/* ]]> */
Feb 152012
 

சசிகலா குடும்பம் வைத்து கருணாநிதியின்

அரசியல் ஆட்டம்

ஜெயலலிதா சசிகலா குடும்பம் செய்தி

ஜெயலலிதா சசிகலா குடும்பம் செய்தி

இதுவரை மன்னார்குடி விவகாரத்தில் பாராமுகம் காட்டிய திமுக, இபோது தன்னுடைய சித்து வேலைகளை ஆரம்பிக்கிறது. கஸ்தூரி என்பவரின் வீட்டை இடித்த வழக்கில்தான் திவாகரன்  இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கஸ்தூரி என்பவர், ரிஷியூர் தமிழார்வனுடைய மனைவி. தமிழார்வன் 2009ல் அதிமுக.விலிருந்து திமுக.வுக்கு மாறியவர். சமீபத்தில் ஃபிப்ரவரி 6-ம் தேதியபன்று  ஸ்டாலின் திருவாரூர் வந்தபோது பூண்டி கலைவாணனால், கஸ்தூரி ஸ்டாலினுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ரூ. 10,000 ‘தானே’  புயல் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. கஸ்தூரியின் ஊர் , ‘தானே’  புயலால் பாதிக்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த கஸ்தூரி   தான்  கொடுத்த  போலீஸ் -புகாரை வாபஸ் பெற்றால்,  திவாகரன் வெளியே வந்துவிடமுடியும். இதன் மூலம் திமுக மன்னார்குடி குடும்பத்தினரின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப விரும்புகின்றனர். கலைஞரின் “ தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.” என்ற அறிக்கையும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டியது. மன்னார்குடி குடும்பத்தியனரால், பதவிக்கு வந்த கணிசமான எம்.எல்.ஏ.க்களை சஞ்சலப்பட வைக்கலாம் என்பதும் அதிமுகவின் கூடாரத்தைக் கலைக்க வேண்டும்  என்பதும் திமுகவின் கணக்கு .  ஆனால், திவாகரனை உள்ள்ளேயே வைக்க இந்த வீடு-இடிப்பு கேஸ் மட்டும் போதாது என்று நினைக்கும் போலீஸ், வேறு சில கேஸ்களையும் திவாகரன் மீது பாய்ச்ச ரெடியாகுதாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>