சிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 2 ]
By வை.. கோபாலகிருஷ்ணன்
=====================================
[சென்ற பதிவினில் கேட்ட கேள்விகளுக்கான சரியான விடைகள்]
கேள்வி எண் : 1 க்கு பதில்:
அந்தக்குழந்தை அந்தப்பெண்ணின் சொந்த தம்பி அல்லது தங்கை தான்.
[அந்தக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் 6 முதல் 12 குழந்தைகள் கூட பிறப்பதுண்டு.. மூத்த குழந்தைக்கும் கடைசி குழந்தைக்கும் 20 வயது வித்தியாசம் கூட இருக்கும். மூத்த பெண் குழந்தை, தனக்கு கீழ் பிறக்கும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு நிற்பது சர்வ சாதாரண விஷயம். இந்தக்காலம் போல அடுத்தடுத்து பிறந்த ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களால், இதற்கான விடையை கற்பனை செய்து பார்க்கவே கூட முடியாமல் இருக்கலாம்]
=========================================================
கேள்வி எண் : 2 க்கு பதில்:
4 தீக்குச்சிகளை இடது கையிலும், 5 தீக்குச்சிகளை வலது கையிலும் வைத்துக்கொள்ளவும்.
இடது கையில் உள்ளவற்றை வரிசையாக தரையில் 1 1 1 1 என்று நல்ல இடைவெளி கொடுத்து நிறுத்தி வைக்கவும்.
வலது கையில் உள்ள தீக்குச்சிகளில் ஒன்றை முதல் 1 க்கு மேல் படுக்க வைக்கவும். அந்த 1 இப்போது T ஆகிவிடும்.
அடுத்த 3 குச்சிகளை, அடுத்த இரண்டாவது 1 ஐ E ஆக்குவது போல வைத்து விடவும்.
மீதியுள்ள ஒரே தீக்குச்சியை 3 வது 1 இன் தலைப்பகுதியும், 4 வது 1 இன் அடிப்பகுதியும் தொடுமாறு இணைத்து விடவும். இப்போது 3 வது 1 மற்றும் 4 வது 1 இரண்டும் சேர்ந்து N என்ற ஆங்கில எழுத்தாகி விடும்.
நாலோடு ஐந்தை சேர்த்ததும் T E N வந்து விட்டதல்லவா!
TEN என்றால் பத்து தானே!!
=====================================================
கேள்வி எண் : 3 க்கு பதில்:
துண்டின் விலை ரூ. 105
கைக்குட்டை விலை ரூ 5
ஆக மொத்தம்: ரூ. 110
இரண்டுக்கும் வித்யாசம் 105 minus 5 = 100
=====================================================
கேள்வி எண் : 4 க்கு பதில்:
IT = அது BUT= ஆனால் WHAT= என்ன ?
தமிழும் ஆங்கிலமும் கலந்து
”இட்டது பட்டானால் வாட்டென்ன?”
என்று ஆகி நம்மை பாடாய்ப்படுத்தியுள்ளது.
====================================================
கேள்வி எண் : 5 க்கு விடை : 11 வாழைக்காய்கள்.
3/8 = 4 and 1/8 or 33/8
1 = ?
1 divided by 3/8 = 1 into 8/3 or 8/3
1 divided by 3/8 into 33/8 = 8/3 into 33/8 = 11
==============================================
கேள்வி எண் : 6 க்கு பதில்:
குண்டடி பட்ட பறவையைத்தவிர மீதியெல்லாம்
குண்டு சப்தத்தில் பயந்து போய் பறந்து போய் இருக்கும்.
==============================================
கேள்வி எண் : 7 க்கு பதில்:
காலை 7.15 க்கு 2 குழாய்களும் திறந்துவிடப்பட்டுள்ளதால்
அன்று இரவு மிகச்சரியாக 7.15 க்கு தொட்டி நிரம்பிவிடும்.
காலை 7.15 மணி முதல் இரவு 7.15 மணி வரை12 மணி நேரம்
இரு குழாய்களும் தொடர்ந்து வேலை செய்வதால், A குழாய்
மூலம் நியாயமாக 2 தொட்டிகள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
B குழாய் மூலம் அதே 12 மணி நேரத்தில் ஒரு தொட்டி நீர்
அகற்றப்பட்டிருக்கும். எனவே மிகச்சரியாக இரவு 7.15 மணிக்கு
மட்டும், தொட்டி நிரம்புவதைக்காண முடியும்.
==========================================================
கேள்வி எண் : 8 க்கு பதில்:
2 ஆண்கள், ஒவ்வொருவருக்கும் 3 இட்லி வீதம் = 6
30 பெண்கள், ஒவ்வொருவருக்கும் 2 இட்லி வீதம் = 60
68 குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் 1/2 இட்லி வீதம் = 34
2+30+68 = 100 பேர்கள்
6+60+34 = 100 இட்லிகள்
—————————————————————————–
இதே கணக்குக்கு மற்றொரு விடை:
5 ஆண்கள் + 25 பெண்கள் + 70 குழந்தைகள்
5*3 = 15 25*2= 50 70*1/2= 35
5+25+70 = 100 பேர்கள்
15+50+35 = 100 இட்லிகள்
—————————————————————————–
இதே கணக்குக்கு மற்றொரு விடை:
14 ஆண்கள் + 10 பெண்கள் + 76 குழந்தைகள்
14*3 = 42 10*2= 20 76*1/2= 38
14+10+76 = 100 பேர்கள்
42+20+38 = 100 இட்லிகள்
=================================================
கேள்வி எண் : 9 க்கு பதில்:
ORIGINALITY ஐத்தான் அவன் ஒரு ’ஜி’ + நாலு ’டி’ என்று ஏதோ
புரிந்துகொண்டு G T T T T என்று எழுதி அசத்தியுள்ளான்.
==========================================================
கேள்வி எண் : 10 க்கு பதில்:
வரை படத்தில்
WESTERN SIDE MANGO
வரையப்பட்டுள்ளதால்
அது வெஸ்ட் மாம்பலம் WEST MAMBALAM
[சென்னையில் உள்ள பிரபலமான இடமான மேற்கு மாம்பலம்]
ஆகத்தான் இருக்க வேண்டுமாம்.
==================================================
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments













Please comment with your real name using good manners.