/* ]]> */
Jul 062011
 
mangal sutra- தாலி

mangal sutra- தாலி

1. மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் அணியாமல் , தங்கச் செயினில் அணியலாமா?:-

தங்கச் செயினில் தாலி அணியலாம். சாஸ்திரப்படி,  ‘  மாங்கல்ய தந்துனா ‘ என்று மந்திரம் சொல்லி தாலி கட்டுகிறார்கள். ‘ தந்து ‘ என்றால் மஞ்சள் கயிறு.  தங்கச் செயினுடன் மஞ்சள் சரடும் சேர்த்து அணிந்துகொண்டால், பார்ப்பதற்கு மங்களகரமாக இருக்கும்.

2. முக்கியமான விழாக்களை பௌர்ணமி நாளில் கொண்டாடுவதன் நோக்கம் என்ன?:-

பௌர்ணமியோடு சேரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராக அமைந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். சித்திரை  மாதம் சித்திரை மாதத்திலும்,   வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்திலும், இதுபோல 12 மாதங்களுமே பௌர்ணமி நாளில்  கூடி வருகிறது.  சித்ரா பௌர்ணமி, வைகாசி  விசாகம் போன்றவை விழாக்களுக்கு உகந்தவையாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.  ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சிறப்பான வரலாறு உண்டு. அந்தந்த கோவிலின் தல வரலாறுகளுக்கேற்ப இப்படி உற்சவங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

3.  தியானம் செய்வதற்கு கட்டாயம் குரு அவசியமா?:-

கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐந்து  புலன்களையும், கட்டுப்படுத்தி  அறிவை ஒருநிலைப்படுத்தி, அந்த அமைதியில் இறைவனைக் காண்பது தியானமாகும். ஐநூறு ஆண்டுகள் ஆனாலும், குருநாதர் இல்லாத தியான நிலை கை கூடாது. தங்களுக்குத் தெரிந்த பெரியவர்கள் மூலம் நல்ல குருநாதரை ஏற்றுக்கொள்ளுங்கள்.

4. பூஜை அறையில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம்?:-


எத்தனை வேண்டுமானாலும் ஏற்றலாம். பொதுவாக இரன்டு குத்து விளக்குகளும், ஒரு குலதெய்வ காமாட்சி விளக்கும் ஏற்றுவது வழக்கம்.

5. மகாபாரத புத்தகம் வீட்டில் வைக்கக்கூடது என்பது சரியா?:-

புத்தகம் என்பதே படிப்பதற்காகத்தானே? அச்சிட்டு விற்பனைக்கு வந்திருக்கிறது என்றால், நாம்  வாங்கிப் படிப்பதற்குத்தானே? மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்பார்கள். இப் பொக்கிஷத்தை வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடாது என்று எதற்காகக் கூற வேண்டும்? உண்மையான பகுத்தறிவு என்பது இதுபோன்ற புரளிகளை நம்பாமல் இருப்பதுதான்.

6. பூஜை நேரத்தில் மட்டும் விளக்கேற்றினால், போதுமா? அல்லது நாள் முழுவதும் ஏற்ற வேண்டுமா?

குத்து விளக்குகளை  பூஜை நேரத்தில் மட்டும் ஏற்றினால் போதும்.  காமாட்சி விளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருந்தால் நல்லது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>