ஷங்கர் இடியட் விஜய் சீரழிப்பவன் – பாரிவேந்தர்
- நெற்றிக்கண் பதிலடி
எஸ்.ஆர். எம். நிறுவனத்தின் தலைவரான திரு.பச்சமுத்து சமீபத்தில் ‘ திரைப்பட இயக்குனர் ஷங்கர் ஒரு இடியட் என்றும், சாலமன் பாப்பையா தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறவன் என்றும், நடிகர் விஜய் சமுதாயத்தைச் சீரழிக்கிறவன் என்றும் கூறியிருந்ததற்கு நெற்றிக்கண் வார இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. நெற்றிக்கண் வார இதழ் திரு பச்சமுத்துவுக்கு எதிராக வைத்த வாதங்கள் பின்வருமாறு :
தனக்குத் தானே ‘பாரி வேந்தர் ‘ என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டுள்ள பச்சமுத்து கார்ப்பொரேஷனுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்திருப்பது மட்டுமல்ல. அதைப்பற்றி புகார் கொடுத்த சுலோச்சனாவின் புகாரையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் என்கிறது நெற்றிக்கண் . தன்னுடைய எஸ்.ஆர்.எம் இல் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உயர்நிலையில் இருப்பதைப் பயன்படுத்தி அந்தப் புகாரை ஏதுமில்லாமல் செய்துவிட்டார். சுலோச்சனாவின் புகாரை செயலிழக்கச் செய்துவிட்டு தான் அபகரித்த நிலங்களின் விஷயம் வெளியே தெரியாமல் மறைத்துவிட்டார்.
இப்படியாகப் போகிறது நெற்றிக்கண் விமர்சனம். அப்படி இப்படி 3 இடியட்சில் விஜய்க்கு ஷங்கர் பாரிவேந்தன் என பெயர் வைத்தாலும் வைத்தார் பிரச்சினை முடியாது போலிருக்கிறது.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments