/* ]]> */
Jul 172011
 

தமிழ் ரசிகர்களை

அவமானப்படுத்திய காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

1.தமிழ், தெலுங்கு இரண்டிலும் முன்னணி நடிகையான   காஜல் அகர்வால்,  தன்னை யாரும் தென்னிந்திய நடிகை என்று சொல்லவேண்டாம் என்கிறார். தென்னிந்திய சினிமா ,மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால், நான் ஒரு மும்பைப் பெண். என்னை ஒரு பாலிவுட் நடிகை என்று சொல்வதையே விரும்புகிறேன் என்கிறார். இதனால், தமிழ், தெலுங்கு பட உலகைச் சேர்ந்தவர்களுக்கு வருத்தம்.

சோனாக்ஷி சின்ஹா

2. ‘ விஸ்வரூபம் ‘ படத்தில் கமல்ஹாசனுடன் ஜோடியாக சோனாக்ஷி நடிப்பதாக இருந்தது. இப்போது அவர் மாற்றப்படலாம் என்கிறாரகள். படப்பிடிப்பு சம்பந்தமா அமெரிக்கா சென்றிருக்கும் கமல், படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்கிறாராம்.

3. கார்த்திக் தனது மகனை மணிரத்னம் டைரக்ஷனில் கதாநாயகனாக அறிமுகம் செய்ய வேண்டுமென்று சில வருடங்களாக காத்திருந்தார். அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாததால், நல்ல கதைகளை வைத்திருக்கும் வேறு டைரக்டர்களைத் தேட ஆரம்பித்துவிட்டார். தனக்கு ஒரு பாரதிராஜா கிடைத்த மாதிரி தன் மகனுக்கும் ஒரு சூப்பர் டைரக்டர் வேண்டும் என்று நினைக்கிறாராம்.

4. சென்னை நகரில், ‘ மால் ‘களுடன் கூடிய சினிமா தியேட்டர்கள் பெருகி வருகின்றன. இதேபோல சில வெளியூர் தியேட்டர்களும் ‘ மால்’களாக மாற்றி அமைக்கப்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் , தமிழ்நாடு முழுவதும் எல்லா தியேட்டர்களுமே ‘ மால் ‘களாக  மாறிவிடும் .

லீனா மணீமேகலை

5. பெண் இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கிய  ‘ செங்கடல் ‘ படத்தில் இலங்கையை விமர்சிக்கும் வசனங்களுக்கு தணிக்கைக் குழுவால், அனுமதி மறுக்கப்பட்டது. இப்போது தீர்ப்பாயம், எந்தத் தடையும் சொல்லாமல் அனுமதித்துள்ளது.

ஆட்டோகிராஃப் மல்லிகா

6. ‘ ஆட்டோகிராஃப் ‘ படத்தில் நடித்த மல்லிகா, இடையில் காணாமல் போனார். அவர் மீண்டும் நடிக்கிறார். எந்த வேடத்திலும் நடிக்கத் தயார் என்ற செய்தியை கோடம்பாக்கத்தில் உலா வர விட்டுள்ளார்.

Tags : Latest hot news about tamil cinema and tamil actress and tamil actors

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>