/* ]]> */
Jul 182011
 

தமன்னா

தமன்னா, சுனைனா, அமலா பால், ஆகிய மூன்று பேரும்  அதிக சம்பளம் கேட்பதால், அவர்கள்மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் இருகிறார்கள். இந்த மூன்று பேரின் சம்பளமும் ஒரு கோடியை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அனுஷ்கா

ஆந்திர புயலான அனுஷ்கா,  விக்ரமுடன் ‘ தெய்வத்திருமகள் ‘ படத்தில் நடித்ததை அடுத்து கார்த்தி நடிக்கும் ‘ சகுனி ‘ படத்தில் ஜோடி சேருகிறார். சம்பளம் கோடியாம்.

ஒரு உண்மைச் சம்பவத்தை படமாக்கி இருக்கிறார், 63 வயதான  வி.எஸ்.டி. ரங்கராஜன். இள வயதில் திரைப்படக் கல்லூரியில் சேர முயன்று, சூழ்நிலையால் விவசாயத்துக்குப் போனவர், தற்போது சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார்.  கல்வித் தந்தை காமராசர் பிறந்த விருதுநகரில் , கல்விக்காக ஏங்கிய ஒரு ஏழைப்பெண், பின்னர் கல்வியால் உயர்ந்து கல்விக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட உண்மைக்கதையாம் இது.

ரீமா

மிஸ் கேரளா ‘ பட்டம் வாங்கிய ரீமா ‘ யுவன் யுவதி ‘ படத்தில் பரத்துடன் நாயகியாக நடிக்கிறார். அவரைப் பார்த்த இயக்குனர் குமாரவேல்,”  படத்தின் நாயகி ரீமாவைப் பார்த்த உடனே யாருக்கும் பிடிக்காது. பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும். “என்றாராம். இதைக் கேட்டதும் ரீமாவுக்கு முகம் மாறியது. உடனே ” ரீமாவின் நடிப்பை பார்க்கபார்க்கத்தான் பிடிக்கும் ” என சமாளித்தராம்.

முன்பு போல இப்போதெல்லாம், யாரும் டைரக்டராவத்ற்கு உதவி இயக்குனராக இருந்து கஷ்டப்படவேண்டாம். குறும்படம்  தயாரித்தாலே போதும். விஜயகாந்த் குறும்படங்களைப் பார்த்துதான், இயக்குனர்களைத் தேர்வு செய்கிறாராம்.

தமிழ்ப்படமான ‘யுவன்’ கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘ ஜோஷ் ‘ படத்தின் ரீமேக்காம். படத்தின் இயக்குனர் பாக்கியராஜ். இவரது உதவியாளரான சரண் இந்தப் படத்தைப் பற்றி” இளைஞர்கள் பலர் பந்தயம் என்ற பெயரில் உயிரிழக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப்படம் ஒரு பாடமாக இருக்கும். ” , என்கிறார். படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ரகுல் , ஐஸ்வர்யா என இரட்டை ஜோடிகளை நடிக்க வைத்திருக்கிறார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>