மெல்லத் தமிழ் இனி சாகும் ? – இதுவா தமிழ்ப்பற்று ? ராணி க்ருஷ்ணன்
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்றான் பாரதி. அது அவன் தமிழின்பால் கொண்ட தமிழன்பு. “தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற அவனது குரல் உலகெல்லாம் ஒலித்ததோ இல்லையோ, சிலர் உள்ளங்களில் நிச்சயமாய் ஒலித்தது. அதன் விளைவினாலேயே தமிழ் இன்னமும் பேச்சு வழக்கிலாவது வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற ஆறுதல் ஏற்படுகிறது. நம்மில் எத்தனை பேர் தமிழை நேசிக்கிறோம், எத்தனை பேர் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்ற கேள்வியை முன்வைத்தால் நான் இருக்கிறேன் எனக் கூறிக்கொண்டு வருவதற்குப்… Read more →




