
சசிகலா ஜெயலலிதா கோர்ட் கேஸ்
இந்த மாதம் 30-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு கோர்ட்டில் விசாரணைக்கு வரும். தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று மனுச் செய்த சசிகலாவின் கோரிக்கை சிறப்பு கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டதால், கர்னாடகா உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்த சசிகலா, தீர்ப்பு பாதகமாக வந்தால், சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகலாம். ஆனால், இப்படிச் செய்வதால், கேஸ் இழுத்தடிக்கப்படும். அது ஜெயலலிதாவுக்குத்தான் சாதகமாகும். இதற்கு மாறாக “ எங்களுக்கு ஆங்கில அறிவு குறைவானதால், நீட்டிய இடங்களிலெல்லாம் கையெழுத்துப் போட்டோம். எங்களுக்கு வேறெதுவும் தெரியாது” என்று சொல்லிவிட்டால், கேஸ் ஜெயலலிதாவுக்கு சிக்கலாகும். ஆகட்டுமே! ஜெயலலிதாவுக்கு உதவவேண்டிய அவசியம் என்ன? “ என்று நினைக்கிறார்களாம். இந்த ரீதியில், சசிகலா தரப்பு வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் கோபத்துடன் உரத்துப் பேசிக்கொண்டிருப்பது, ஜெ.வின் காதுகளுக்கும் போனது. 30-ம் தேதிக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது ஜெயலலிதாவின் எண்ணமாக இருக்கலாம்.








சமீபத்திய பின்னூட்டங்கள்