/* ]]> */
Sep 242011
 

[stextbox id="info"]

இது நமது வாசகி மாதங்கி நமக்கு மெயில் மூலம் அனுப்பி வைத்த பதிவு

[/stextbox]

ஸ்ரீ க்ருஷ்ண உற்சவம் – புகைப்படங்கள் -

நிகழ்வுகள் – மாதங்கி

ஸ்ரீக்ருஷ்ணா உற்சவம்

இந்து கலாச்சாரத்தில் உத்சவங்களும், திருவிழாக்கழும் காலம் காலமாக நம்முடன் ஊன்றி வருகின்றன. அவைகள் நம்மிடையே ஒரு அன்னியோன்யத்தையும், சகோதர பாவத்தையும், பக்தியையும் உண்டு பண்ணுகிறது. மந்திரஉச்சாடனங்களாலும்,பஜனைகளாலும் நம்மை செம்மை ப்டுத்துகின்றன.சந்தோஷங்களின் தருணங்களே உத்சவத்தின் மறு பொருள். நம் சந்தோஷத்தின் சாரல்களாய் நடந்து முடிந்த ஸ்ரீ கிருஷ்ண உத்சவத்தை ஸ்ரீ சத்குரு ஸ்வாமி அவர்களின் ஆசியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உன்னி க்ருஷ்ணன்

ஸ்ரீ கிருஷ்ண உத்சவம் பூஜ்ய ஸ்ரீ சத்குரு ஞானானந்த சரஸ்வதி ஸ்வாமிஅவர்களின் அருளாசியுடன் ஸ்ரீ ஞான அத்வைத பீடமும், ஸ்ரீ விஷ்ணுமோஹன் ஃபௌண்டேஷனும் இணைந்து சென்னை மயிலை பாரதீய வித்யா பவனிலும், ஸ்ரீ ஞான அத்வைத பீடத்திலும் 14நான்கு நாட்களுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை ஸ்ரீ கிருஷ்ண உத்சவம் மிக விமரிசையக நடநதேறியது. ஆகஸ்ட் 9ம் தேதி காலை நியூ கிரி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான அத்வைத பீடத்தில் பூஜ்ய ஸ்ரீ சத்குரு ஸ்வாமி அவர்களின் தெய்வீக திரு கரத்தால் கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். அன்று மாலை 5மணிக்கு மைலாபூரில் இருக்கும் பாரதீய வித்யா பவனில் உயர்மன்ற நீதியரசர் ஸ்ரீ ராம சுப்ரமணியன் மற்றும் சென்னை மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ டி.ர். மணி அவர்களும் விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். குருபாய் ஸ்ரீ ஸ்ரீ ஹரிபிரசாத் அவரகள் விழாவின் முன்னுறையில் கண்ணனின் மேன்மையை சொல்வதே இந்த விழாவின் நோக்கம் என்றும், கிருஷ்ணனின் லீ லைகளை உணர்ந்தால் பரப்பிரம்மத்தை உணர்ந்து கொள்ளலாம் என்று தன் உரையில் கூறினார்.

சுதா ரகுநாரதன்

பிறகு திரு O.S. அருண் அவர்கள் பல கிருஷ்ண பஜன் மற்றும் பாடல்களை பாடி அனைவரின் செவியையும் குளிரச்செய்தார்.உத்சவதின் 2ம் நாள் அன்று டாக்டர். மாதங்கி ராமக்கிருஷ்ண்ன் தன் குழுவினறுடன் பல கிருஷ்ண பக்தி பாடல்களையும் அதைத் தொடர்ந்து ஸ்ரீ கோதா சாஸ்திரி அவர்களின் “கிருஷ்ண வைபவம்” என்ற தலைப்பில் உரையாடினார் பிறகு அதைத் தோடர்ந்து T.V.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கிருஷ்ண பக்தி பாடல்களால் அரங்கம் பக்தியால் நனைந்தது.
3ம் நாள் மாலை உமாபிரபாகர்(மாயவரம் சகோதரிகள்) மற்றும் K.P.நந்தினி அவர்கள் பக்தி பாடல்கள் பாடினர்கள்.பிறகு கேரளத்தின் பாரம்பரிய நடனமான கதகளி நாட்டிய நாடகம் ”க்ருஷ்ணனின் தூது” என்ற தலைப்பில் அரங்கேறியது. கௌரவர்களின் கொடூரத்தையும், கிருஷ்ணனின் தூதின் மேன்மையும் மிகவும் அழகாக நாட்டியமாடி அனைவரின் மனதை கொள்ளைக் கொண்டது.
 கிருஷ்ண உத்சவதின் 4,5,6,7ம் நாட்களில் மாலை ஸ்ரீ கிருஷ்ண பாலேஷ் குழுவினரும், P.உன்னிகிருஷ்ணன், சம்ப கல்கூரா, பிரின்ஸ் ராமவர்மா,ஷொபா உபாத்யாயா, அனுராதா ஸ்ரீ ராம், ஸ்ரீராம் பரசுராம், ஜெயஸ்ரீவிஸ்வநாதன்,விஜய்சிவா ஆகியோர்கள் பக்தி பாடல்களை பாடி ஸ்ரீ கிருஷ்ண உத்சவதிற்க்கு மெருகு சேர்த்தனர். ஸ்ரீ வேணுராஜநாராயணன் அவர்களின்” ஓர் இரவில்” என்ற தலைப்பில் கிருஷ்ணரின் பிறப்பை மிக அழகாக உரையாற்றினார்.

உற்சவம்

 8ம் நாள் உத்சவத்தில் கமலா ராமசாமி கச்சேரியை தொடர்ந்து, சட்டநாத பாகவதரின் நாமசங்கீர்தனம் அரங்கேறியது. இசையரசி சுதாரகுநாதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் கிருஷ்ண கானங்களைப் பாடி அரங்கத்தை தன் வசப்படுத்திக்கொண்டார். ஸ்ரீ சத்குரு சுவாமி அவர்கள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது இயற்றிய “நந்தகோப” என்ற பாடலை பாடியது அவரது கச்சேரியில் மகுடம் வைத்தது போல் இருந்தது.
 9ம் நாள் மாலை உ.வே. தாமல் ராமகிருஷ்ணன் அவர்கள் நாராயணீய சாரம் எனற தலைப்பில் நாராயணீயற்றை பற்றியும், பக்திமானான நாராயண பட்டத்திரியின் பக்தியையும், வாத்சல்யமான குருவாயூரப்பனின் மகிமையை ப்ற்றியும் தன் உரையில் கூறினார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ கலா பரத் அவர்களின் நாட்டிய குழுவினறோடு மாதுரிய லஹரி என்ற தலைப்பில் கிருஷ்ணனின் லீலைகளை நாட்டிய நாடகத்தை மிக அழகாகவும், அபிநயங்களுடனும், நவரசங்கள் ததும்ப நாட்டிய மாடி அரங்கத்தில் உள்ளோரை கவர்ந்தார்.


  கிருஷ்ண உத்சவத்தின் இறுதி நாளான ஆகஸ்ட் 21ம் நாள் மாலை அருணாசாய்ராமின் “கிருஷ்ணனும் வெண்ணெய்யும்” என்ற தலைப்பில் அவருக்கே உரிய தெய்வீகக் குரலால் நம் ஆன்மாவையும், செவியையும் குளிரச் செய்து நம்மை வைகுண்டத்திற்கே அழைத்து சென்றுவிட்டார். ஸ்ரீ சத்குரு சுவாமி அவர்கள் அரங்கத்தில் குழுமியிறுந்தவர்களுக்கு நல்லாசி வழங்கினார்.கிருஷ்ண பக்த்தி முக்கியமானது என்றும், சரணாகதிவின் அவசியத்தையும் வலியுறித்தினார்
இறுதியாக குருபாய் ஸ்ரீ ஸ்ரீ ஹரிப்ரசாத் அவர்கள் தன் உரையில் கண்ணன் தெய்வமாக கொண்டாடப் பட்டலும் அவனை நம்மில் ஒருவனாகவே வாழ்ந்தான் என்றும் இந்த விழாவினால் வைகுணடத்தில் இருக்கும் கண்ணனை உலகத்தின் நன்மைக்காக பூலோகத்திற்க்கு அழைத்து வ்ருவதே நோக்கம் என்றார்.

உரையை தொடர்ந்து நீதியரசர் பி.என். கிருஷ்ணன் அவர்கள் தலமை தாங்கி கிருஷ்ணன் ஒருவரே ஜகத்குரு என்று வலியுறுத்தி உரையாடலை நிறைவு செய்தார்.

.
.குருபக்தியையும், கிருஷ்ணபக்தியின் மேன்மையையும் உணர்த்தவே உருவானது கிருஷ்ண உத்சவம் என்று குருபாய் ஸ்ரீ ஸ்ரீ ஹரிபிரசாத் அவர்கள் தன் உரையில் கூறினார்.
செவிக்குண வில்லாத போழ்து சிறிதுவ்யிற்றுக்கும் ஈயப்படும்.
என்ற வள்ளுவரின் வாக்குக்கிணங்க ஸ்ரீ ஞான அத்வைத பீடமும், ஸ்ரீ விஷ்ணுமோஹன்ஃபௌண்டேஷணும் இணைந்து நமக்காக மிக அற்புத்மான விருந்தை செவிக்கும், ஆன்மாவிர்க்கும் அளித்தார்கள். வறும் ஆண்டுகளில் இதைப்போல் பல பக்தி உத்சவ திருவிழாக்களால் நம் செவிகளுக்கும் ஆன்மாவிற்க்கும் விருநது தறுவார்கள் என்ற நம்பிக்கையுட்ன் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோமக.!!
தொடங்கும் இடத்தில் தான் முடிக்க வேண்டும் என்ற நியதிக்கேற்ப்ப ஆகஸ்ட் 22ம் தேதி நியு கிரி சாலையில் இருக்கும் ஸ்ரீ ஞான அத்வைத பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ண உத்சவம் கொடி இற்க்கத்துடன் இனிதே நிறைவேறியது.
ஸ்ரீ சத்குரு பரமானஸ்த்து!
மாதங்கி

[stextbox id="alert"]

நீங்களும் இது போன்று உங்கள் கட்டுரைகளை எங்களுக்கு  moonramkonam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்.
[/stextbox]
Tags : Article on Sri krishna Urchavam, Lord Sri Krishna, Carnatic singers unnikrishnan and sudha ragunathan concert,  ஸ்ரீ கிருஷ்ண உற்சவம், ஸ்ரீ கிருஷ்ணா, உற்சவம், உன்னி கிருஷ்ணன், சுதா ரகுநாதன்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>