நிலா நிலா..
வெகு நாள் திட்டப்படி.. வேப்ப மரத்தடியில் வைத்து, மாலுவின் மரப்பாச்சிகளுக்கு இதோ கோலாகலக் கல்யாணம். ஊர்கோலம், கச்சேரி எல்லாம் மின்வெட்டு உபயத்தில் பார்வையாளர்களுடன் படு விமர்சனம் விருந்தில்லாமல் நிறையுமா.. மஞ்சு வீட்டின் சோறு, பாலா வீட்டுக் குழம்பு இனிப்புக் கொணர மறந்த குட்டி.. நிலாவைப் பிய்த்துஅப்பமென இட்டதைப் பார்த்துக் கொண்டே இருந்ததில், பொறாமையில் பொசுங்கி எரிநட்சத்திரமாக விழுந்து கொண்டிருக்கிறது வேடிக்கை பார்க்கவென வந்திருந்த, விண்மீனின் துண்டு ஒன்று! ..ஷஹி..












