/* ]]> */
Feb 172012
 

 தெலுங்கு  ரசிகர்கள் டேஸ்ட் பார்த்து திரும்பிய பால் நடிகை

 

Amala-Paul நடிகை அமலா பால்

அமலா பால்

 

பால் நடிகை தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததைப் போலவே ‘அக்கட ‘ ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிக்கலாம்;  அங்கேயே  சேர் போட்டு உட்காரலாம் என்று ஆசைப்பட்டு டோலிவுட் பக்கம் போயிருக்கிறார், பால் நடிகை. நடிகருடன் டூயெட்டெல்லாம் பாடி , ஃபோட்டோ ஷூட்டும் முடிந்தபிறகு என்ன காரணத்தாலோ  அவரை திருப்பி அனுப்பிவிட்டார்களாம். கண்கள் குளமாகி திரும்பி வந்திருக்கிறார், பால் நடிகை.

நமது தமிழ் நடிகர்கள் ஒரு படம் ஹிட் கொடுத்தாலே, தங்கள் சம்பளத்தை யஉயர்த்திவிடுகின்றனர். அவர்கள் பணத்தின் வசூலைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆனால், தெலுங்கில் கடந்த வருடம்  பல ஹிட்டுகளைக்  கொடுத்த ‘ஒக்கடு’ நடிகர் தன்னுடைய ரேட்டை உயர்த்தவே இல்லையாம். அவருடைய நடிப்பைக் காப்பியடிக்கும் நம்மூர் நடிகர்கள் அவருடைய இந்த  தங்கமான குணத்தையும் காப்பியடித்தால் தேவலாம்.

இன்றும் முறைத்துக்கொண்டிருக்கிறார்கள் முன்னாள் நண்பர்கள். பெரிய இடத்துப் பேரனுக்கும், யங் தளபதிக்கும் இடையே நிலவி வந்த நட்பு தேய்ந்து தேய்பிறையாகி இப்போது அமாவாசை இருட்டாகிவிட்டது. ‘ஆயுதம்’ பட வெளியீட்டின்போது பேரன் போட்ட முட்டுக்கட்டையால், அந்தப் படத்துக்கு போதிய   தியேட்டர் கிடைக்கவில்லை என்பதால், தியேட்டர்களை எண்ணிக்கைவாரியாகப் பிரித்துக்கொள்ளலாம் என்ற தளபதியின் முடிவை பேரன் தரப்பு நிராகரித்ததால், உரசல் முற்றி இன்றும் முறைத்துக்கொண்டிருக்கிறார்களாம்.

வெளிநாட்டுக்குப் போனோமா , ஷூட்டிங்கை முடித்தோமா என்று இல்லாமல் சித்திர நடிகையுடன் கும்மாளம் போட்டுள்ளார், திருட்டு ஹீரோ. விஷயம் ஹீரோவின் மனைவிக்குத் தெரியவர, வீட்டுக்குள் பூகம்பமாம். ஜிலுஜிலுவென்ற சந்திப்பு ஏற்படுத்திய அனலால், நொந்துபோயிருக்கிறார் ஹீரோ.

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்திருப்பதால், உற்சாகமாக இருந்திருக்கிறார், முத்தழகு நடிகை. படத்தின் ஹீரோ திடீரென்று மற்றொரு நடிகையின் அழகில் மெல்ட் ஆனதால், அந்த வாய்ப்பும் போய்விட்டதாம். ‘ராவோடு ராவா மாத்திட்டாங்களே’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறாராம், முத்தழகு.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>