/* ]]> */
Jul 052011
 

ஜெனிலியா தமிழ் தெலுங்கு ரசிகர்களை தன் குறும்பு சிரிப்பால் கட்டிப் போட்டு பின் பாலிவுட்டையும் கலக்கும் க்யூட் நடிகை. பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜெனிலியா, சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் போன்ற படங்களில் சிறபாக நடித்து புகழ் பெற்றார். தற்போது வேலாயுதம் படத்தில் இளைய தளபதி விஜய்யுடன் நடிக்கிறார்.ஜெலியாவுக்கு காதல் விரைவில் கல்யாணம் என்பதுதான் லேட்டஸ்ட் பாலிவுட் செய்தி.

ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. இருவரும் “துங்கே மேரி கஸம்” என்ற படத்தில் இணைந்து நடித்தனர். ரிதேஷ் தேஷ்முக் முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் . இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில் இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக ரிதேஷின் தந்தை காதலர்களை பிரிக்க கடும் முயற்சி செய்தார். ஆனாலும் அவர்கள் காதலில் உறுதியாக இருந்த காதலர்களுக்கே வெற்றி.  ஆரம்பத்தில் ரகசியமாக சந்தித்து வந்த காதலர்கள் இப்போது பகிரங்கமாக சேர்ந்து சுற்ற தொடங்கியிருக்கிறார்கள்.

ஜெனிலியா

சமீபத்தில் டோரன்டோவில் நடந்த பட விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் கைகோர்த்தபடி நடந்து சென்று காதலை உறுதிபடுத்தினர். அருகருகே உட்கார்ந்து விழாவை கண்டுகளித்தனர். காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. பட விழாவில் ரிதேசும் ஜெனிலியாவும் நெருக்கமாக உட்கார்ந்து இருந்தபோது ஜெனிலியாவின் தாயாரும் உடன் இருந்தார். ஜெனிலியாவுக்கு தற்போது இரண்டு இந்திப் படங்கள் கைவசம் உள்ளன. “போர்ஸ்” என்ற படத்தில் ஜான் அபிரகாமுடனும் இன்னொரு படத்தில் அபிஷேக்பச்சனுடனும் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ம்ம்ம்ம் இன்னொரு ஃபிகரு அவுட்டும்மா… மனச தேத்திக்க..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>