சட்டசபையில் விஜய்காந்த ஜெயலலிதா ஆக்ரோஷ
மோதல்
விஜய்காந்த் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டார்கள். அப்போது விஜய்காந்த் அதிமுகவினர் பார்த்து அதிரடியாக உதட்டை மடித்து கை நீட்டி எச்சரிக்கை விடுத்தார்.
நேற்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் விஜய்காந்தும் ஜெயலலிதாவும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். ஜெயலலிதா விஜய்காந்தைப் பார்த்து
“சங்கரங்கோயிலில் தனித்துப் போட்டியிட விஜய்காந்தின் தேமுதிக கட்சிக்கு திராணி இருக்கிறதா ?” என சவால் விட்டார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய விஜய்காந்த்
“திமுக ஆட்சியில் நீங்கள் எத்தனை இடைத்தேர்தல்களில் ஜெயித்தீர்கள் ? இதுவும் அது போலத்தான். நீங்கள் ஆட்சியில் இருக்கையில் நீங்கள் தான் ஜெயிப்பீர்கள் !” என சொன்னார்.
அதற்கு முதல்வர் பதிலளிக்கையில்
“மாண்புமிகு எத்ரிகட்சி தலைவர் இப்போதே தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டார்”
என சொன்னார்.
அதற்கு விஜய்காந்த் பதிலளிக்க முறபடுகையில் சபாநாயகர் விடாமல் குறுக்கிட்டார். அமைச்சர் பேசட்டும் என சொன்னார். விஜய்காந்த் தான் பேசி முடித்த பிறகு அமைச்சர் பேசலாம் என சொல்லி எவ்வளவோ கேட்டும் சபாநாயகர் விடாததால் விஜய்காந்த் கத்த ஆரம்பித்தார்.
அதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள்
“கை நீட்டி பேசாத ! இது சினிமா இல்ல !”
என குரல் எழுப்ப பதிலுக்கு தேமுதிகவினர் குரல் எழுப்ப
விஜய்காந்த் உணர்ச்சி வசப்பட்டு உதட்டு மடித்து அதிமுகவினரை எச்சரித்தார்.
பின்னர் தேமுதிகவினர் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் பேசிய ஜெயலலிதா
“தகுதி இல்லாதவர்களுக்கு பதவி கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை எதிர்கட்சி தலைவரின் அருவருக்கத்தக்க நடவடிக்கை காட்டியது ” என சொன்னார்.
விஜய்காந்த் வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம்,
“தேமுதிக பேச சட்டசபையில் சுதந்திரம் இல்லை” என சொன்னார்.
இந்த மோதலை வீடியோ வடிவில் பார்க்க
விஜய்காந்த் ஜெயலலிதா சட்டசபை மோதல் வீடியோ
Vijaykanth Jayalalitha Sattasabai Assembly fight Video




Salute to Captain.
Salute to Captain.