கௌதம் மேனன் இயக்கிவரும் ‘ நீதானே என் பொன் வசந்தம் ‘படத்தில் உதவி இயக்குனர் வேலை கற்று வரும் சமீரா ரெட்டி , கௌதமின் விஜய்யை வைத்து இயக்கப்போகும் அடுத்த படத்தில் இரண்டில் ஒரு கதாநாயகி இடத்தைப் பிடிக்கும் திட்டத்தில் படபிடிப்பு முடிந்த பிறகும், கௌதம் ஏரியாவிலேயே டேரா போட்டிருக்கிறாராம். இயக்குநருக்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்கிறாராம் உதவி இயய்க்குநர் சமீரா…
எல்லா இரண்டாம் பாகமும் ‘ தல ‘க்குத்தானா? ‘ பில்லா2′ வில் டெல்லியைச் சேர்ந்த மாடல் அழகி ஹ்யூமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டு பின் நீக்கப்பட்டு விட்டார். அவருடைய இடத்தை பார்வதி ஓமனக்குட்டன் நாயர் பிடித்திருக்கிறார். இவர் உலக அழகிப் போட்டியில் ‘ ரன்னர் ‘ பட்டம் வென்ற கேரளத்து அழகி. அடுத்த ’2′ படம் என்ன? ‘ இந்தியன் பார்ட்2′ இதிலும் ‘ தல ‘யாம்.
’ அடடா என்ன அழகு ‘படத்தில் நடித்த நாயகி நிக்கோலுக்கு அதன்பிறகு வாய்ப்பில்லையாம். ‘ ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்திற்கு இரண்டாம் கதாநாயகியாக நடிக்கக் கூப்பிட்டபோது ஏகப்பட்ட கண்டிஷன் போட்டதில் கேட்டவர்கள் ஒதுங்கிவிட, இப்போது வலிய வந்து நடித்துக்கொண்டிருக்கிறாராம். கண்டிஷனெல்லாம் காற்றில் பறந்துடுச்சாம்.
முரணான படத்தில் ஆட்டோகிராஃபரும், காட்சி தரும் நடிகரும், இணைந்து நடித்தனர். ‘ படப்பிடிப்பு நாளில் ஆட்டோகிராஃபர் தன்னை தினமும் டீஸ் பன்ணியதோடு,,எனக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என செயல்பட்டுவந்தார். ‘ என தன் அதிருப்தியை இப்போது மீடியாக்களிடம் பேச்சுவாக்கில் சொல்ல ..ஆத்திரமான ஆட்டோகிராஃபர் ‘ தோற்றம் தரும் ‘ நடிகரை கடுமையாக கடிந்துகொண்டாராம்.
Tags : தமிழ் சினிமா லேட்டஸ்ட் கிசுகிசு சினிமா செய்திகள் திரைப்பட தகவல்கள் பட ரிலீஸ் செய்திகள் , சமீரா ரெட்டி, கௌதம் மேனன், முரண், சேரன், பிரசன்னா, நிகோல், அஜித், பில்லா 2 , பார்வதி ஓமனக்குட்டன், tamil actress, தமிழ் நடிகை, நடிகை கிசுகிசு, நடிகை, தல, இந்தியன் + அஜித், Ajith + Indian, sameera reddy + gautham menon, muran movie, muran, prasanna, cheran
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments