/* ]]> */
Mar 312012
 

சசிகலா வை மன்னித்தார் ஜெயலலிதா |

மீண்டும் சசி ஜெயா கூட்டணி

 

சசி ஜெயா சசிகலா ஜெயலலிதா இணைந்தனர்

சசி ஜெயா சசிகலா ஜெயலலிதா இணைந்தனர்

 

சசிகலாவை மன்னித்தார் ஜெயலலிதா. டிசம்பர் 19 அன்று சசிகலாவும் அவரது உறவினர்களும் போயஸ் ஜ்கார்டனில் இருந்து ஜெயாவால் வெளியேற்றப்பட்டனர். அதிமுக கட்சியிலிருந்தும் வெளீயேற்றப் பட்டனர். பின்னர் ஜெயலலிதா சசிகலாவின் உறவினர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து அவர்களை சிறையிலடைத்தார்.

 

நேற்று சசிகலா ஒரு உருக்கமான அறிக்கையை அளித்தார். அதில் தான் எப்போதும் அம்மாவுடன் இருக்கவே விரும்புவதாகவும் தன் உறவினர்கள் அனைவரையும் துறக்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று ஜெயலலிதா வெளீயிட்டுள்ள அறிக்கையில் தான் சசிகலாவை மன்னிப்பதாகவும் மீண்டும் அதிமுக கசியில் சேர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த மன்னிப்பு சசிகலாவுக்கு மட்டும்தான் ! அவர் உறவினர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடரும் அனவும் தமிழக முதல்வர் தெரிவித்தார்.

 

இதைத் தொடர்ந்து தி நகரில் தனது உறவினர் வீட்டில் வசித்து வரும் சசிகலா , மீண்டும் போயஸ் தோட்டம் நுழைகிறார்.

இது அதிமுகவினர் மத்தியில் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>