/* ]]> */
Aug 012011
 

இலங்கை உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக  தமிழீழத்தின் தலைநகராக புலிகளால் அறிவிக்கப்பட்ட  கிளிநொச்சியில்  நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியில்,  ராஜபக்ஷேவுடன் மனோ உள்ளிட்ட பாடகர்கள் இணைந்து வாக்கு சேகரிக்கிறமாதிரி நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது. இதனை ” ராஜபக்ஷேவுடன் இணைந்து தமிழக பாடகர்கள் பாட்டுப்பாடி வாக்கு சேகரிக்க இருக்கிறார்கள்” என்பதை ராஜபக்ஷேவுக்கு ஆதரவான தாமிழின துரோக குழுக்கள் நிகழ்ச்சிக்கு முதல்நாள் மைக் மூலம் அறிவிப்பு செய்துகொண்டிருந்தனர். இந்த மைக் அலறலைக் கேட்டு தமிழர்கள் அதிர்ந்துபோனார்கள்.நமது பாடகர்கள் நிகழ்ச்சியைத் தவிர்த்துவிட்டு திகிலுடன் சென்னை திரும்பிவிட்டனர்.  இதுபற்றி பாடகர் மனோ,” தமிழர் பகுதியான கிளிநொச்சியில், ஒரு ஸ்டேடியம் திறக்கும் விழா நடக்கிறது. அந்த விழாவில் ஒரு இசை நிகழ்ச்சி. அதில் பாட்டுப் பாடவேண்டும் என்று இலங்கையில் உள்ள உதித்தா ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தினர் சென்னை வந்து என்னையும் , கிரிஷ் மற்றும் சுசித்ராவையும் அணுகினார்கள்.  தமிழர் பகுதி என்பதால் ஒப்புக்கொண்டேன்;  முதல்நாள் இரவு புறப்பட்டு கொழும்பு சென்றோம். கொழும்பிலிருந்து ராணுவ விமானம் மூலம் கிளிநொச்சிக்குப் போகும்போது, வெளிநாட்டிலிருந்தும் தமிழகத்திலிருந்தும்’ ராஜபக்ஷே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது; மீறி கலந்துகொண்டு சென்னை திரும்பினால்,  விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல’ என்ற ரீதியில் நிறைய போன்கால்கள் வந்தன. அப்போதுதான் எங்களுக்கு உறைத்தது.  எங்களுடன் இருந்த ஈவெண்ட் மேனேஜ்மென்ட்டிடம் ‘ நாங்கள் சென்னை திரும்பவேண்டும்’ என்று தெரிவித்தோம். அதை ஒத்துக்கொள்ளாத அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி சென்னை வந்து சேர்ந்தோம். தேர்தல் நிகழ்ச்சியில் பாடப்போகிறோம் என்பது சத்தியமா எங்களுக்குத் தெரியாது. ” என்று கூறுகிறார் மனோ.
தமிழ் தேசீய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் இதுகுறித்துக் கூறியபோது ” தமிழர் பகுதி என்பதால் நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டேன்  என்று சொல்வது ஏற்க இயலாது. அது பித்தலாட்டம். போர்க்குற்றங்களுக்காக சர்வதேச அளவில் நெருக்கடிகளை சந்தித்து வரும் ராஜபக்ஷே  ‘தமிழர்களுக்காக தேர்தல் நடத்துகிறேன்… தமிழர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்…. நீங்கள் சொவதுபோல் என் அரசுக்கு எதிராக தமிழர்கள் இல்லை. இசை நிகழ்ச்சியில் பாருங்கள். எவ்வளவு பேர் திரண்டுள்ளனர். தமிழகத்தில் வந்து தமிழ்ப் பாடகர்கள்  பாடுகிறார்கள் ‘ என்றெல்லாம் சர்வதேச சமூகத்துக்குக் காட்டவும் இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கவும் செய்த ஏற்பாடு இது. தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான் இந்த இசை நிகழ்ச்சி. ஸ்டேடியம் திறப்புவிழா என்பதெல்லாம் இங்கு இல்லை. ஈழத்தில் ராஜபக்ஷே நடத்திய போர்க்குற்றங்கள் குறித்து ஆதாரங்கள் வெளியாகி உலகமே இலங்கையைக் கண்டித்துக்கொண்டிருக்கும் நிலையில்  ..தமிழகத்திலுள்ள சினிமாத் துறையினர் எங்களுக்கு எதுவுமே தெரியாதுஎன்று மழுப்புவதும், அவர்களுக்கு இன உணர்வே சிறிதும் இல்லாமல் போவதும்தான் எங்களை துயரம் கொள்ள வைக்கிறது.  ” என்கிறார் ஆவேசமாக. ’ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி; தலா 50 லட்ச ரூபாய், திரும்பும்போது ராஜபக்ஷே கையால் அழகான பரிசு’ போன்றவை ஒரே நாளில் கிடைக்கும் என்ற லாபங்களைக் கண்க்கிட்டே பாடகர்கள் நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டனர் என்ற தகவல்களும் இலங்கையிலிருந்து வருகின்றன.

இது குறித்து மனோ ” சத்தியமாக பனத்துக்காக ஒத்துக்கொள்ளவில்லை . தமிழர் பகுதியில் விழா என்பதால் இலவசமாக பாடுகிறோம் என்றுதான் சொன்னோம்” என்கிறார் சத்தியம் செய்தபடி.

Tags : Famous tamil songs and tamil hit songs singers and playback singers proposed trip to srilanka and eelam tamils and rajapakshe and tamilnadu effects for mp3 singers

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>