/* ]]> */
Jul 292011
 

1. முற்போக்கான இயக்குனர் இரண்டு பெரிய நடிகர்களை வைத்து ஒரு படம் எடுக்கப் போகிறார். இரண்டு நடிகர்களில் ஒருவர் பேராண்மையான நடிகர். ‘ அந்த நடிகருடன் நான் நடித்திருந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆகவே, எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ‘ என்று உரிமையுடன் கேட்கிறாராம், மாமி நடிகை. இயக்குனரோ, ‘ ஜோடிப்பொருத்தம் பார்த்து ஆள் போடுகிறவன் நான் இல்லை. கதைக்கு ஏத்தமாதிரி இருக்கணும்… பார்க்கிறேன். ‘ என்று சொல்லி இருக்கிராராம்.  ஜனநாயக இயக்குனர்  முடிவு எப்படி இருக்கும்?

2. முன்னொரு காலத்திய கால்ஷீட் பிரச்சினையால் இவர் அப்பாவுடன் பேசுவதில்லையாம். அப்பாவிடம் சொல்ல வேண்டியதை அம்மாவிடம் சொல்லிவிட்டால், அவர் கணவரிடம் கேட்டுவந்து சொல்லிடுவாராம். அப்பாவே வலிய பேச வந்தாலும் மகன் முகம் திருப்பிக்கொள்வாராம். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் எதிர் எதிராக முதுகு காட்டித் திரிவது?  சூப்பர்ஸ்டார் நாட்டாண்மை பண்ணிவைக்கலாம் என்றாலும் அவரையே சனிபிடிச்சு நோய் ரூபத்தில் ஆட்டிவைக்குது.

nayan simbu

3.. இண்டஸ்ட்ரியை விட்டுப் போகுதே பொண்ணு , போற போக்குல அப்படியே ஒஸ்தியா ஒரு ஒத்தையாட்டம் போட்டுட்டுப் போகலாமில்ல என்று நினைத்திருக்கலாம்.எதை வைத்துக் கூப்பிட்டாரோ அன்புத் தம்பி, பழைய பாசம் நேசமாகக் கூட இருக்கலாம். ஆனா, நம்பர் நடிகையிடம் நடக்குமா? சாரி சொல்லிவிட, இப்போது, ஆட்டத்துக்கு சலங்கை கட்டுகிறவர், ‘ரேய’  நடிகையாம்.

5. அம்மை நோய் தாக்கியிருந்த ‘ சாண்டல்’  காமெடியன்  நோய் தீர்ந்து இப்பொது படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் , பெரிய வீட்டுப் பேரன் ஹீரோவாக நடிக்கும்  ‘ ஸ்டோன்- மிரர் ‘ படத்தில் மட்டும் இன்னும் நடிக்க ஆரம்பிக்கவில்லையாம்.,இந்தப் படத்தில் முக்கால்வாசி படத்தில் காமெடியன்தான் இருப்பாராம்.  காமெடியனுக்குப் பெரிய கேரக்டர் வேறாம். நோய் தீர்ந்துவிட்ட நிலையிலும் படப்பிடிப்புக்கு வராமல் ஏதேதோ சாக்குப்போக்கு சொல்வதன் காரணம் என்ன என்று தெரியவில்லை.

6. இயக்குனர்  க்ரீஷ் பதிரிக்கையாளர்களிடம் கடுகடுக்கிறார்., ” அவங்க மனசில யார் இருக்காங்க என்பதை எக்ஸ்ரே பிடிச்சு பாருங்க. நான் அப்பாம்மா பிள்ளை. அவுங்க சொல்றவங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆளை விடுங்க. ” ன்னு எஸ்கேப் ஆயிட்டார்.  யாரந்த ‘அவுங்க ‘ ங்குறீங்களா? அருந்ததீ நடிகை ‘நான் ஒருவரைக் காதலிக்கிறேன். ‘ என்று சொன்னதையும் நடிகர் கார்த்திக் திருமணத்துக்கு அவர் கிரீஷுடன் ஜோடியாக வந்ததையும் வைத்துதான் இந்தக் கேள்வி.  இயக்குனர் கிரீஷின் பதிலை பத்திரிக்கையாளர் யாரும் நம்பப் போவதில்லை. ‘ அப்ப நடிகையுடன் சுற்றுவதெல்லாம் என்ன?  ‘ அருந்ததீ  பார்ட் டூ ‘ டிஸ்கஷன்லாம் என்ன? என்பது பத்திரிக்கையாளர்களின் மில்லியன் டாலர் கேள்வி.

Tags : tamil cinema hot news and latest movie news about hot tamil actress and south indian heorines

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>