/* ]]> */
Jul 072011
 

சினிமினி:-

அசின், ஸ்ரீதேவி, ஜான்வி

அசின், ஸ்ரீதேவி, ஜான்வி

1. வாரிசுகளின் வரவு:- நடிகை ஸ்ரீதேவியின் மகள் சசிகுமார் இயக்கத்தில் அறிமுகமாகிறாராம்.  நடிகை ஸ்ரீதேவியும் கணவர் போனிகபூரும், மகள் ஜானவியின் திரைப் பிரவேசம் பற்றி விவாதிக்க சசிகுமாரை மும்பைக்கு அழைத்து மிகப் பெரிய விருந்து வைத்து அசத்தி விட்டார்களாம்.   அதுபோல நடிகை சுமித்ராவின் இரண்டாவது மகள் நட்சத்திராவும் ‘  டூ ‘ படத்தில்  அறிமுகமாகிறாராம். அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு வந்தாலும், கலகலப்பாகப் பேசுகிறாராம்.  சுமித்ராவின் முதல்  மகள்  ‘ உமா ‘வும் நடிக்கிறார் என்பது தெரிந்ததே.

2.  ‘ இரண்டாம் உலகம் ‘ படத்தை செல்வராகவன் இயக்குவதும், அதில் தனுஷ் நடிப்பதும் பழைய கதை.  அந்த படத்துக்கு இருவரும் பாட்டெழுதி, இருவரும் பாடுகிறார்கள், என்பது புதுக்கதை.

ஷ்ரயா

3. விழாவுக்கு கவர்ச்சி உடையில் வந்து சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் ஸ்ரேயாவுக்கு புதிதில்லை. இப்போதும் அப்படித்தான் வருகிறாராம். ஆனால், யாரும் தன் முகத்தை மட்டும்தான் படமெடுக்க அனுமதிக்கிறாராம்.

4. ‘ டூ ‘ படத்தில் நடிகை ஊர்வசி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அவர் வரும் காட்சிகளைப் பார்த்து படப்பிடிப்புக் குழுவினரே விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம்.

டப்சி

5. ‘நடனத்தை மையமாக வைத்து உருவாகும் ‘ மொகுடு ‘ தெலுங்குப் படத்தில், ‘ ஆடுகளம் ‘டாப்ஸி ‘ நாயகியாக நடிக்கிறார்.

6. பார்த்திபன் இயக்கி நடிக்கும் ‘ வித்தகன் ‘ படத்தில், இரண்டு பாடல்களை ஆஸ்திரியாவில் படமாக்கி இருக்கிறார்கள்.

சமீரா ரெட்டி

7. பிரியதர்ஷன் இயக்கும் இந்திப் படத்தில், பைக் ரேசராக நடிக்கும் சமீரா ரெட்டி, நிஜத்தில் ஒரு பைக் ‘ பைக் பிரியை ‘ யாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>