/* ]]> */
Jul 132011
 
ரஜினி பேரன்

ரஜினி பேரன்

1. ரஜினியின் பேரன்கள் யாத்ராவும் லிங்காவும் செல்வராகவன் திருமணத்தின்போது மீடியாக்களிடம்  சிக்கப் பார்த்தனர்.  துருதுருவென திருமண அரங்கத்துக்குள் வளைய வந்தவர்களை, ரஜினியின் பேரன்கள்தான் எனத் தெரிந்துகொண்டு பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துகொள்ள , மகன்களை மீடியாக்களின் பார்வையிலிருந்து மறைத்துவிட படாதபாடுபட்டனர், தனுஷும் ஐஸ்வர்யாவும்.முதல் மகன் யாத்ரா இந்த வருடம் எல்.கே.ஜி.யாம்.

2.  தண்ணியைக் கண்டாலே பயமாம், பரத்துக்கு. அப்புறம் நீச்சல் எப்படித் தெரியும்? கடல் நடுவே எடுக்கும் காட்சிகள் என்றால் நாசுக்காக தவிர்த்துவிடுவாராம்.  ‘யுவன் யுவதி ‘ படத்துக்காக தென்னாப்பிரிக்கா போனார், பரத்.  சிசிலி தீவு இருக்கும் கடலில் தனியாக ஒரு படகில் பரத் நிற்க , ஹெலிகாப்டர் மூலம் காட்சி படமாக்கப்பட பயத்தில் உறைந்து போனாராம்.

3. தமிழ் முகங்கள் வேண்டுமாம். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில், அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம், வெற்றி மாறன்.  தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்ட மக்களும் மன்னனும் பட்ட கஷ்டங்களை  மையக் கருவாகக் கொண்ட பீரியட் படமாம். நாயகன் நாயகிக்காக தமிழ் முகத் தேடுதல் நடந்து வருகிறதாம்.

கார்த்திகா நாயர்

4. கேரளாவை மறந்து சென்னையில் டேரா போட்டுவிட்டாராம், முன்னாள் நடிகை  ராதா.  அவருடைய ஏ.ஆர். எஸ். கார்டனில் படப்பிடிப்பு நடக்கவில்லை என்பதால், அங்கு ஹோட்டல் கட்டும் பணியைத் தொடங்கிவிட்டாராம். தன் மகள் கார்த்திகாவுக்கு கோலிவுட்டில் கிடைத்திருக்கும் ரத்தினக் கம்பள வர வேற்பைப் பார்த்து குஷியில் குதிக்காத குறையாம்.

5. வம்பை விலை கொடுத்து வாங்கணுமா என்று பெரிய இடத்து அம்மாவை நினைத்து கவலைப்படுகிறாராம், அப்பா கங்கை அமரன். ஆனால், மகன் வெங்கட்பிரபுவோ, ‘ மங்காத்தா ‘  முடிந்தபிறகு  அடுத்த படத்தையும் தயாநிதி அழகிரி பேனருக்கே இயக்கப்போகிறாராம். இதுதான் அப்பாவின் கவலை.

சோனியா செல்வராகவன்

6.’ முதலில் நடந்தது பொம்மைக் கல்யாணம். கீதாஞ்சலியுடன் நடந்ததுதான் நிஜக் கல்யாணம்.’ என்று சொன்னவர்  ரீஸெண்ட் டா மாப்பிள்ளையாகியிருக்கும் செல்வராகவன்தான்  என்பதை சொல்லவும் வேண்டுமோ? ஆனால், இந்தப் பேட்டி பற்றி திரையுலகப் பிரமுகர்  ஒருவர் கூறும்போது ….” எங்களைப் போன்ற பல முக்கியப் பிரமுகர்கள் , வயதில் மூத்தவர்கள்  வந்து மனதார வாழ்த்தியதை  ‘பொம்மைக் கல்யாணம் ‘ என விமர்சித்து எங்களை ‘கேலி’ செய்துவிட்டார் என பொருமித் தள்ளிவிட்டார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>