/* ]]> */
Aug 222011
 

ஸ்லிம் டயட் டிப்ஸ்

உடல் எடையையும் சீராக வைத்துக் கொண்டால்தான் அழகாக இருக்கு முடியும் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும்.  உடல்  எடைக் குறைவுக்கு ‘அதைச் சாப்பிடக்கூடாது; இதைச் சாப்பிடக்கூடாது. ‘ என்று எத்தனையோ தடைகளை சொல்லியிருப்பார்கள். ஒரு அளவுக்கு மேல் வாயைக் கட்டுவது எனது கொஞ்சம் இயலாத காரியம்தான். எனவே சில எளிய வழிகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.  ஒரு நாளைக்கு மூன்று வேளை என்ற தியரியை முதலில் மாற்றுங்கள். 5 அல்லது ஆறு வேளைகூட சாப்பிடலாம். அலுவலக நேரம் ஒத்துவராது என்றெல்லாம் பயப்பட வேண்டாம்.

வீட்டில் சாப்பிட வேண்டியத்தை சாப்பிட்டு விட்டு மீதி நேரங்களில் சிறு சிறு ‘ ஹாண்டீ டைப்’ தின்பண்டங்களாக ஹேண்ட் பாக்கில் வைத்துக் கொள்ளலாம்.                         உதாரணத்துக்கு சாண்ட்விச் ப்ரெட்கள், வீட்டில் கோதுமை மாவில் செய்த காய்கறி சேலட்டை உள்ளடக்கிய சப்பாத்தி ரோல் முதலியவைகளை டிஷ்யூ பேப்பரில் சுற்றி வைத்துக் கொண்டால்,  சட்டென எடுத்து 2, 3 வாய் பிய்த்துப் போட்டுக்கொண்டு போய் விடலாம்.

வீட்டிலோ ஹோட்டலிலோ ரெகுலரான சாப்பாட்டை சாப்பிடும்போது , கட்டாயமாக பத்து நிமிஷம் முன்பு, பெரிய டம்ளரால்( டம்ளர் சிறியதாக இருந்தால், ரெண்டு டம்ளர் தண்ணீர் ) ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வளவுதான் சாப்பிடவேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்து  அதை முன்கூட்டியே ஒரு  சிறிய டிபன் பாக்ஸ் டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.  தட்டு காலியாக, காலியாக யாராவது போட்டுக் கொண்டெ இருக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.  அப்படி அனுமதித்தால், நாம் சாப்பிட நினைத்த சாப்பாட்டின் அளவு நம்மையறியாமல் அதிகமாகிவிடும். இதை ஒருபோதும் அனுமதிக்கலாகாது.  எடைக் குறைப்பு ட்ரீட்மெண்டை ஆரம்பித்த அடுத்தநாளே நாம் சாப்பிடப் போகும் சாதத்தின் அளவை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். திடீரென குறைக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள வேண்டும். 2,3, தடவைகளாக  வாரத்துக்கொருமுறையாக  குறைத்து, கரெக்டாக நீங்கள்  தீர்மானித்து வைத்திருக்கும் அளவை எட்டியவுடன்,  அந்த சாப்பாட்டை ஒருமுறையோ இருமுறையோ சாப்பிடுங்கள். வயிற்றைத் திணறிப்போகும் அளவுக்கு  நிரப்பிக் கொள்ளவேண்டாம், என்பதே முக்கியமானது.  ஒருநாளைக்கு திட உணவின் அளவு நீங்கள் தீர்மானித்து வைத்திருக்கும் அளவைவிட கட்டாயமாக மீறக்கூடாது. இதையும் மீறி உங்களுக்குப் பசித்தால்,  ஜூஸ், போன்ற பானங்களை அருந்தலாம்.  மற்றபடி பொதுவாக எடையைக் கூட்டும் பொருட்களை அறவே தவிர்க்க முடியா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளலாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>