/* ]]> */
Oct 222012
 

சுவாசப் பயிற்சி மூலம் தியானம் செய்வது எப்படி ? – இறையருள் ஸ்ரீசந்திரசேகரர்

 

தியானம் செய்வது எப்படி ? அதனை மூச்சுபயிற்சி மூலம் எவ்வறு செய்வது என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது.

Meditation -  தியானம்

Meditation – தியானம்

ஓதாக் கல்வியின்  ரகசியம்

மனிதனை  நயமாகவோ,  கோபத்தாலோ, பயமுறுத்துதலாலோ, உபதேசத்தாலோ, அறிவுரைகளாலோ, ஏட்டுகல்வியாலோ, ஒரு காலமும் மாற்றமுடியாது. ஆதாரபூர்வமானயுக்தியின்யோகத்தால் மட்டுமே மாற்றமுடியும்.

[யுக்தி என்றால் சூட்சுமம்,டெக்னிக்,நுணுக்கம்,ரகசியம்]

சுவாசத்தின் மையம்[சுழுமுனை]

சுவாசமானது ஓம் அல்லது நமோ என்று மேலேறி  சற்று நின்று நமசிவாய அல்லது நாராயன என்று  இறங்குவதைப்பார்க்கலாம். சுவாசம் நிற்கும் மையத்தின்பெயர்களாகியசுழுமுனை,ஓரெழுத்து,ஊமைஎழுத்து,பேசாமந்திரம்,என்றெல்லாம்சொல்லக்கூடியசுவாசம்கணநொடிநிற்கும்  இடமாகிய சுழுமுனையில்மட்டுமே மனம் ஒடுங்கி, விழிப்பு நிலையில்  தனிப்பெரும்அறிவாக பிரகாசிக்கும்.

தியானம் செய்யும் முறை

இறையருளால் காலையில் தூங்கியெழுந்தவுடன் காலை கடன்களை முடித்து வெறும் வயிற்றிலோ அல்லது காபி டீ சுடுதண்ணீர் அருந்தி விட்டு சுகமான ஆசனத்திலோ , நாற்காலியிலோ அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மனதைசுவாசத்தின்மீதுஎந்தமந்திரத்தையும்உச்சரிக்காமல்முழுகவனத்தையும் இயல்பாகவும்மென்மையகவும்உள்சுவாசம்மேலேசெல்வதைகவனியுங்கள்.பிறகுசுவாசம்சற்றுநிற்கும்இடத்தில்[சுழுமுனையில்] சுவாசத்தைநிறுத்திஉற்று கவனியுங்கள்.அதன்பின்வெளிசுவாசம்இறங்கிநிற்பதையும்கவனியுங்கள். தொடர்ந்துவேறுஎந்தஒருநினைப்பும்இன்றி  தினமும்இருபதுநிமிடங்கள்நாற்பதுநாட்கள்இந்தயோகத்தைபயிற்சிசெய்தால்போதும்.  நீங்கள் நினைத்த,  நினைக்காதvaigaLவைகள் கண்டிப்பாக நிறைவேறும்.

நோய்களை தீர்க்கும் உடல் வழி யோக பயிற்சி

மிகினும்குறையினும்நோய்செய்யும்நூலோர்,

வளிமுதலா எண்ணிய மூன்று.-குறள்

மருத்துவ நூலோர் வாதம், பித்தம்,சிலேத்துமம் குறைந்தாலும்,அதிகமானாலும் வருகின்ற  சகல தீராத நோய்களான  .  முக்கியமாக மூட்டு, வலி, நரம்பு வலி, காக்காய் வலிப்பு ,பக்கவாதம்,  ரத்த அழுத்தம், இருதயநோய், குழந்தையின்மை, முடி கொட்டுதல் சர்க்கரை, செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண் ,மஞ்சட் காமாலை, ரத்த சோகை, ரத்த வாந்தி, கல்லீரல் ,மூலம், மற்றும் பித்தப்பை கல், இருமல், சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன், கண்டிப்பாக நீங்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

 இரவில் தூக்கம் வராதபோது, மிகுந்த கோபம், காமம், குரோதம் ஏற்படும் தருவாயில், விடை காணமுடியாமல் யோசிக்கும்போதும், நீண்ட நேரம் தாம்பத்தியம் நீடித்திருக்கவும், முக்கியமாக கணவ்ன்,.மனைவி,குzanழந்தைகள் மற்றும் நம் உறவுகளுக்கிடையே பிரச்சனை எழும்போதும் உடனே சுவாசத்தைக் கவனித்தால் போதும். உடனே நல்ல தீர்வு ஏற்படுவதைக் காணலாம்.

பலன்கள்

.இந்த தலை சிறந்த யோகத்தின் பயிற்சியின்போது சுவாசமானது அடி முடி அதாவது தலைமுதல் உள்ளங்கால் வரை சென்று கூடவே ரத்தஅழுத்தத்தை சமசீராக்கி ,கபம் என்ற சளியை கறையவைத்து எல்லா பகுதிக்கும் தங்கு தடையின்றி அழைத்து செல்கிறது. அதனால் மனமும், உடலும் மிதமான தட்ப வெட்ப நிலைக்கு அதாவது அசுத்ததேகம் சுத்தப்ரணவதேகமாக மாறுபட்டு வாதம் காற்று – பித்தம் நெருப்பு –கபம் நீர்  நம் தேகத்தில் அதனதன் விகிதாசாரத்தில் மாறி ரத்த ஓட்டம் தடையின்றி செல்லும்தருவாயில் ஐந்து நிமிடங்களில் அபாணவாயு திறந்து மலசிக்கலை நீக்கி மிகினும், குறையினும் உள்ள மும்மலங்கல் கண் கூடாக வெளியேறி பித்தம் தலைக்கேறாமல் சித்தத்தை தெளியவைத்து  காயத்தில் உருவாகும் சகல நோய்கள் நீங்கி மனம் தெய்வீகமாகி உடலை வழி நடத்தி ஷேத்திரமாக்கும் யோகமாகும்.

எனவே இப்பயிற்சியை  உதாசீனபடுத்தாமல் செய்யுங்கள் புரியாத பட்சத்தில் தொடர்பு கொள்ளுங்கள். இதுவரை உலகியல் வெற்றிகளின் ரகசியத்தை பார்த்தோம்,

 

இனி உலக பற்றிலிருந்து தனித்துநின்று இறையருளால் சகல சித்துகளும் தானாகவே கைவல்யமாகி பேரானந்தம்,சச்சிதானந்தம்,பரமானந்தத்தை அடைந்து பிறப்பறுக்கும் மெய்ஞானத்தை அடைய விரும்புவோர் மட்டும் கீழ்கண்ட ஒளி ரகசிய யோகத்தை நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

உயிர் வழி யோகபயிற்சி.

நயனதீட்சையானது, கண்ணிற்கு பார்க்கும் சக்திதான் உண்டு. கண்டறியும் சக்தி மனதிற்குதான் உண்டு. ஆதலால் யாரையும் எதையும் நேராகத்தான் பார்க்கவேண்டும். ஆனால் பார்க்காமல் பார்க்கவேண்டும். அதாவது மனதின்கண்திரை அமைத்துஅக்கணமே அவைகள் மனதில் பதியாவண்ணம் பார்க்கும் யுக்தியால்  மற்ற புலன்கள் அனைத்தும் அக்கணம் சுவாசமானது வெளிசுவாசத்திலிருந்து, உள்சுவாசத்திற்கு[வாசி] மாற்றப்பட்டு மிகுந்த எச்சரிக்கையோடு விழிப்பு நிலையில் இயங்கி தன்னை தடுத்தாட்கொள்ளப்படுகிறது.. ஆகையால் திரைஅமைத்து பார்க்காதபட்சத்தில்  மனம்வாக்குகாயம் மூன்றும் பலம் இழந்து மாயையில் சிக்கி விடும். பிறகு அவைகள் ஆழ்மனதில் பதிந்து மீண்டும்,மீண்டும் எழவைத்து மெய்ஞானத்தை அடையவிடாமல்  வெற்றி வாய்ப்புகளை தவறவிட்டு விடும். இறுதியில் நுட்பமான கண்களும் பார்வையை இழந்து விடும். என்வே ஒளிவழி யோகமான பார்க்காமல் பார்க்கும் யுக்தியால் மனம்எண்ணாமலும், வாக்குசொல்லாமலும்காயம்செய்யாமலும்செய்யும், அதாவது மனத்துக்கண்மாசிலன்ஆதல்;அனைத்துஅறன்; ஆகுலநீரபிற. என்றகுறளுக்கிணங்க சகல சித்திகளும்  தானாகவே வந்தடையும் தலை சிறந்த யோகமாகும்.

பற்றற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்;மற்று

நிலையாமை காணப் படும்.[குறள்]

ஆசை

ஆசையின் கீழ் எந்த ஒரு காரியத்தையும் துவங்குமுன் கூடவே ஒரு பயம் ஏற்படுவதைக் காணலாம். இந்த பயமே அனைத்து வெற்றி தோல்விகளுக்கு அடிப்படையாய் இருக்கிறது. இந்த பயத்தின்போது ஏற்படுகின்ற எண்ணம் சொல் செயல்களுக்கு தக்கவாறு முடிவு அமைகிறது. எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறாத பட்சத்தில் தன்னையறியாமல் ஏற்படுகின்ற பயத்தின் காரணமாக எழும் கோபத்தினால் தன்னையும் பிறரையும் இழந்து மன அழுத்தம் ஏற்பட்டு சுவாசத்தின் இயல்பான ஓட்டம் மாறுபட்டு ரத்தம் சூடேறி மனம் கொந்தளித்து மன நோய்களுக்கும், உடலின் அனைத்து நோய்களுக்கு ஆளாகிவிடும். எனவே மென்மையானசுவாசத்தைஎந்தசூழ்னிலையிலும்ஒரேநிலையில்நிலைநிறுத்தும் யோகத்தால் பயம்நீங்கிஅதனால் ஆன சர்வநாசம் செய்யும்கோபத்தைசுட்டெறித்து விடும்.

தன்னையறியாமல் ஏற்படுகிற பயம் என்பதுயாதெனில் அது கடவுளால்

மறைமுகமாக உணர்த்தபடும் எச்சரிக்கையாகும்

நோய்கள்

மலச்சிக்கல்    [மருந்தென வேண்டாம் யாக்கைக்கு]. என்ற குறளுக்கினங்க. வாதத்தினால். முக்கியமாகமூட்டு வலி ,நரம்பு வலி, காக்காய் வலிப்பு பக்கவாதம், ரத்த அழுத்தம் ,இருதயநோய் ,குழந்தையின்மை, முதலியவைகள் இதில் அடங்கும்.

சிலேத்துமத்தினால்.முக்கியமாக  இருமல் ,சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன் ,இறுதியில் கபத்தினால் சுவாசம் சென்று வர தடையாயாகவும் இருக்கிறது.

பித்தத்தினால் முக்கியமாக முடி கொட்டுதல் ,சர்க்கரை,, செரியாமை ,,வயிற்றுவலி, வயிற்றுப்புண் ,மஞ்சட் காமாலை, ரத்த சோகை, ரத்த வாந்தி, கல்லீரல், மூலம் ,மற்றும் பித்தப்பை இதில் அடங்கும்.

உணவு முறை

தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். இரவில் தூக்கம் வந்தவுடன் தூங்கிவிடவேண்டும். எந்த காரணத்தைக்கொண்டும் அதை தள்ளிபோடக்கூடாது. இது மூளையை பாதித்து மனநோய்களுக்கு ஆளாக்கிவிடும். அதே போன்று மலத்தையும்,சிறு நீரையும் தள்ளிபோடக்கூடாது.

வாசி

வா-என்றால் காற்று. சி-என்றால் நெருப்பு. சுவாசத்தையும் அதனூடே உள்ள நெருப்பையும் இணைத்து வாசிக்கும் யுக்தியின் பயிற்சியே வாசி எனப்படுவதாகும்.

இந்த சுவாசக்காற்றைக் கொண்டு முறையாக வாசிக்கும் பொழுது தச வாயுக்களை சீரமைத்து உடம்பிலுள்ள மனம் ,உடல் சம்மந்தமான தீராத நோய்களை தீர்க்கவல்ல மாமருந்தாகும்.

வாசி இருப்பிடம்

எல்லோரும்  அறிவார் நவ வாசல், அறியாதார்  திருவாசல் என்ற பத்தாவது வாசலின்  இருப்பிடமான உச்சிக்கு கீழே உண்ணாக்குக்கு மேலே உள்ள ஊசிமுனைஅளவேயுள்ள  இடுக்கமான                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                வழியாக ‘செல்லும் சுவாசத்தின் பெயரே வாசியாகும்.. இந்த சுவாசத்தின் [டெக்னிக்-யுக்தியை] கொண்டு  ஒன்பது வாசலின் உபாதைகளை அடைக்கவல்ல யோகமாகும்.

வெளிசுவாசம் – உள்சுவாசம்

இரவு வந்தவுடன் படுக்கைக்கு செல்லும் போது மல்லாக்க படுத்துக்கொண்டு கை கால்களை சாதாரணமாக நீட்டிக்கொண்டு சுவாசத்தை கவனியுங்கள்.அப்போது வெளிசுவாசம் மாற்றப்பட்டு உள்சுவாசம் வாசிப்பதை உற்று கவனியுங்கள்.

காலையிலிருந்து இரவு வரை உழைத்த களைப்பினால் சோர்ந்து, பார்க்கும் சக்தியை கண்களும், சிந்திக்கும் சக்தியை மனமும், உழைக்கும் சக்தியை உடலும் இழந்து உறங்கிவிடும்தருவாயில். ஆனவம்,கன்மம்,மாயை,பசி,தாகம்,விருப்பு,வெருப்புகள் பற்றற்ற நிலையில் உள்சுவாசமான  [வாசி ] மட்டுமே இயங்கி விடிந்தால் வெளிசுவாசத்திற்கு   சக்தியை அளிக்கவல்லதாகிறது.

 

மாமருந்து

சுவாசத்தை  கணக்கறிந்து மேலேற்றி மூலவரை வலம் வந்தபின் சுவாசம் ஒடுங்குகின்ற சுழுமுனையில் ஓங்காரப் பிரணவத்தை உள்ளடக்கி சுவாசத்தை இறக்கும் தருவாயில் முதுகு தண்டின் நடுனாடி வழியாக ஓடி பத்தாவது வாசலின் உச்சியில் கனல் ஆவியில் உற்பத்தியாகும் அமிர்த நீராகிய மாமருந்தே சகலத்தையும் குணமாக்கும் சஞ்சீவினியாகும்.

மாங்காய்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்பால் ஏதுக்கடி குதம்பாய்-[குதம்பை சித்தர்]

பக்தி- ஞானம்

வேண்டுதல் என்ற பக்தி நிலையிலிருந்து வேண்டாத ஞான நிலைக்கு செல்பவர்க்கு பிறவித்துன்பம் இல்லை.[எல்லோருடைய வாழ்க்கையிலும்  நினைப்பது நடக்கிறது. நினைப்பது நடக்காமலும் போகிறது. நினைக்காதது நடக்கவும் செய்கிறது இந்த மூன்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள் உண்மை புறியும். அதாவது இந்த மூன்றில் முதல் இரண்டும் மாயை என்பது புறியும்.மூன்றாவதான நினைக்காததுதான் நடக்கிறது என்ற உண்மை புறிந்து  , இது வேணும் அது வேணும் என்ற வேண்டுதல் என்ற பக்தி நிலையில் பொருள் ஈட்டுவதை கைவிட்டு ஞானனிலையான வேண்டாமலே கொடுப்பவந்தான் இறைவனாக இருக்க முடியும் என உணரப்பெற்று நிலையான செல்வத்தை அடைந்து  இலான் அடி சேர்ந்தார்க்கு அதாவது இறைவன்பால் சரணாகதி அடைந்தார்க்கு யாண்டும் இடும்பை இல [ பிறவித்துன்பம் இல்லை] அதாவது மீண்டும் அந்த உயிர் இன்னொரு தாயின் கர்பப் பையில் தரிக்காத மோட்ச நிலையாகும்..] [இடும்+பை  என்பது கர்ப பையை குறிக்கிறது ]

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு,

யாண்டும் இடும்பை இல. [குறள்]

தியானம்

தியானம் என்றால் விழிப்பு நிலையில் மௌனமாய் இயங்கும் சுவாசத்தை சதா காலமும் கவனிப்பது. அதாவது ஒரு மனம் ஒன்றை பார்த்து, கேட்டு, மகிழ்ந்து மற்றும் எந்த வேலையை செய்து கொண்டிருந்தாலும், இன்னொரு மனம் சுவாசத்தின் மீது கவனம் இருக்கவேண்டும். [அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்று.]

[ஏது தொழில் புரிந்தாலும், எத்தவம் புரிந்தாலும் சித்தர் மனம் மோனத்தே. அதாவது மௌனமாய்[மோனத்தே] இயங்கும் சுவாசத்தை கவனித்தல்]

 தவம்

தவமென்றால் விழிப்பற்ற விழிப்பு நிலையில் உயிரின் மையம், உடலின் மையம் இரண்டும் ஓர் மையத்தில் ஒன்றிணையும் தருவாயில் பேறின்பமயமாதல். [அதாவது சிவன் என்ற உயிரும், சக்தி என்ற உடலும் சிவசக்தி மயமாதல்.]

யோகம்

யோகம் என்றால் தவத்தின் பலனை அடைதல்.

இவற்றின் பலனை அடைந்தவர்களே யோகி ஆவார்கள்.[யோகம் என்றால் பலன் என்பதாகும்].

சித்திகளின் அற்புதங்கள்

சிலதெல்லாம் உனக்காக மட்டும் இறைவனால் கொடுக்கபட்டவைகள். அது போன்று உனக்கு கைவரப்பெற்ற சித்திகளின் அற்புதங்கள்  உனக்கானது,  அது உனக்கானது அல்லாவிட்டால் சித்திகள் அற்புதங்களை படைக்காது.

சிற்றின்பம்-பேறின்பம்.

ஒலியையும்,ஒளியையும் இழந்து பெருவது சிற்றின்பங்கள். ஒலியையும்,ஒளியையும் இழக்காமல் பெருவது பேறின்பம். அதாவது தொட்டு கெடுவதை விட, தொடாமல் தொடுவது தெய்வீகமாகும்.

அஞ்ஞானம்-மெய்ஞானம்

அஞ்ஞானம் எல்லாவற்றையும் இருகோணத்தில் பார்க்கும்.

மெய்ஞானம் எல்லாவற்றையும் ஒரே கோணத்தில் பார்க்கும்.

உலகியல்-அகவியல்.

உலகியல் பற்றுக்கு கனவுகளை நினைவாக்கி வாழ்க்கையை வளமாக்கி கொள்ளவேண்டும்.

 அகவியல் பற்றுக்கு பற்றற்ற பற்றில்  நினைவுகளை கனவாக்கி வாழ்க்கையை வளமாக்கி கொள்ளவேண்டும்

பற்றுக பற்றற்றான் பற்றினை;அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

அடக்கம்.

அடக்கம் என்பது ஒன்று பனிவைக் குறிக்கும்.மற்றொன்று இறந்த பின் உயிர் அடக்கம் ஆவது. மனமானது எல்லா ஆசைகளையும் பற்றற்ற பற்று நிலையில் வைத்து பக்குவம் அடையும் பிறவியில் உயிராணது உள்ளுக்குள் அடங்கி அமரராகும் நிலையே அடக்கம் என்ற சமாதி நிலையாகும். உயிர் உள்ளே அடங்காவிட்டால்  இப்பிறவியில் நிறைவேறாத ஆசைகளை சுமந்து சென்று மீண்டும் வெளிவந்து பிறவி[ஆரிருள்] எடுத்துவிடும்.[உய்த்துவிடும்]

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

ஓம்நமசிவாய

-மண்-மஞ்சள்-உடல்.  ம-நீர்-வெள்ளை.  சி-நெருப்பு-சிவப்பு.வா-காற்று-பச்சை.ய-ஆகாயம்-மனம்-நீலம்.

முயற்சியற்ற முயற்சி.

முயற்சியற்ற முயற்சி என்பது ஒரு செயல். அது நம் செயல் அன்று. அது பரமாத்மாவின் செயல். எனவே முயற்சியற்ற முயற்சியால் சதா சிவமான  சுவாசத்தை துணைகொண்டு, நம் சிறு முயற்சியால் வாசித்து வலம் வந்தால் போதும்  எல்லாம் செயல். கூடும்.

மெய்ஞான உபதேசம்

 பார்த்த்தும், கேட்டதும், படித்ததும் பயன் தராது என்ற ஞானம் உதயமாகாத வரையில் உண்மையை உணரமுடியாது. அந்த நேரம் வரும் தருவாயில் சத்குரு சொல்லாமல் சொல்லும்  வேதங்களை கடந்த மெய்பொருளின் ரகசியத்தை அவருடைய அசைவிலிருந்து அவரிடம் உள்ள அசையா பொருளின் ரகசியத்தை, மானசீகமாக உபதேசித்து நல்ல வித்துகளை உருவாக்கும் கருணையின் வடிவமாவார்.

குரு பக்தி

குருவேறு, சிவன்வேறு என்றுயார் நினைக்கிறார்களோ அவர்கள் சண்டாளனாகிறார்கள் என்று குரு கீதையில் சொல்லப்படுகிறது. மாத ,பிதா, குரு, இறைவன். அதாவது தாய் தந்தையை காட்டுகிறார். குரு இறைவனை காண்பித்து ஜீவாத்மாவை பரமாத்வோடு இரண்டரகலக்கும் முக்தி நிலையின் ரகசியத்தை வழங்கும் ஒரு போதிமரமாவார். எனவே ரிஷி மூலம்,நதி மூலம் பாராமல் கண்களில் கண்ணீர் மல்க ஆத்மார்த்தமான பனிவே குருவுக்கு செலுத்தும் காணிக்கையாகும்.

தெய்வங்கள்

மனிதனால் உருவாக்கப்பட்டு கண்ணால் பார்க்க்கூடியவைகள் அனைத்தும் அரூப கடவுளின் தத்துவங்களை விளக்கும் தெய்வங்களே.

 சலிப்படையும் மனிதனுக்கு ஒரே தெய்வத்தைப் படைத்தால் சலிப்படைந்து விடுவான் என்ற காரணத்தால் பல தெய்வங்கள படைக்க நேரிட்டது. அதேபோன்று பல வாறான பழங்களையும், காய்கறிகளையும் படைக்கபட்டிருப்பதற்க்கு காரணம். மனிதன் சலிப்படைய கூடாது என்பதற்காகதான்.

கடவுள்

சுவாசமே முதன் முதலில் தோன்றி ,இருந்து ,மறையும் கடவுளாகும். இவையே ஒலியாலும் ,ஒளியாலும்,[கேட்பதாலும்,பார்ப்பதாலும்] மனம் விரும்புகின்ற விருப்பு,வெறுப்புகளின் வினைகளுக்கு தகுந்தவாரு கனவுகளின் நினைவுகளுக்கு ஏற்ப,  நினைவுகளின் கனவுகளுக்கு ஏற்ப  வாழ்க்கையின் முடிவு அமைகிறது,

 நம்மால் முடியாத பட்சத்தில் எது ஒன்று காப்பாற்றி அருளசெய்கிறதோ அதுவே சட்சாத் கடவுள். எனவே கண்ணால் பார்க்க முடியாத அரூபமான காற்றாகிய மனமே கதாநாயக கடவுள். சுவாச இயக்கத்திற்கு ஏற்ப ஒலி, ஒளியின் புலன்கள் இயங்கி அவரவர் வெளிநோக்கும், உள்நோக்கும்  வினைப் பயன்களுக்கு ஏற்ப  வழி நடத்தும் ஏக இறைவனாகும்.

சுவாசமே மனம்

மனம், அறிவு, புத்தி எல்லாம் ஒன்றேதான் அவைகள் இடம் பொருள் ஏவலுக்கு தக்கவாறு அவைகள் மாறுபட்டு செயல்படும்.  மனமே சுவாசம். சுவாச காற்றின் மூலமாகதான் வாசனைகளை அறிகிறோம், ,கற்றின் அலைவரிசைகள் மூலம் கேட்கும் திறன், மற்றும் அனைத்தும் மனதிற்கு வந்தடைகின்றன.

மனம் மாறிக்கொண்டே இருக்கும் மனிதனின் மனம் ஒவ்வொரு செயலின் போதும் சுவாசம் மாறிக்கொண்டே இருப்பதை பார்க்கலாம். ஆகையால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் நடை, உடை,பாவனைகள் வித்தியாசம் உள்ளதாக காணப்படுகின்றது. ஆனால் மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகளின் மாறுபாடற்ற மனதின் காரணமாக அவற்றின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாக இருப்பதை காணலாம்.  எனவே மாறாத மனதைப்படைப்போம்.

ஒதாக்கல்வி

 ஓதாக்கல்வியின் ரகசியம் என்பது அதற்கு எழுத்துவடிவமோ,சொல்வடிவமோ கிடையாது. அது ஆசான் அளிக்கும் தீட்சையின் பயிற்சியின்போது இறைவனால் உங்களுக்குள்ளே தொட்டு காட்டும் சொல்லமுடியாத  பேறானந்தத்தில் இறைவனோடு இரண்டர கலக்கும் ஓர் அனுபவ உணர்வாகும்.

[தீட்சை என்றால் ரகசியம், யுக்தி, சூட்சுமம்,டெக்னிக்,நுணுக்கம்,]

 

மரணமில்லா  பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர் பொய் புகலேன்,     புனைந்துரையேன் சத்தியம் சொல்கின்றேன் என்ற வள்ளலார் வாக்குக்கிணங்க  மனம்,வாக்கு,காயம் எப்பொழுதெல்லாம் பலவீனமடைகிறதோ அப்பொழுதே மரணமடைகின்றன.

 

இந்த தலை சிறந்த யோகமானது புதுமையானது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, சித்தர்களுக்கும், புத்தர், ஓஷோ ஞானிகளுக்கும், இன்றும்  வாழ்ந்து கொண்டிருக்கின்ற யோகிகளுக்கும் கைவல்யமான யோகமாகும்.

நீங்கள் எத்தனையோ ஆன்மீக பயிற்சி வகுப்புகளுக்கு பல ஆண்டுகளாக சென்றிருப்பீர்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் மனம் அடங்கி செம்மையாகியிருக்கிறதா?,நோய்கள் நீங்கியிருக்கிறதா? நம்பிக்கையோடு வந்து இப்பயிற்சியை அலட்சிபடுத்தாமல் செய்தால் நோயற்ற, குறைவற்ற செல்வத்தோடு வாழ்ந்திடலாம்.

 

ஓம்.நமசிவாய.                                              ஓம்  நமோ.நாராயனாய

                         இறையருள் ஸ்ரீசந்திரசேகரர்.   srichandrasekarar@yahoo.com

 

 

.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>