/* ]]> */
Aug 232012
 

நடிகையின் விவகார படங்களை வெளியிட்ட டைரக்டர்

andrea_jeremiah ஆன்ட்ரியா கவர்ச்சி படம்

andrea_jeremiah ஆன்ட்ரியா கவர்ச்சி படம்

பொதுவாக நடிகர்களின் ப்ரமோஷன் விவகாரங்களில் கழன்றுகொள்ளும் ரஜினி கேரளாவில் ‘கோச்சடையான்’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிவிட்டார், ரஜினி. ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இருந்த ரஜினியை தன் மகன் விக்ரமுடன் சந்தித்தார் பிரபு. ‘கும்கி’ படத்தில் நடிக்கும் சிவாஜி பேரன் கும்கி விழாவில் . வழக்கத்துக்கு மாறாக சிவாஜி மீது கொண்ட பேரன்பால், விக்ரமைப் பாராட்டி அற்புதமாகப் பேசினாராம்.

முழுநீளக் காமெடிக் கதையில் நடிக்கத்தான் தனுஷுக்கு இப்போது ஆசையாம். அதனால், அவருக்கு ‘களவாணி’ ஸ்டைலில் ஒரு காமெடிக் கதையை சொன்னாராம், சற்குணம். உடனே கதைக்கு ஓ.கே. சொல்லி, ‘பொல்லாதவன்’ தயாரிப்பாளர் கதிரேசனை வரவழைத்து சற்குணத்திடம் ஒப்படைத்து விட்டாராம், தனுஷ்.

தனுஷ் தயாரிப்பாளர் ஆகிறார். ’3′படத்தின் நஷ்டத்தை சரி செய்யவேண்டுமே!. வெற்றிமாறன் உதவியாளர் செந்தில் இயக்கும் புதுப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் தயாரிப்பாளராகிறார், தனுஷ்.

பாடத் தெரிந்த நடிகை புலனாய்வு பத்திரிக்கையாளராக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் டைரக்டருடன் தொடர்ந்து மோதிக்கொண்டிருந்தார். ஷூட்டிங்கின்போது அமைதியாக இருந்த டைரக்டர் எல்லாம் முடிந்ததும் படத்திற்காக நடிகை இசையமைப்பாளருடன் எடுத்த விரசமான சில படங்களை பத்திரிக்கைகளுக்கு அள்ளிக் கொடுக்கிறாராம். திடீர் திருப்பமாக இப்படி தனது ஸ்டில்கள் வெளியானதில் ‘ஷாக்’ ஆகியிருக்கிறாராம் நடிகை.  சின்ன வயது இசையமைப்பாளருடன் தான் மெய் மறந்து இருந்த படங்கள் எப்படி டைரக்டர் கைக்கு போனது என தவிக்கிறார் நடிகை.

தன்னை திருமணம் செய்ததாக பெண் டைரக்டர் தொடர்ந்த வழக்கு பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறாராம், டான்ஸ் மாஸ்டர். என் பிள்ளைன்னு சொல்றவனோட முகத்தைக்கூட நான் பார்த்ததில்லை இப்போது திடீனு புஹார் சொன்னா ஏத்துக்க நான் என்ன இளிச்சவாயனா?என்று கேட்கிறாராம். தந்தையின் இந்த நிலைக்கு முழு ஆதரவு கொடுக்கும் அவரது மூன்று மகன்கள்தான் வழக்கையும் பார்த்துக்கொள்கிறார்களாம். இதனால் உற்சாகமாக இருக்கிறார், டான்ஸ் மாஸ்டர்.

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>