தேனிலவு – சிறுகதை – சபீனா
மெட்ராஸ் நகரத்தின் பரபரப்பான வேப்பேரி.தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் அமைத்து கொடுத்த அடுக்கு மாடி குடியிருப்பு .அது ஒரு சிறிய பிளாட்.ஒரே ஒரு படுக்கை அறையும்,சிறிய ஹாலும்,மிக சிறிய கிச்சென்னும் உள்ள 10 X 10 வீடு .இது தான் நம் கதை களம் . அங்கே குடி இருக்கும் சுந்தரம்பாள்,ராஜரெத்னம் தம்பதியர்,இவர்களின் பிள்ளைகள் பிரேம்,பிரியா …. இவர்களுடன் அந்த வீட்டு மருமகள் சத்யா…… அவளை பற்றி சொல்லாமல் கதைக்குள் நுழைய முடியாது .அவள் பெற்றோர் வரிசையாக மூன்று ஆண் குழந்தைகளுக்கு பின் ஆசை பட்டு,எட்டு வருடம் கழித்து தவம் இருந்து பெற்ற பிள்ளை.எட்டு ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே பெண் வாரிசு.நடுத்தர வர்க்கம்தான் என்றாலும் இப்போது மூன்று அண்ணன்களும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் இவள் கேட்டு யாரும் இதுவரை எதையும் இல்லை என்று சொன்னதில்லை . அவள் அண்ணிகளுக்கும் இவளையும்,இவள் செய்யும் குறும்புகளையும் ரொம்ப பிடிக்கும். இவள் வயதில் சிறியவள்… Read more →




