/* ]]> */
Jul 282011
 

காரட் கீர்:

தேவையான பொருட்கள்:

காரட்-1/2கி

சிறிய தேங்காய்-1

வெல்லம்-தேவையான அளவு

ஏலக்காய்-6

பச்சைக்கற்பூரம்-4சிட்டிகை

குங்குமப்பூ-6கிராம்

தண்ணீர்-தேவையான அளவு.

செய்முறை:

நல்ல நார் இல்லாத பிஞ்சுக் கேரட்டுகளைக் கழுவிச் சுத்தம் செய்து,மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அத்துடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.சிறிது ஏலக்காய் தூள்,பச்சைக் கற்பூரம்,குங்குமப்பூ சேர்க்கலாம்.இத்துடன் தேங்காய் பால் சேர்த்துக் கொண்டால் கூடுதல் சுவையுடன்,மிக அருமையாக இருக்கும்.

உடனே தயாரித்துக் கொடுக்க சுவையான பானம்.இது என்ன ஜூஸ்,எப்படி செய்தீர்கள் என்று விசாரித்து மறுமுறையும் கேட்டு வாங்கிக் குடிப்பார்கள்.

காரட் தயிர் பச்சடி:

நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்ட காரட் துருவலுடன் ,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று,சிறிது கொத்தமல்லி, பொதினாவுடன்,தேவையான அளவு உப்பு,கெட்டி தயிர் அல்லது யோகர்ட் சேர்த்தால் நல்ல ஆரோக்கியமான காரட் ரெய்டா[தயிர் பச்சடி ரெடி].

காரட் சம்பல்: 

துருவிய காரட்டுடன் ,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று,சிறிதளவு எலுமிச்சை சாறு,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்தால் ருசியான சம்பல் ரெடி.

குறிப்பு:பச்சையாக[சமைக்காமல்]காய்கறிகளை உபயோகப்படுத்தும் பொழுது நன்கு கழுவி சுத்தம் செய்த பின் உபயோகப்படுத்தவும்.

diet-b

tags : tamil Health diet tips and natural foods to maintain body health and body fitness for a healthy diet and better strength. Tasty recipe for preparing carrot gheer which helps to improve health and fitness

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>