
1. அப்பா சுந்தர்ராஜ் தமிழ் உட்பட 100 படங்களுக்கு மேல் நடித்தவர். அம்மா பிரமீளா பிரபல கன்னட நடிகை. மகள் மேக்னாராஜ் நடிக்க வந்திருக்கிறார். பெற்றோர் நடிப்புலகம் பற்றி சொல்லிக்கொடுத்திருக்கிறார்களாம். இன்னும் ஒருபடி மேலே போய் யார் யார் எப்படி யாரிடம் எப்படி பேசவேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களாம். ” மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறீர்களே ” என்ற கேள்விக்கு ” ஆரம்பத்தில் கவர்ச்சி தேவைப்படவில்லை. ஆனால், ‘ உயர்திரு 420 ‘ க்கு கவர்ச்சி தேவைப்பட்டது. கவர்ச்சி ஒன்றும் சினிமாவுக்குப் புதிதில்லையே. இனி வரும் படங்களில் கவர்ச்சி அதிகமாகத்தான் இருக்கும் ” என்றாராம்.

2. ஒரு திகில் படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றியடைந்தது. அந்த வெற்றியின் மூலம் அந்தப் படத்தின் நாயகி ” ராய் ‘ நடிகைக்கு புதுப்பட வாய்ப்புகள் மளமளவெனக் குவிகிறதாம். அந்தஸ்தும் சம்பளமும் ஒரே நேரத்தில் உயர்ந்தது. இனி ‘ ராய் ‘ காட்டில் மழைதான்.

3. சின்னத்திரை இழுக்குது!
குடும்பப்பாங்கான முகமும் தோற்றமும், உடைய நடிகைகள் நடிப்புலகத்துக்கு எப்பவுமே ஒரு வரப்பிரசாதம்தான். அப்படி இரண்டு நடிகைகளுக்கு வலை விரிக்கும் வேலைகள் நடக்கின்றனவாம். ஒருவர் மணமாகி கணவர், குழந்தையுடன் வெளிநாட்டில் வசிக்கிறாராம். இன்னொருவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இருவரையும் இழுக்கும் முயற்சியில் இன்னும் தயாரிப்பாளர்கள் வெற்றியடையவில்லையாம். கேட்கும் சம்பளத்தைக் கொடுத்தால்தானே வருவாங்க!
4. விடுதலைப் புலிகளின் கதையைப் படமாக்கிய மணிரத்னம் இப்போது இலங்கைக் கடற்கரையால் பாதிக்கப்படும் மீனவர் பிரச்சினைகளைப் படமாக்கப் போகிறாராம்.

6. இப்போது கைவசம் அதிகப் படங்கள் வைத்திருக்கும் நடிகை ஹன்சிகா ஆதரவற்ற 20 அனாதைக் குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அந்தக் குழந்தைகளை சினிமா, பீச், பூங்கா என்று அழைத்துப் போகிறாராம். இந்த நல்ல மனம் இப்படியே தொடரட்டும் என்று நாம் நினைக்கும் வேளையில், இவருக்கு கோவில் கட்ட நினைக்கிறார்களாம், இவரது ரசிகர்கள். ஏற்கெனவே குஷ்புவுக்கு கோவில் கட்டியவர்களாச்சே. ஆனால், அதெல்லாம் கூடாது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டாராம்,’ ஹன்சு ‘

7. ‘ பரிதி ‘ பட இயக்குனர், ஆனந்த சிவா தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க ஒரு தமிழ்ப் பெண்ணைத் தேடினார். கிடைக்காததால், மும்பையைச் சேர்ந்த கரினாஷாவை நடிக்க வைத்திருக்கிறார். இவர் ஒரு நாடக நடிகை. ஒருபக்க வசனமானாலும் எழுதி வைத்துப் படித்து அப்படியே ஒப்பித்துவிடுவாராம்.

8. நடிகர் விக்ரம் ‘ தெய்வத் திருமகள் ‘ வெற்றிக்கு பிறகும் கூட, கமர்ஷியல் படங்களாகத்தான் ஒத்துக்கொள்கிறாராம். ராஜபாட்டை, கரிகாலன் திரைப்படங்களைத் தவிர பாலா, விஜய், தரணி டைரக்ஷனிலும்கூட அனைத்துமே கமர்ஷியல்தானாம்.

9. நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிகையானதிலிருந்தே ஒரு பங்களா கட்டவேண்டும் என்ற தனது ஆசையை இப்போதுதான் நிறைவேற்றப் போகிறாராம். கிழக்கு கடற்கரைச் சாலையில் 5 ஏக்கர் நிலப் பரப்பில் பங்களா கட்டி அதில் குடியேறிவிட்டார். பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்கிறார்.
tags : Latest Tamil Cinema News| Hot news of Tamil Actress | tamil heroines latest scandals | tamil cinema gossips | tamil actress hot gallery | latest tamil movies news | தமிழ் gallery | தமிழ் நடிகைகள் | தமிழ் நடிகை புகைப்படம் | நடிகை கிசுகிசு | கிசு கிசு | நடிகை கவர்ச்சி | கில்மா நடிகை படம் | நடிகை கவர்ச்சி படம் |
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




Please comment with your real name using good manners.