விதைகளின் பயணம்
விதைக்கப்படுகிற எல்லா விதைகளும் விருட்சங்களாவதில்லை… சில நேரங்களில் சித்துக்கள் புரியவும் பல நேரங்களில் வித்தைகள் காட்டவும் பழக்கப்படுகிறோம்… தவறும் தருணங்களில் விலைபேசப்பட்டுக் கொத்தடிமைகளாய் விற்கப்படுகிறோம்… பிச்சை புகினும் எங்களுக்குக் கற்பிக்கப்படுபவை வறுமைப் பாடங்களே… எங்கள் பெற்றோர் உழைத்திருந்தால் ஒருவேளை எங்களுக்கு வாழ்க்கைப் பாடங்கள் கற்பிக்கப்பட்டிருக்கலாம்… உண்மைதான் – சிரமமின்றி விதைக்கப்படுகிற எல்லா விதைகளும் விருட்சங்களாவதில்லை எங்களைப்போல…












