/* ]]> */
Jul 282011
 

விஜய் கையெழுத்துப் பூசணிக்காயை எஸ்.ஏ.சி

மறைக்கிறாரா?

 

நடிகர் விஜயை தாங்கள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க நடக்கும் கையெழுத்து வேட்டையில் கையெழுத்துப் போட சந்தித்து அவர் கையெழுத்து கோரியதாகவும் ஆனால் விஜய் கையெழுத்து போட மறுத்ததாகவும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சொல்லியிருக்கிறது. இது சினிமா வட்டாரங்களிலும் தமிழார்வலர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதையடுத்து  தமிழுணர்வு உள்ளவர்கள் சிலர் நடிகர் விஜயை தாக்கி அறிக்கை விட்ட வண்ணம் உள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் சார்பில் ராஜபக்ஷவை இனப்படுகொலை குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் கையெழுத்து வேட்டையின்போதுதான், விஜய் கையெழுத்து போட மறுத்திருக்கிறார். அவர்கள் அவரை நண்பன் பட ஷூட்டிங்கின் போது சந்தித்ததாகவும் ஆனால் விஜய் கயெழுத்திட மறுத்ததாகவும் சொல்கிறார்கள்.

விஜய் கையெழுத்து போட மறுத்ததற்கு காரணம், அவரது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அப்படியொரு கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிட்டிருந்ததுதான் என்று புதிய தகவல்களை பரப்பி வந்தார்கள் சில விஜய் ஆதரவாளர்கள்.

ஆனால் இப்போது விஜய் தரப்பிலிருந்து அவர் கையெழுத்து போட மறுத்ததற்கு புது விளக்கம் கொடுக்கப்படுகிறது. வழக்கமாய் பேசும் விஜயின் ஸ்போக்ஸ்பெர்சன் அவர் தந்தை எஸ்.ஏ.சி தான் இந்த முறையும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் யாரும் விஜயை கையெழுத்துக் கேட்டு சந்திக்கவேயில்லை என ஒரே போடாய் போட்டிருக்கிறார்.

இதற்கிடையே நேற்று நண்பன் பட ஷூட்டிங்க் நடந்த அரசு கல்லூரியில் சில “ரசிகர்கள்” உள்புகுந்து ரகளை செய்ததில் நேற்று படப்பிடிப்பே ரத்தானது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>