/* ]]> */
Jul 162011
 
anaemia

anaemia

 

சோகை நோய் சரியாக நம்மகிட்டயே எத்தனையோ நல்ல இயற்கை வைத்தியம் இருக்குது. உங்களுக்கு எந்த வைத்தியம் தோதுபடுதோ அதை முயற்சி பண்ணிப் பாருங்க. கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும்.
1. பப்பாளிப்பழத்தை தேனில் ஊற வைத்து குழைத்து சாப்பிடணும்.
2. காய்ச்சிய பசும்பாலில் வேண்டிய அளவு தேன் கலந்து கலக்கிக் குடிக்கணும்.
3. அருகம்புல்சாறுடன் தேன் கலந்து கலக்கி குடிக்கணும்.
4. கேரட் சாறுடன் சிறிது தேன் கலந்து கலக்கி குடிக்கணும்.
5. தக்காளி சாறுடன் சம அளவு எலுமிச்சம்பழச்சாற்றைக் கலந்து சிறிது உப்பு சேர்த்து கலக்கி குடிக்கணும்.
6. வெள்ளைப்பூண்டுடன் கரிசலாண்கண்ணிக்கீரையையும், மிளகையும் சேர்த்து மைய அரைத்து ஒரு சுண்டைக்காயளவு காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கணும்.
7. ஒரு டம்ளர் பீட்ரூட் சாறுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சம்பழ சாறு, ஒரு சிட்டிகை உப்புசேர்த்து, தினமும் காலை மாலை இரு வேளையும் குடிக்கணும்.
8. வேப்பங்கொழுந்தை மைய அரைத்து ஒரு சுண்டைக்காயளவு எடுத்து காய்ச்சிய பசும்பாலுடன் சிறிது தேனும் கலந்து தினமும் காலை மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் குடிக்கணும்.
9. முருங்கைக்காய் தோலை வெயிலில் காய வைத்து, தூளாக்கி அத்துடன் எட்டில் ஒருபங்கு பெருங்காயத்தூளை சேர்த்து சூரிய வெப்பத்தில் வைத்து நன்றாக உலர்ந்ததும் அந்தத் தூளை தினமும் காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வெந்நீர் குடிக்கணும்.
10 சுக்கு, மிளகு, திப்பிலி , சீரகம், அதிமதுரம், நாயுருவி வேரின் பட்டை ஆகியவற்றை ஒரு பங்காகவும் கரிசலாங்கண்ணிக்கீரை, கீழா நெல்லி இலை, நீர்முள்ளி வேர் ஆகியவைகளை மூன்று பங்காகவும்  எடுத்து நிழலில் உலர்த்தி தூளாக்கி வேண்டிய அளவு நெய்யும் தேனும் கலந்து காய்ச்சி தினம் காலை மாலை இரண்டுவேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கணும்.
11. நாள்தோறும் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு விளாம்பழத்தை சாப்பிட்டு காய்ச்சிய பசும்பால் குடிக்கணும்.
12. நாள்தோறும் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு நான்கைந்து பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு காய்ச்சிய பசும்பால் குடிக்கணும்.

Tags : helath tips in tamil to combat anemia and strengthen blood

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>