/* ]]> */
Jul 122011
 

ஆன்மீகம்: சில சந்தேகங்களும்

விடைகளும்

 

1. சிதம்பர ரகசியம் என்பது என்ன?

ரசியமான விஷயங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘ அது என்ன சிதம்பர ரகசியம்? ‘ என்று கேட்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.  உண்மையில் அங்கே என்ன ரகசியம் இருக்கிறது? சிதம்பரம் சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில், ஒரு சிறு வாயில் காணப்படுகிறது. இதில் உள்ள திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டுவார்கள்.

இதன் உள்ளே தெய்வங்களின் திருஉருவம் எதுவும் இல்லை.  அதே நேரம் தங்கத்தாலான வில்வதள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி எதுவும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இறைவன் இங்கு ஆகாய வடிவில் இருக்கிறார்.  அகண்ட  பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுதான் சிதம்பர ரகசியம் என்று இங்கு வழிபாடு செய்யப்படுகின்றது.

2. வித விதமான நைவேத்தியங்கள் எவையெவை?

(அ). திருத்தணி முருகனுக்கு அப்பம் நைவேத்தியம் செய்யப்படுகின்றது.
(ஆ). திருவாரூர் தியாகராஜருக்கு நெய் முறுக்கு சிறப்பு நிவேதனமாகும்.
(இ). காஞ்சீபுரம் வரதராஜபெருமாளுக்கு இட்லி நிவேதனம் செய்யப்படுகிகிறது.
(ஈ). திருப்பெருந்துறை ஆவுடையாருக்கு காலை வேளையில், புழுங்கல் அரிசிச் சோறும், கீரையும் படைக்கப்படுகிறது.
(உ). பிள்ளையார்பட்டி கற்பக வினாயகருக்கு உச்சிக்கால வேளையில் பலவித காய்கறிகள் நிவேதிக்கப்படுகிறது.

முருகன் கணபதி

முருகன் கணபதி

3. கண் கொடுத்த கணபதி:

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை  சுவாமிநாத கோவிலில் அருளே வடிவான நேத்திர வினாயகர் அருள்பாலிக்கிறார். கொங்கு நாட்டைச் சேர்ந்த,  பிறவியிலேயே  பார்வையற்ற ஒருவர் இங்கு வந்து நேத்திர வினாயகரை வழிப்ட்டு பார்வை பெற்றார். இதனால், இந்த வினாயகர் கண் கொடுத்த கணபதி ‘ என்றும் சிறப்புப் பெயர் பெற்றார்.

4. பரவசப்படுத்தும் அருள்வாக்கு:-

திருநெல்வேலி மாவட்டம் பழுவூர் கிராமத்தில் புற்றுக்கோவில் என்று அழைக்கப்படும் நாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.  பில்லி சூனியம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இங்கு அதிக அளவில் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு அருள்வாக்கு கேட்க வருகிறார்கள். அமாவாசை, பௌர்ணமி நாட்கள் இங்கு விஷேஷமானவை.

இது போன்ற அரிய ஆன்மீக குறிப்புகளை உங்கள் மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Tags : Doubts in tamil philosophy and tamil temples answered here

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>