/* ]]> */
Sep 302011
 

 

இன்றைய பாடல்: இதோ இதோ என் பல்லவிபடம்: சிகரம் பாடியது: எஸ். பி. பி ,சித்ரா

விருப்பப்பாடல்: ஷஹி, ப்ரியன் ..

 

கொள்ளை அழகு ராதாவும் நாட் சோ ஹாண்ட்ஸம் எஸ். பி. பி யும் குறும்பு, காதல் சேட்டைகள் என்று கேட்க மட்டுமல்லாமல் பார்க்கவும் அழகான பாடல்..இதோ இதோ…

இதோ இதோ என் பல்லவி

எப்போது கீதம் ஆகுமோ

இவன் உந்தன் சரணமென்றால்

அப்போது வேதம் ஆகுமோ

இதோ இதோ …

என் வானம் எங்கும் பௌர்ணமி

இது என்ன மாயமோ

என் காதலா உன் காதலால்

நான் காணும் கோலமோ

என் வாழ்க்கை என்னும் கோப்பையில்

இது என்ன பானமோ

பருகாமலே ருசி ஏறுதே

இது என்ன ஜாலமோ

பசி என்பதே ருசி அல்லவா

அது என்னை சேருமோ

இதோ இதோ..

அந்த வானம் தீர்ந்து போகலாம்

நம் வாழ்க்கை தீருமா

பருவங்களும் நிறம் மாறலாம்

நம் பாசம் மாறுமா

ஒரு பாடல் பாட வந்தவள்

உன் பாடல் ஆகிறேன்

விதி மாறலாம்

உன் பாடலில் ஸ்ருதி மாறக்கூடுமோ

நீ கீர்த்தனை

நான் பிரார்த்தனை

பொருந்தாமல் போகுமா

இதோ இதோ…

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>