திருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 10 – பாபா நளினி
அர்ஜுனன் பாசுபத அஸ்த்திரம் பெறும் பொருட்டு சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம் திருக்கயிலாயம் ஆகும். திருக்கயிலாயத்திலும் , மானசரோவரிலும் ரிஷிகள் சூட்சுமமாக தவம் செய்கிறார்களாம் .அவர்கள் கயிலைக்கு வரும் பக்தர்களை ஆசிர்வதிக்கிறார்களாம் .என்பது இந்துக்களின் நம்பிக்கை . அவரவர் சொந்த வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு,அனைவரும் ஒன்று கூடினோம். பனிக்கட்டி மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.கயிலை மலைமுழுவதும் பனியால் மூடப்பட்டு இருந்தது. அடியேன் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்; என்னவென்றால், அதிகாலையில் உதய சூரியனின் கதிர்களால் திருக்கயிலாயமலை ”தங்கம்” போல் ஜொலிக்கும்;… Read more →




