராய்கையில் குழந்தை சொன்ன அந்த முதல் அம்மா வார்த்தை பற்றி இரண்டு கனவுகளில் அந்த வாசகி சிலாகித்திருந்தார். அதுதான் என்னை சரியான தடம் நோக்கி அந்த கனவை அர்த்தப்படுத்த வைத்தது. நான் அந்த வாசகியின் பெற்றோர் பற்றி கேட்டேன்… தய்ங்கி தய்ங்கி அம்மா இல்லை அப்பா முதியோர் இல்லத்தில் என ஒத்துக் கொண்டார் . இப்போது அந்தக் கன்வின் அர்த்தம் தெளிவாய் புரிந்தது. நம் வாசகி தன் தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கிறார். அவரை அந்த குற்ற உணர்வு பெரிதும் பாதிக்கிறது. அவர் அந்தக் கனவில் “என் குழந்தை இல்லை” என்று சொல்வது இவர் நிஜத்தில் தன் தந்தையின் சொந்தத்தை ஏதோ சொந்தமே இல்லை என உதறி விட்ட்தன் பிரதிபலிப்பு தான். குழந்தை கிழே விழுவது என்பது ஏதோ ஒரு நெருங்கிய சொந்தம் ( இந்த கேசில் அவர் தந்தை ) தன்னை விட்டு போய்விடுமோ என்ற இன்செக்யூரிட்டி ஃபீலிங்க் தான்.

அந்த வாசகியிடம் சொன்னேன். அவர் இரண்டு நாட்கள் அவர் க்ளினிக்குக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு தன் தந்தையை கோயிலுக்கு கூட்டி போனார். தன் வீட்டில் வைத்துக் கொள்வதை கணவர் விரும்பவில்லை . ஆனாலும் இப்போதெல்லாம் நேரம் கிடைக்கும்போது தன் தந்தையை போய் பார்த்து வருவதாக சொன்னார். இப்போதெல்லாம் குழந்தை விழும் கனவு தனக்கு வருவதில்லயென்றார்.

கனவு நம் மனசை ஆராய்ந்து நமக்கு என்ன தேவையோ அதை சொல்கிறது. நாம் தான் அதை சரிவர புரிந்து கொள்ள மறுக்கிறோம்…

உங்கள் கனவுகளை நீங்கள் moonramkonam@gmail.com  என்ற முகவரிக்கு உங்கள் வயது, ஆண்/பெண், குடும்பம் தொழில் கல்வி பற்றிய சிறு குறிப்போடு அனுப்புங்கள். நேரம் கிடைக்கும்போது உங்கள் கனவுகளின் அர்த்தங்களை நீங்களே கண்டு கொள்ள உதவியாயிருக்கிறேன்…

கனவுகளின் அர்த்தங்கள் இன்னும் தொடரும்…

[stextbox id="info"]

அபி எழுதிய “கனவுகள் மூலம் பலன் பெறுவது எப்படி ? ” இப்போது இ-புக் வடிவில்….

பேபால் ( Paypal) மூலம் வாங்க :
இபே ( Ebay) மூலம் வாங்க :

கனவுகள் மூலம் பலன் பெறுவது எப்படி? @ Ebay

[/stextbox]

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>