/* ]]> */
Jul 082011
 

1. ‘ மல்லுக்கட்டு ‘ படத்தில் அறிமுகமாகும் வருண், நடிகர் தனுஷின் ஒன்றுவிட்ட தம்பி. தனுஷின் சித்தப்பா சேதுராமனின் மகன்தான் இந்த வருண்.

சீமான்

சீமான்

2. புது இயக்குனர் விமல் இயக்கும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார், சீமான்

3. விஜய் நடித்த ‘ வேட்டைக்காரன் ‘ என்ற படம் தெலுங்கில் ‘ புலி வேட்ட ‘ என்ற பெயரில் ‘டப் ‘ செய்யப்பட்டிருக்கிறது. புலி வேட்டன்னு நினைச்சுட்டு வர்ர ஆடியன்ஸ் தான் வேட்டையாகப் போறாய்ங்க பாவம்…

அஜித்

4. 20 வயது இளைஞனாக அஜீத்தைக் காட்ட அமெரிக்காவில் இருந்து மேக்கப் நிபுணர்கள் வருகிறார்கள். ‘ மங்காத்தா ‘ முடித்த மகிழ்ச்சியோடு அடுத்த படமான ‘ பில்லா 2 ‘வுக்கு ரெடியாகிவிட்டார், அஜீத். இந்தப் படத்தில் எப்படி ஒரு சாதாரண இளைஞன் சரித்திரம் திகைக்கும் பில்லாவாக மாறினான் என்பது திரைக் கதை. இதனால், கதைப்படி, கல்லூரி முடித்த இளைஞன் கேரக்டரில், அஜீத் சில காட்சிகள் வரவேண்டியிருப்பதால்தான், இந்த 20 வயது மேக்கப்பாம்.

விஜய் அஜித் சூர்யா

5. கமர்ஷியல் படங்களான விஜய்யின் ‘ வேலாயுதம் ‘, அஜீத்தின் ‘ மங்காத்தா ‘ , சூரியாவின் ‘ ஏழாம் அறிவு ‘ என்ற மூன்று பெரிய பட்ஜெட் படங்களும் அடுத்தமாதம் கோலிவுட்டைக் கலக்கப் போகின்றன. ரசிகர்களுக்கு வேட்டைதான்.

6. ‘ சிறைப் பொழுதுகள் ‘ என்ற ஏ ஆர். ஆனந்த் இயக்கும் படத்தில் மெகானிகல் எஞ்சினியரிங் படித்துவிட்டு, சினிமாவில் நடிக்க வந்திருக்கும், புதுமுகம் ஷிவா படம் முழுக்க செருப்பே அணியாமல் நடித்திருக்கிறாராம். நாயகி வித்யாவும் ஒரு புதுமுகம்தானாம்.

தனுஷ்

7. பட பூஜையில் டைரக்டரோடு கொஞ்சிக் குலவும் தனுஷ், பட ரிலீஸின்போது , கட்டிப்புரளும் அளவுக்கு மோதல் வந்துவிடுகிறதாம். ‘ வேங்கை ‘ பட விஷயத்திலும் இதே கதைதானாம்.

8. ‘ ராணா ‘ படத்துக்காக நடிக்க இருந்த நட்சத்திரங்களிடம் , ” கால்ஷீட்டை வேஸ்ட் பண்ணாதீங்க. வேற படங்களில் தாராளமா நடிங்க. நான் அப்புறமா டேட்ஸ் வாங்கிக்கிறேன் ..” என்று சொல்லி அனுப்பிவிட்டாராம் டைரக்டர் கே. எஸ். ரவிக்குமார்.

9. சம்மந்தியைப் பார்த்து உடல்நலம் விசாரிக்க தூது விட்டாராம், இளமை டைரக்டர். ‘ யாருக்கும் அனுமதி இல்லை …” என்று கட் அண்ட் ரைட்டாக மறுத்துவிட்டாராம், சம்பந்தியம்மா.

Tags : tamil cinema latest news about Ajith Mangatha, Vijay Velayudam, Surya Ezham Arivu

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>