/* ]]> */
Oct 082011
 

ஏழாம் அறிவு சூர்யா முருகதாஸ்

1. ‘ அடுத்த அறிவைச் சொல்ற டைரக்டர்கிட்ட , ‘உங்க ஹீரோவுக்கு அவார்ட் கிடைக்குமா?’ ன்னு ப்ரஸ் கேட்டப்ப ‘ மனநோயாளியா நடிச்சாதான் கிடைக்குமோ, என்னவோ, அவார்டுக்கான அளவுகோல் என்னன்னு தெரியல’ ன்னு சொல்ல, அது, மனநோயாளியா நடிச்சு, அவார்ட் எதிர்பார்ப்பில் இருந்த யாரையோ புண்படுத்த , பதறிட்டாராம் பேட்டிக்காரர். அதுசரி, கஜினியில் வந்தது கூட ஒரு வகை மனநோய் தான ? மறந்துட்டாரா கஜினி டைரக்டர் ?

பிரகாஷ் ராஜ்

2. ‘ சப்ஸ்டிட்யூட் ‘ படத்தில் வில்லனா நடிச்ச பிரகாசமான நடிகர், ஏதோ,பிரச்சினையில் விலகிவிட அந்தக் கேரக்டரில் நடிக்க சத்யமான உயர நடிகரை புக் பண்ணலாமான்னு பார்த்தால், அவர். ஒன் ‘ஸி’ கேட்க, அவருக்கு ‘நோ’ சொன்ன டைரக்டர்,  ‘ கோ டைரக்டர்னா ‘ கோ’வுல தான் சம்பளம் கேட்பதா என்று கடுப்பாகி, ஒரு வட இந்திய நடிகரை புக் பண்ணிட்டாராம். வில்லன் கேரக்டரே, வில்லங்கமான கேரக்டராயிடுச்சாம்.

ராஜபாட்டை

3, சுசீந்திரன் டைரக்ஷன்ல விக்ரம் நடிக்கிற ‘ ராஜபாட்டை’ பாடல்களுக்காக ஜப்பான் போகிறார்களாம், நாயகன் ச்சீயான்; நாயகி தீக்ஷா சேத் .

மாற்றான் சூர்யா காஜல் அகர்வால்

4. ச்சீயான் ஜப்பானா, இதோ சூர்யா ‘மாற்றா’ னுக்காக ரஷ்யா போறாராம். இப்ப ரஷ்யப் பகுதிகளை நமக்குக் காட்டப்போறாராம், டைரக்டர் கே. வி. ஆனந்த்.

tags : Latest hot cinema news on tamil actor Surya and Vikaram and tamil latest release Ezham Arivu, Maatran, Rajapattai, K.V.Anand, சூர்யா, முருகதாஸ், ராஜபாட்டை, தீஷா சேத், மாற்றான், காஜல் அகர்வால்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>