டிசம்பர் மாத ராசி பலன் – மாத பலன் – December matha rasi palan FORECAST FOR DECEMBER 2012: மேஷம்: அஸ்வினி, பரணி, மற்றும் கிருத்திகை(1) ஆகிய நடசத்திரங்களை உள்ளடக்கியது . பெண்கள் புதிய ஆடை ,நகைகள் வாங்குவர். வருமானம் உங்களுக்குப் பல வழிகளிலும் வரும். உங்களுடைய பேச்சுத் திறமை உங்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும்.கால்நடைகள் மூலமும் வருமானம் வரும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை பெருக்குவார்கள். ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆனால், உஷ்ண சம்பந்தமான வியாதிகள்தாக்கலாம். மாணவர்கள் படிப்பில் பிரகாசிப்பது மட்டுமின்றி, விளையாட்டிலும் தங்கள் திறமையைக் காட்டுவர். தங்கள் கேரியரை மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கு அவரவர்விருப்பத்துக்கேற்ற மாற்றம் கிடைக்கும். சிலருக்கு அரசு வேலையும் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு கட்டுமான வேலைகள் தடையின்றி நடக்கும் .விவசாயிகளுக்கு விவசாய வருமானம் பெருக்கெடுத்து செல்வவளம் உண்டாகும். உங்களுடைய வேலையாட்களும் உங்கள் கீழே பணிபுரிபவர்களும், உங்களிடம் மிகவும் விசுவாசமாகஇருப்பார்கள். குழந்தைகளால் சற்றே மனக்கிலேசம் ஏற்படலாம். நாள்பட்ட பிரச்சினை ஒன்று தீரும். சிலர் கோவில் சம்பந்தப்பட்ட சேவையில் ஈடுபடுவார்கள். பரிகாரம்: சனி உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் சஞ்சரிப்பதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று, எள்ளுதீபம் ஏற்றி வழிபடவும். தினமும் காக்கைக்கு அன்னமிடவும்.வயோதிகர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யவும். 8-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்லதல்ல. வெள்ளிக்கிழமைகளில் துர்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம்செய்யவும். குலதெய்வத்தை அடிக்கொருமுறை வழிபடவும். உங்கள் முன்னோர்களுடைய நியமங்களை நிறவேற்றுங்கள். செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவிலுக்குச் சென்று ,உங்கள்கைப்பட தொடுத்த சென்னிற மலர்களால் ஆன மாலையை சாத்தி வழிபடவும். துவரம்பருப்பை தானம் செய்யவும ரிஷபம்: கிருத்திகை(2,3&4), ரோகிணி,மிருகசிரீஷம்(1&2) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.: திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். வீட்டுக்குத்தேவையான நேரத்தை மிச்சப்படுத்தக்கூடிய ஒரு பொருளை வாங்குவீர்கள். புதிய ஆடை யும் நகைகளும் வாங்குவீர்கள்.உங்களுடைய சம்பளம் உயரும். சேவை மனப்பான்மையோடு பிறருக்கு உதவி செய்வீர்கள். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை. வயிற்று உபாதைகள் தொல்லைகொடுக்கும்,. சாப்பிடும் உணவுப் பொருளில் கவனம் தேவை. கட்டுமானத் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். உத்தியோகத்தில் பெரிய பதவிகள் கிடைக்கும்.மற்றவர்கள் செய்யத் தயங்கும் ஒரு பெரிய வேலையைச் செய்து அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் கணிதம், பௌதிகம் முதலியபாடங்களில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். சிலர் சங்கீதம், கலைகள் முலியவற்றை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களுடன்… Read more →