/* ]]> */
Aug 072011
 

1. நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட இருக்கும் திமுக லிஸ்ட்டில், ராஜா சங்கர் என்பவரின் பெயர் இருக்கிறதாம். இந்த ராஜா சங்கர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி.எஸ் வீட்டில் வேலை பார்த்தவர். பிறகு தனியாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். பின்னர் ஸ்டாலினிடம் நெருங்கினார். மிகவும் க்ளோஸாக ஆகி, ஸ்டாலின் குடும்பத்தில் எடுக்கும் எந்த முடிவும் இவர் இல்லாமல் எடுக்கப்பட்டதில்லை என்னும் அளவுக்கு பவர்ஃபுல்லானார். ஸ்டாலின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவருடைய கார் தொடங்கி, ஹேர் ஸ்டைல் வரை  இவர்,முடிவெடுப்பாராம். அதுவரை ஸ்டாலினின் நிழலாக இருந்தவர், 1996ல் மாநகராட்சி மேயராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது மாநகராட்சி அட்வைஸராக நியமிக்கப்பட்டார். மாநகராட்சி ஒப்பந்தங்கள்  இவர் ஒப்புதலோடுதான் நடக்கும். எல்லாகோப்புகளும் இவர் பார்வைக்கு வந்துதான் போகும். ஏற்கெனவே எஸ்.டி.எஸ்ஸிடம் இருந்த காரணத்தால், நிறைய அதிமுக நண்பர்களும் உண்டு. அவர்களும் இவரிடம் காரியம் சாத்த்துக்கொண்டார்கள். இவரது தலைமையில்தான் ‘அன்பகம் ‘ சமீபத்தில் இடித்துக் கட்டப்பட்டது. 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, மேம்பால ஊழல் வழக்கில் இவரைத் தேடியபோது தலைமறைவானார். கருணாநிதி, ஸ்டாலின், கோ.சி. மணி என்று பெரிய தலைகள் இந்த வழக்கில் சிக்கியபோதும், இவர் ம்ட்டும் சில அதிமுகவினரின் துணையோடு தப்பித்தார். அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டில்தான் அடைக்கலமாகி இருந்தாராம். 2006ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் மறுபடியும் பவர்ஃபுல்லானார். துணை முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்களில் எல்லாம் துணையாகப் போனார். கான்ட்ராக்ட் விஷயத்தில் ராஜா சங்கருக்கு திருப்தி இல்லாததால்தான், சீனா, சிங்கப்பூர் நதிகளைப்போல கூவம் நதியில் மாற்றம் கொண்டுவரும் திட்டம்  அமுலுக்கு வராமல் போனது. இவரது அதிருப்தி காரணமாகத்தான் அனைவரும் எதிர்நோக்கிய அத் திட்டம்  கிடப்பில் போடப்பட்டது, என்கிறார்கள். சிலநாட்களுக்கு முன் கருணாநிதியைடம் பேசிய அழகிரி, இந்த ராஜா சங்கர் மீது கோபப்பட்டாராம். ‘ எல்லத்தையும் அந்த ஆள்தான் கொண்டுபோயிட்டார்.’ என்று அழகிரி கொதித்துப்போனதாக சொல்கிறார்கள். இந்த தகவல் போலீஸ் வட்டாரத்துக்குப் போனதால், ராஜா சங்கரின் முதலீடுகள், வெளிநாட்டுப் பயணங்கள், ஆந்திராவில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் , சினிமாப் படம் எடுத்தது என எல்லாவற்றையும் தோண்டுகிறார்கள். பொட்டு சுரேஷை வைத்து அழகிரிக்கு தலைவலி கொடுத்ததுபோல ராஜா சங்கரை வைத்து ஸ்டாலினுக்கு டார்ச்சர் கொடுக்கலாம் என்று எதிர்பார்ர்கிரார்கள்.

2. அழகிரியின் அஸிஸ்டென்டான எஸ்ஸார் கோபி  அழகிரிக்கு எழுதியதாக ஒரு பரபரப்புக் கடிதம் வெளியான அந்த ஜூலை 29ல் இவர் கோர்ட்டில் சரணடைந்தர். இவரை ‘மர்மக் கொலை மன்னன் ‘ என்பார்களாம்.   போலீஸ் ரெக்கார்டுகளின்படி, அரசியல் கொலைகளோடு  கூலிப்படைகளின் மூலம் பல  கொடூரக் கொலைகளும் செய்துள்ளார்  என்கிறார்கள். கூலிப் படையினர் தலையிலும் முகத்திலும் வெட்டிவிட்டு குற்றுயிராகக் கிடக்கும் வெட்டுண்டவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்று ஆக்ஸிடன்ட் போலக் காட்டுவார்களாம்.
கடந்த 2009 ஏப்ரலில் அவனியாபுரம் அருகே சாலையில் பாண்டியராஜன் என்ற வாலிபர், முகம் நசுங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக போலீஸார் வழக்கு பதிவு  செய்தனர். ஆனால், ‘ நடந்தது திட்டமிட்ட கொலை. எஸ்ஸார் கோபி உள்ளிட்டவர்களைக் கைது செய்யவேண்டும், என அப்போது பாண்டியராஜனின் மனைவி பாண்டீஸ்வரி, தாயார் லட்சுமி ஆகியோர் போலீஸில் முறையிட்டனர். ஆளும்  கட்சியின் முக்கிய புள்ளிக்கு வேண்டப்பட்டவர்  என்பதால், நடவடிக்கை எடுக்கப் பயந்தது போலீஸ்.
இந்த நிலையில் இவரை வளைக்க இந்த பாண்டியராஜன்  கேஸைத்தான் கையிலெடுக்கிறது போலீஸ். பாண்டியராஜன் சி.பி.எம்.வேட்பாளர் மோகனுக்கு வில்லாபுரம் பகுதியில் தேர்தல் அலுவலகத்துக்கு இடம் கொடுத்ததால்,  எஸ்ஸார் வகையறா மிரட்டியும் பணியாதலால், அவரைக் கொலை செய்து விட்டதாக சொல்கிறார்கள். அந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இந்த எஸ்ஸாரின் பெயரைத்தான் சேர்த்திருக்கிறார்களாம்.

மேலும், அருப்புக்கோட்டை மதிமுக பிரமுகர் முருகன் கொலையை உள்ளூர் போலீஸார் விபத்து என்று முடிக்கவிருந்த நேரத்தில்,வழக்கு சி.பி.சி.ஐ.டி. கைக்குப் போனது. விசாரணையில் இந்த குரூப்பின் கைங்கர்யம்தான் இது எனக் கண்டுபிடித்து விட்டார்களாம். மதுரை போலீஸ் நடவடிக்கையின் இப்போதைய ஹாட், ‘மர்மக் கொலை மன்னன்’  எஸ்ஸார் கோபி கைது!-என்பதே.
3. தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுப. இளவரசனும் இப்போது கைது வலையில் சிக்கியுள்ளார். இவர் திமுகவின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர். தமிழர் விடுதலைப்படை என்ற அடையாளத்தோடு அறிமுகமானவர் சுப. இளவரசன்.  பா.ம.க.வின் காடுவெட்டிக் குருவுக்கும் சுப இளவரனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். குருவுக்கு பதிலடி கொடுக்கவே, சுப இளவரசனை கொம்பு சீவி வளர்த்து வந்தது திமுக. தற்போதுள்ள பிரச்சினை என்னவென்றால், 2010ல்,  ஓசூரில் ஜாய்கிரண், தனது வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த காரைக் காணவில்லை என போலீஸில் புகார் கொடுத்தார்.  அந்தக் கார் சென்னை அரும்பாக்கத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதைச் சோதனை செய்தபோது , தமிழர் நீதிக் கட்சியின் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ராம்குமார், ‘எங்க தலைவர்கிட்ட இருந்துதான் இந்தக் காரை வாங்கினேன்’  என்று சொன்னார். சுப. இளவரசன் திருட்டுக் காரைப் பயன்படுத்தி வந்தது அப்போது தெரிய வந்தது. கார் திருடும் கும்பலைச் சேர்ந்த மூவர் உட்பட சுப இளவரசனையும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்த்து இருக்கிறோம்’ என்றார்கள். ஆனால், சுப. இளவரசனை நன்கு அறிந்தவர்கள் ‘சுப. இளவரசன் ஜெயிலில் இருந்தபோது ,கார் திட்டு ஸ்பெஷலிஸ்ட் சேட்டா என்பவரின் நட்பு கிடைத்ததால், வெளியில் வந்தபிறகு, சேட்டாவை தனது பாடி கார்டாக வைத்துக்கொண்டார். அந்த சேட்டா தன்னுடைய பழைய கார் திருட்டைத் தொடர்ந்திருக்கிறான். அவன் திருடும் கார்களை சுப.தான்  தன் கட்சிக்காரர்கள் மூலமாக விற்றுக் கொடுத்திருக்கிறார்.  இப்போது கார் திருட்டு ஒன்றில் சேட்டா மாட்ட, போலீஸிடம் சுப. இளவரசன் பெயரைச் சொல்லிவிட்டானாம். இப்போது சுப.வின் பழைய ஃபைல்களையும் தூசுதட்ட ஆரம்பித்துஇருக்கிறதாம் காவல்துறை.

Tags : MK Stalin being arrested by Tamilnadu Government and ADMK latest political move to corner Stalin

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>