/* ]]> */
Oct 052011
 

கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி !

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம்

குரு”

நதிகளை வணங்குவதற்கான மந்திரத்தில் கங்கைக்குத்தான் முதலிடம்.கங்கை சொம்பு இல்லாத வீடே கிடையாது.புனிதமான குளியலுக்கு கங்கா ஸ்நானம் என்று பெயர்.புனிதத்தின் முக்கிய காரணம் அதன் தூய்மை தான்.காலம் காலமாககலசத்தில் வைத்திருந்தாலும் கெடாது.இது ஏதோ இந்து மதத்தினரின் நம்பிக்கை மட்டும் கிடையாது ,விஞ்ஞான பூர்வமான ஓர் உண்மையும் கூட.

லண்டனிலிருந்து கல்கத்தா வரை வரும் கப்பல்கள்,ஜிப்ரால்டர் போன்று ஏழு,எட்டு இடங்களில் குடிதண்ணீரை மாற்றிக்கொள்கின்றன.ஆனால்,கல்கத்தாவிலிருந்து லண்டன் திரும்பிச்செல்கையில் ஹூக்ளியில்[கங்கையின் கிளைநதி] பிடித்த குடி தண்ணீர் லண்டன் சென்ற பிறகும் கெடுவதில்லை.

 

இப்பேற்பட்ட கங்கைநதியின் புனிதத்தை காக்கவும்,கும்ப் [கங்கையில்]என்ற இடத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் நடைபெற்று வரும் சுரங்கப்பணிகள் தடைசெய்யப் படவேண்டும் என்றும்,உண்ணாவிரதம் இருந்து ,உயிர் துறந்தார் சுவாமி நிகமானந்தா.இந்துக்கள் அனைவரும் தங்கள் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட வேண்டும் என்று விரும்புவர்.மேலும் முக்தி பெற்ற சாதுக்கள் அனைவரும் கங்கையில் உயிரை விட பெரிதும் விரும்புவர்.ஆனால் சுவாமி நிகமானந்தா மட்டும் தான் கங்கைக்காக உயிரை விட்டார்.இவரின் போராட்டம் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.இந்தியர்களின் மனங்களில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.சரி கங்கை நதியின் தூய்மைக்கு வருவோம்.

கங்கையின் தூய்மை கெட்டுவிட்டது என்றும்,அதில் எரிக்கப்பட்ட,எரிக்கப்படாத பிணங்கள் வீசப்படுவதால் தான் கங்கை மாசுபட்டுவிட்டது என்கின்றனர்.உண்மை அதுவல்ல.பலநூறு ஆண்டுகளாக கங்கையில் பிணங்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றன.ஆனால் ஆற்றில் உள்ள நுண்ணூயிர்களும்,மீன்களும் அப்பிணங்களைத்தின்று செரித்து,கங்கையை ,புனித கங்கையாக்கிக் கொண்டிருந்தன..மேலும் கங்கை நீர் கெடாமல் இருப்பதற்கு காரணம் ,இந்நீரில் உள்ள மிகையான ஆக்ஸிஜன்,கணிமம்,மற்றும் நுண்ணுயிர்கள்.இன்று கங்கையில் அந்த மீன்களும் ,நுண்ணுயிர்களும் குறைந்து விட்டது.

காரணம்…..,ரிஷிகேஷ் முதல் பிரையாக் வரை இடைப்பட்ட பகுதியில் 146 ஆலைகளின் கழிவுகள் கங்கையில் கலக்கின்றன.வழியில் 1.3 பில்லியன் லிட்டர் சாக்கடை கங்கையில் கலக்கிறது.கங்கையில் கலக்கப்படும் ரசாயன கலவைகளால் இதில் உள்ள நுண்ணுயிர்கள் குறைந்து கொண்டு வருகின்றன.இத்தனை மாசுகளையும் மீறி கங்கை இன்னும் புனிதமாக தான் இருக்கிறது.இப்போது கூட கங்கை நீரில் மற்ற நதிகளில் உள்ளதை விட ஆக்ஸிஜன் கூடுதலாகத்தான் இருக்கிறது.

 

ரசாயன கழிவுகள்,மற்றும் சாக்கடைகளிலிருந்து கங்கையை காப்பதற்காகவும்,நம் எதிர்கால் சந்ததியினருக்கு புனிதமான கங்கையை விட்டுச் செல்லவும்,நாளைய தலைமுறையினருக்கு நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்,உண்ணாவிரதம் இருந்து தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார் நிகமானந்தா.இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை

ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜன்லோக்பால் சட்டம் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும் என்றுஅன்னா ஹஜாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டமும்,வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டுமென்று பாபா ராம்தேவ் நடத்திய போராட்டமும் இந்திய மக்களுக்கு தெரிந்த அளவு சுவாமி நிகமானந்தா நடத்திய போராட்டம் மக்களை சென்றடையவில்லை.

கங்கை வற்றினால் நமது நா வறண்டுவிடும் என்கிற உண்மையை புரிந்து கொண்டேமேயானால்,நிகமானந்தாவின் தியாகம் நமக்கு புரியும். 

நாம் அனைவரும் நம் ஊரில் உள்ள ஒரு நீர்நிலையையாவது மாசுபடுவதில் இருந்து காப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.இது தான் நிகமானந்தாவுக்கு நாம் செய்யக் கூடிய அஞ்சலி.

diet-b…

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>