/* ]]> */
Jan 222012
 

சசிகலா கைது? என்ன நடக்கிறது

நடராஜன் சசிகாலாவிற்கு ?

 

சசிகலா கைது?

சசிகலா கைது?

சசிகலாவும் நடராஜனும்

 

1.  சசிகலா

போயஸ் கார்டனிலிருந்து வெளியேறியது  முதல், சசிகலா  இளவரசியின் மகள் ப்ரியாவின் வீட்டில்தான் தங்கியிருக்கிறார். இந்த வீட்டை கொஞ்ச தூரத்திலிருந்து மஃடியில் இருக்கும் உளவுத்துறைப் போலீஸார் கண்காணிக்கிறார்கள். இவர்கள் முக்கியமானவர்களைத் தவிர வேறு யாரையும் வீட்டுக்குள் போக அனுமதிப்பதில்லை. மேலும் வீட்டுக்குள் செல்பவர்களில் உறவினர்கள் யார்யார் , உறவினர் அல்லாதவர் யார் யாரென்ற பட்டியல் தயாரித்து  ஃபைல் போடப்படுகிறதாம். வீட்டுக்குள் சசிகலா சோகமே உருவாக அமர்ந்திருக்கிறாராம்.  எந்த சலனமுமின்றி  ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாரா. எழுந்து போவதுகூட இல்லையாம். அவருக்கு மிகவும் வேடப்பட்டவர்கள் “ கவலைப்படாதே. ஜெயலலிதா மனம் மாறுவார்.” என்கிறார்களம். அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொள்கிறாராம்.  மனம் மாறும் அறிகுறி தெரிகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கோதண்டம் என்ற ஒரு  போலீஸ்  ஏட்டு எப்போதும் சசிகலாவுடனேயே பாடிகர்ட் போல இருப்பார்.  ஒருமுறை வெளியில் சென்று வந்த ஜெயலலிதா, கோதண்டத்தைப் பார்த்து “ சசிக்கு மயக்கம் வந்துவிட்டதாமே? நீங்கள் சரியாகப் கவனித்துக்கொண்டதற்கு நன்றி. ” என்று நின்று நன்றி கூறிவிட்டுப் போயிருக்கிறார். இப்போது அந்த கோதண்டத்தை கார்டனை விட்டு வெளியேற்றிவிட்டாராம்.  தற்போது சில ஆடிட் சமாச்சாரங்கள் நடந்துகொண்டிருக்கிறதாம். இந்த வேலையின் முக்கிய பகுதிகளை தை மாதம்தான் ஆரம்பிப்பார்களாம். கையெழுத்து வாங்க வேமண்டிய இடங்களில் கையெழுத்து வாங்கிவிட்டு த்தான் சசிகலாவை வெளியில் போக அனுமதிப்பார்களாம். இப்போது கிட்டத்தட்ட ஹௌஸ் அரெஸ்ட்ட்தான். வக்கீல்களும் ஆடிட்டர்களும் அறிவுறுத்தியபடிதான் இந்த ஆடிட் வேலைகள் நடக்கின்றன. சசிகலாவோ மீளா சோகத்தில் உறைந்து போயுள்ளார்.

சோகத்திலிருந்து வெளியே வர வேண்டும், சசிகலா!

முன்பொரு சமயம் மீடியாவில் வந்த செய்தியொன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். ஒருமுறை யாகமொன்று நடத்தியபோது, குருக்கள்  ஜெயலலிதாவின் ரத்தத்தில் 2  துளிகளை   கீழே விடச்சொன்னபோது , நீங்கள் முந்திக்கொண்டு உங்கள் விரலைக் குத்தி ரத்தத்தை விட்டதாக கேள்விப்பட்டோம். ஜெயலலிதாவின் ஆச்சரியத்துக்கு   நீங்கள் பதிலாக  ” அக்கா! நீங்க வேறு  நான் வேறா? அதோடு உங்களுக்கு வலிப்பதை என்னால் தாங்க முடியாது “என்று கூறினீர்களாம். மீடியா செய்தி முன்ன பின்ன இருக்கலாம்; ஆனால் இணை பிரியாமல் வாழ்ந்த உங்களுக்கிடையே எவ்வளவோ பாசப்பிணைப்பும் அன்னியோன்னியமும் இருக்கும்.  இன்னொரு விஷயம்!.  ஒருமுறை உங்களை ஜெயிலிலிருந்து கோர்ட்டுக்கு கொண்டுவந்தார்கள். நீங்கள் உடல்நலமின்றி ஸ்ட்ரெச்சரில் படுக்கவைக்கப்பட்டிருந்தீர்கள். அதைப் பார்த்த ஜெயலலிதா கர்ச்சீஃபால், வாயைப் பொத்திக்கொண்டு அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு”சசி! சசி!” என்று தழுதழுத்தார் என்றும் கேள்வியுற்றோம். அப்படி உயிருக்குயிரான நட்பு  நாசமானது எப்படி? ஜெயலலிதா உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை பாழ்படுத்தும் நிகழ்வுகள்தானே? உங்கள் சொந்தங்கள் சொதப்பியது கொஞ்சமா நஞ்சமா? எல்லா ரணங்களையும் காலம் சரியாக்கும். காத்திருங்கள். கனியும்! அன்பான அழைப்பு வரும்!

  1. தி.மு.க.வைச் சேர்ந்த  மாநில விவசாய  அணித் இணைச்செயலாளராக உள்ளவர், கோட்டுர் ராஜேந்திரன்.  15-ம் தேதியன்று பொங்கல்பண்டிகை மற்றும் தமிழ்ப்புத்தாண்டு மன்னார்குடியில் கொண்டாடப்பட்டது. அப்போது கோட்டுர் ராஜேந்திரன் பல்ஸை எகிறவைக்கும் உரை ஒன்றை நிகழ்த்தினார். “ ஜெயலலிதா சசிகலாவிடம் “ நீங்க மூணு ( சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன்) பேரும்  பெங்களூரு கோர்ட்டில் தவறு செஞ்சதா ஒத்துக்கங்க. சொத்துக்களையெல்லம் நாங்கதான் வாங்கினோம். முதலமைச்சருக்கும் இந்த சொத்துக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று  கூற சசிகலாவும் இலவரசியும் இதற்கு ஒத்துக்கொண்டார்கள். ஆனால், சுதாகரனோ நடராஜனிடம் போய் இதைக்கூற “ அது எப்படி ஒத்துக்கலாம்?” என்று மறுத்துக்கறி” நீங்க எப்படி சம்மதிக்கலாம்?” என்று சத்தம் போட்டிருக்கிறார். அதுதான் இந்தப் பிரிவுக்குக் காரணம். இப்போது மூணு பேரும் கோர்ட்டில் ,’ நாங்க போயஸ் தோட்டத்தில் வேலைதான் பார்த்தோம்.எங்களுக்கு எதுவும் தெரியாது. அவங்க எந்த இடத்தில் கையெழுத்துப் போடச் சொன்னாலும் நாங்க போட்டோம். அந்த சொத்துக்களை அரசாங்கமே எடுத்துக்கிட்டாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை. ‘ என்று சொல்லப் போவதாக எங்களுக்கு செய்தி வந்திருக்கிறது. பெங்களூரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், நடராஜன் பின்னால் 90 எம்.எல்.ஏ.க்கள் வருவாங்கன்னு சொல்றாங்க. இதனால், அந்தக் கட்சியில் மீண்டும் ஜெ. அணி  ஜா. அணி போல ஒரு நிலை உருவாகலாம். ஒரு வருஷத்தில் அ.தி.மு.க. ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. “ என்று பேசி இருக்கிறார். ‘ ராஜேந்திரன் ஒலிப்பது யாருடைய குரலை?’ என்று போலீஸ் தூண்டித் துருவ ஆரம்பித்துள்ளது.

3. தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் நடராஜன் பேசும்போது முக்கிய நிகழ்வுகள் எதையும் தொடாமல் பேசினார் என்று குறிப்பிட்டிருந்தோம். விழாவுக்கு வந்திருந்தவர்களில்,  மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியின் மச்சானும் ஒருவர். அவர் பிரணாப்பின் மச்சான்தானா என்று போலீஸ் விசாரிக்கிறார்களாம்.   நடராஜன் பிரச்சினைக்குரிய விஷயங்களைப் பேசவில்லையே தவிர, விழாவுக்காகக் கட்டப்பட்டிருந்த பேனர்கள் கதைகதையாகச் சொல்லின. “ தலைவா! முடிவெடு தலைவா! நீ யாரென்று காட்டு!” போன்ற வாசகங்கள் நடராஜன் பேசாதவைகளையும் பேசின. இப்போது போலீஸின் விசாரணைகள் மீட்டிங்கிற்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கற்பிக்கின்றன.

இதை எழுதிக் கொண்டிருக்கும் சமயம் சசிகலா கைதானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அரசியல் சூழ்நிலை அப்படித்தான் போகிறது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>