உனக்கான என் வானவில் – கவிதை – வீரை. பி . இளஞ்சேட்சென்னி
வனாந்தரங்களையும் மனித சஞ்சாரமற்ற பிரதேசங்களையும் முதிய பாலைவனங்களையும் கடந்து இந்தப் பிரபஞ்சத்தின் விளிம்பு வரை பயணம் செய்கிறேன். செல்லும் இடமெல்லாம் பூமியின் சகல ஜீவராசிகளிடத்தும் உன் மீதான என் காதலின் ஆழத்தை விரித்துச் சொல்கிறேன் ஓர் அப்போஸ்தலனைப் போல. பீடபூமிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் உன் பெயரைச் செதுக்குகிறேன். அருவிகளையும் சுனைகளையும் உன் மொழியால் நிரப்புகிறேன். ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களையும் இந்து குஷ் மலை முகடுகளையும் தழுவிச் செல்லும் காற்றின் ஈரப்பதத்தில் உன் புன்னகையைச் சேமித்து வைக்கிறேன். அய்ரோப்பாவின் தானிய வயல்களில் கியூபாவின் கரும்புக் கொல்லைகளில்… Read more →



