/* ]]> */
Dec 242012
 

கிறிஸ்து பிறப்பு விழா மகிழ்ச்சியின் விழா! நம்பிக்கையின் விழா !! அன்பின் விழா  !!!!!

- சபீனா

tamil christmas  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

tamil christmas கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்த்து


இந்த விழாவின் இனிமையில் ஏராளமான சிந்தனைகள் நம் இதயத்தில் எழுகின்றன. தினம் தினம் எத்தனை எத்தனையோ குழந்தைகள் இம்மண்ணில் பிறக்கிறார்கள் .ஏன் இந்த குழந்தைக்கு மட்டும் தனி சிறப்பு ? இந்த குழந்தையின் பிறந்த  நாளை மட்டும் உலகமே கொண்டாட காரணம் என்ன ?


மனிதனின் பசி  பலவகை படும். வயிற்று பசி, உடல் பசி , பெண் பசி, பொன் பசி , மண் பசி என பலவகை பசிகளுக்கு ஆட்பட்டு மனிதன் இதுகாறும் காத்த வந்த பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் எல்லாம் காற்றில் பர்ர்க்க விட்டு பாவம் செய்ய ஆரம்பிக்கிறான் . பின் அதையே பழகி அதில் உழல ஆரம்பிக்கிறான் .அவன் களவு ,கொலை செய்யவும் தயாராகிறான். தன் மானம் , கௌரவம் அனைத்தையும்  பறக்கவிடும் அவல நிலைக்கு ஆளாகிறான். ஆகவே பசி, மனிதனின் புனித நிலையை இழக்கச் செய்கிறது, மனிதனை பாவியாக்குகிறது, மனிதனை மிருகமாக்குகிறது.


மனிதன் முழு மனிதனாக வாழ விரும்பிய இறைவன் தன் ஒரே மகனை மக்களின் எல்லா வித பசியையும் போக்கும் உணவாக இவ்வுலகுக்கு அனுப்பினார். “கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” (யோவா6-33).”வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது”(யோவா6-35)


தன் வாழ்வின் இறுதி நாளில் மானிடர் அனைவருக்கும் வாழ்வு தர, தன்னுடலைக் கல்வாரியில்  துறந்து   இனிய முடிவில்லா வாழ்வு தரும் உணவாகக் கொடுக்க மானிட உடல்தாங்கி மனிதனாக இன்று பிறந்துள்ளார். அவர் பிறந்தது பெத்லகேம். பெத்லகேம் என்றால் “அப்பத்தின் வீடு’ என்று பொருள்.ஆக இயேசு பிறந்த ஊரின் பெயர் “அப்பத்தின் வீடு’. பிறந்த பாலன் இயேசுவை உணவு உண்ணும் பாத்திரத்தில் வைத்துள்ளனர். “பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்” (லூக் 2’7). அன்றே அவர் மனிதர்களின் பாவ பசியை போக்கி மனிதனுக்கு அமைதியும் , மகிழ்ச்சியும் , நிலையான வாழ்க்கையும் தரும் உணவாக போகிறார் என்று உணர்த்தாமல் உணர்த்தி விட்டார்  .


இவ்வுலகில் ஒரு சிறு குழந்தையாகப் பிறந்தார் என்பது கிறிஸ்து பிறப்பு விழாவின் மையாமாக உள்ளது.  உண்மையில் இயேசு பிறந்த நாளை யாராலும் சரியாக குறிப்பிட்டு கூறமுடியவில்லை .
நாம் இப்போது கொண்டாடும் பிறந்த நாள் , இயேசுவின் இறப்புக்கு பின் 350 ஆண்டுகள் கழித்து  போப் ஜூலியஸ் என்பவரால் டிசம்பர் 25 என்று அறிவிப்பு செய்யபட்டது .


ஆனால் அவருடைய பிறப்பு பற்றி பைபிள் முழுவதும்  குறிப்புகள் காணபடுகின்றது .
செயின்ட் லூக்காஸ் இயேசுவின்  பிறப்பு  பற்றி எழுதியது பின்வருமாறு (லூக்கா 2: 1-14)
அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.

தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்.

விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.

வானதூதர் அவர்களிடம், �அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.

உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.
என்று  எழுதபட்டிருகிறது.    


இயேசு  கிறிஸ்து  அன்பின் குழந்தை . மனு உரு எடுத்த தெய்வ குழந்தை.நமது பாவ பசியை அகற்றி அன்பின் ருசியை புசிக்க செய்த தெய்வ திருமகன் . உலகின் அவநம்பிகைகளை அகற்றி நம்பிக்கை ஒழி ஏற்ற பிறந்த  நட்சத்திர நாயகன் .இதிலிருந்து   பிறக்கவிருக்கும் குழந்தை மனித இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெய்வக் குழந்தை. அதே நேரத்தில் மனித இனத்தோடு தம்மை ஒன்றித்துக்கொண்ட கடவுளின் வெளிப்பாடு என்று புரிகிறது


அக்குழந்தை இம்மானுவேல் என்று அழைக்கப்படும் என்று வானதூதர் அறிவிக்கின்றார். இம்மானுவேல் என்றால் இறைவன் நம்மோடு என்று பொருள் . இறைவன் நம்மோடு இருக்கின்றார். ஆம் , இந்த நம்பிக்கையோடு இந்த கிறிஸ்து பிறப்பு விழாவை நிறைவுடன் ஒருவரோடொருவர் அன்பை பரிமாறி மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

- சபீனா

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>