/* ]]> */
Aug 312011
 

காஜல் அகர்வால்

 ’ சிங்கம் ‘ படம் அதே பெயரில் இந்தியில்  ரிலீஸாகியுள்ளது. அதில் அஜய் தேவ்கனின் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.  காஜலின் நடிப்பைப் பாராட்டி, காஜலின் போனுக்கு ஒரே போனிலிருந்து  ஏகப்பட்ட மிஸ்டு கால்ஸ், எஸ். எம்.எஸ். கள்  வந்துகொண்டே இருந்திருக்கிறது. ரெஸ்பான்ஸே இல்லை என்ற கட்டத்தில்,  ” நான் ஒரு தொழிலதிபர். இந்தியிலும், தெலுங்கிலும் நீங்க நடிச்ச படத்தை பார்த்திருக்கிறேன். இந்தியில் நாலு படங்கள் எடுக்கப் போகிறேன். கதை கேட்கிறீங்களா? ” என்று எஸ்.எம்.எஸ். வந்ததாம். காஜல் தன்னுடைய மானாஜரைக் கூப்பிட்டு, ‘ அவரை வரச் சொல்லுங்களேன் ‘ என்று கூறியிருக்கிறார்., காஜல். வந்தவர் கதை சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்டு முடித்த காஜல், ” இந்தக் கதையில் நடிக்க விருப்பமில்லை. ” என்றார், காஜல். வந்தவர், ” பரவாயில்லை. நீங்கதான் என் படத்தோட ஹீரோயின். பிடிங்க. இது அட்வான்ஸ் செக். மூணு நாளில் வேற கதை சொல்றேன்.” என்று கூறிச் சென்றவர் நாலு நாளாகியும் திரும்பி வரவில்லை.  மேனேஜர் அவருக்கு போன் போட்டுக் கேட்டபோது, ” நோ; நோ. படம் எடுகிற ஐடியாவெல்லாம் இல்லை. நன் அவருடைய ரசிகர். சும்மா காஜலைப் பார்க்க வந்தேன். ஹி…ஹி..” என்றாராம். ” அப்ப 3 லட்சத்துக்கு கொடுத்த செக்கை திருப்பி வாங்கிக்கங்க” என்று கூறவும் , போனை ஆஃப் பண்ணீவிட்டாராம். ‘ ஏன் வந்தார்; எதற்கு வந்தார் ‘ என்று குழம்பியிருக்கிறதாம், காஜலின் ஏரியா.

Tags : நடிகை காஜல் அகர்வால் மர்ம மனிதர் சந்திப்பு | tamil actress kajal agarwal secret meeting with a mystery man

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>