/* ]]> */
May 222012
 

தோஷம் போக்கும் ஈசன் – ஆன்மீகம்

காஞ்சிபுரத்தை அடுத்து 20 கி.மீ. துரத்தில், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருமாதலம்பாக்கம். இங்கு 2 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த சுயம்பு திருமாலீஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது. திருமால் இங்கு ஈசனை நோக்கி தவம்புரிந்து மனோபவம் பெற்றதால் மகாலட்சுமி வாசம் செய்யும் தலமாக விளங்குகிறது.
பிரம்மனால் படைக்கப்பட்ட உயிரை பறிப்பவருக்கும் பிரம்மதோஷம், பித்ருதோஷம் உண்டாகும். இத்தகைய தோஷம் கொண்டவர்கள் திருமாலீஸ்வரரை வழிபட்டால் நிவர்த்தி  பெறலாம் என்கிறது,  தல புராணம். பரசுராமர் இங்கு வந்து தன் பித்ரு தோஷத்தைப் போக்கிக் கொண்டார் என கூறப்படுகிறது.
இறந்த முன்னோர்களுக்கான கடமையை முறையாக செய்யாமல் பாவத்திற்கு உள்ளானவர்கள் இப்பெருமானை வணங்கினால் பாவம் நிங்கும். இவரை திருஞான சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், திருமூலர் ஆகியோர் போற்றிப் புகழ்ந்துள்ளனர் என்கிறது தல புராணம். ஈசன் குடியிருக்கும் நெல்லி, திருமால் வாசம் செய்யும் அகத்தி,  மகாலட்சுமி  வீற்றிருக்கும் துளசி ஆகியவை தல விருச்சங்களாக இருப்பது மிகச் சிறப்பாகும். இங்கு பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா 3 நாட்கள் நடக்கிறது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>