/* ]]> */
Feb 052012
 

சனி பெயர்ச்சி : சனி வக்ரம் -

சனி வக்ர பலன்

சனி வக்ர சஞ்சார பலன்

சனிப்பெயர்ச்சி பலன் – வக்ர பலன்கள்

சனி வக்ரம்

சனி வக்ரம்

சனி வக்கிர சஞ்சாரம்:

சனி பகவான், 8.2.12 முதல், 24.6.12 வரை வக்கிர சஞ்சாரம் செய்யப்போகிறார். பொதுவாக வக்கிர கிரகங்கள் நற்பலன்களைத் தருவதில்லை. ஆனால்,  சனி போன்ற அசுப கிரகங்கள் உங்களுக்கு சாதகமான இடங்களில் சஞ்சரிக்கும்போது நற்பலன்களை மிகவும் அதிகமாகவே வாரி வழங்கும். இனி ஒவ்வொரு ராசியாக பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்: மேஷ ராசி சனி வக்ர பலன்:

இது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம். உங்களுடைய செயல்களில் நிலையான போக்கு இருக்காது.  ஒருவிதமான சோம்பேரித்தனமும் மனச் சோர்வும் எப்போதும் உங்களை ஆக்கிரமிக்கும். உறவினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்பட்டு, அவை சண்டை சச்சரவில் முடியும். பெற்றோர் வகையில் மருத்துவச் செலவு ஏற்படும். குடும்பத்தில் பூசல்கள் தோன்றும்.

ரிஷபம்: ரிஷப ராசி சனி வக்ர பலன்:

ஏற்கெனவே கூறியபடி, உங்களுக்கு நலன் தரும் இடமான 6-ம் இடத்தில் சனி வக்கிரமடைந்து இருப்பதால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும்.  உங்களுடைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு உதவுவார்கள். உங்களுடைய வியாபாரம் நன்றக வளர்ச்சி பெறும்.  உங்கள் வருமானம் பெருகும். கூட்டுத்தொழில் பிரச்சினை எதுவுமின்றி நல்ல முறையில் நடக்கும். தங்க நகைகள் வாங்குவீர்கள். சிலர் வாகனம் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். புதிய வீடு, நிலம் முதலியவற்றை வாங்குவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு வேகமாக வருமானம் பெருகும்.

மிதுனம்: மிதுன ராசி சனி வக்ர பலன்:

உங்கள் வருமானம் பெருகும். ஆனால், செலவுகள் அதைவிட இரு மடங்காகும். செலவுகளை கட்டுப்படுத்த நீங்கள் எத்தனை முயன்றாலும் நடக்காது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலையே நிலவும். ஆனால், நீங்கள் எதையுமே திருப்திகரமாக செய்து முடிக்க முடியாது. உங்கள் செயல்கள் எல்லாம், நல்ல முடிவுகளைத் தருவதற்குப் பதிலாக , தோல்வியையே கொடுக்கும். ஒரு முக்கிய மனிதரை சந்திக்க நீங்கள் எடுக்கும் முயற்சி கைகொடுக்காது. அப்படியே, நாலைந்து முறை முயன்று சந்தித்தாலும் நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. எத்தனைதான் கடுமையாக நீங்கள் உழைத்தாலும், உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை நீங்கள் பெற முடியாது. கலைஞர்களுக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும் என்றாலும், அதைவிட செலவினங்கள் அதிகரிப்பதால், மகிழ்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. ஆகவே பண விஷயங்களில் கவனம் தேவை.

கடகம் : கடக ராசி சனி வக்ர பலன் :

பொறுப்புகளும் கடமைகளும் அதிகரித்து பெருஞ்சுமையாகி உங்களைத்  தடுமாற வைக்கும். வருமானம் வருவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் ஊக்கமும் உடல்நலமும் அவ்வப்போது பாதிக்கப்படும். எந்த வேலையையும் செய்ய முடியாமல் போகும். எல்லா வேலைகளும் தாமதப்படும். வக்கிர சனி, 18.5.2012 முதல், கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் பிரவேசிப்பதால், உங்கள் நிலைமை மாறிவிடும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணத்தை நீங்கள் தேடிப்போக வேண்டாம். பணம் உங்களைத் தேடி வரும். செலவுகளையும் கட்டுப்படுத்தலாம். முடிவடையாமல் இருந்த வேலைகளை சாமர்த்தியமாக முடிப்பீர்கள். எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் உதவி கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : சிம்ம ராசி சனி வக்ர பலன்:

இது உங்களுக்கு சாதகமான நேரம். நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து தேவைப்பட்ட உதவிகள் கிடைக்கும். சிலர் வலிய வந்து உதவி செய்வார்கள். சிலர் உங்கள் நட்பை விரும்பி உங்களிடம் வருவார்கள். இதுவரை நீங்கள் பெற முடியாமல் தவித்த பணம் இப்போது எளிதாக உங்கள் கைக்கு வரும். உங்கள் கடன்கள் அடைபடும். விலை உயர்வான பொருட்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் வாங்குவீர்கள் வெளியே உங்களுக்கு சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. மிகக் கடினமான காரியங்களையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் உழைப்புக்கு நீங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல வெகுமதியும் சம்பளமும் கிடைக்கும். இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த உங்கள் திறமை இப்போது மேலதிகாரிகளின் கவனத்துக்கு வரும். இது உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த சரியான நேரம். மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டிலும் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.

கன்னி : கன்னி ராசி சனி வக்ர பலன்:

மருத்துவ செலவு ‘படிப்பு செலவு,  வீட்டுச்  செலவு, உல்லாச கேளிக்கைகளுக்கான செலவு என்று தேவையானதும் தேவையற்றதுமான செலவுகள் கட்டுக்கடங்காமல் வந்து சேரும். உங்கள் வெளியூர்ப் பயணங்கள் உங்களுக்கு வெற்றியளிக்காது. வீண் அலைச்சலாகப் போகும். இப்போது இருக்கும் இடத்திலிருந்து இடமாற்றம் வரும். உங்கள் வருமானம் அதிகமாக இருந்தாலும், எதிர்பாராத திடீர் செலவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். ஒருவேலையையும்  செய்து முடிக்க முடியாமல் போகும்.  2 நாட்களில் செய்து முடிக்க வேண்டிய வேலையை 20 நாட்கள் செய்யவேண்டி வரும். மற்றவர்களுடன் அடிக்கடி சண்டை போடுவீர்கள். காவல் நிலையம் செல்லும் நிலைகூட சிலருக்கு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தவறு நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் கணவன் –மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு முற்றும். சொந்தக்காரர்களால் செலவுகள் ஏற்படும்.

துலாம் : துலா ராசி சனி வக்ர பலன் :

போதுமான வருமானம் இருந்தும்கட உங்களுடைய அதிகப்படியான செலவுகளால், கொடுக்கல்-வாங்கலில் சிரமப்படுவீர்கள். உங்கள் மனது குழம்பிய நியலையில் இருக்கும் என்பதால், உங்களால் சரியாக சிந்திக்கவோ, சரியாக முடிவெடுக்கவோ முடியாமல் போகும். நடப்பவை அனைத்தும் உங்களுக்கு எதிராகத்தான் நடக்கும். நீங்கள் எடுக்கும் தவறான முடிவுகள் நல்ல முடிவுகளாகத் தோன்றும். அந்த முடிவுகளின்படி நடந்துகொண்டு, சில இழப்புகளைச் சந்திப்பீர்கள். வியாபாரம் ,தொழிலில் மந்தமான போக்கு காணப்பட்டாலும், கொஞ்சம் வருமானம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவார்கள். அதிக சம்பளம் கேட்பதற்கே நீங்கள்  போராட வேண்டியிருக்கும். குடும்பத்தினருடன் நீங்கள் அனுசரித்துப்போக வேண்டும். உடன்பிறந்தவர்களால் தொல்லை ஏற்படலாம். உங்கள் முடிவுகள் தவறாக இருந்தாலும் அவை உங்களுக்கு சரியாகப்படும். ஆகவே கொஞ்சம் நிதானம் கடைபிடிக்க வேண்டிய காலம் இது.

விருச்சிகம் : விருச்சிக ராசி சனி வக்ர பலன் :

செலவுகள் கட்டுக்கடங்காமல் போனாலும் எப்படியோ அவற்றை சமாளித்து விடுவீர்கள். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இந்த சமயத்தில் உங்களுக்கு கட்ட்டாயம் நாவடக்கம் வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட்டால்கூட தவறான சொற்களைப் பயன்படுத்திவிட வேண்டாம். யாருடனும் சண்டையிடுவதைத் கட்டாயமாக  தவிர்க்கவும்.  இந்த சமயத்தில் நீங்கள் யாரிடம் உதவி கேட்டாலும் கிடைக்காது. வெளியே சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், பெரிய திட்டங்களை ஒத்திப்போடவும். சின்ன சின்ன வேலைகளைச் செய்துகொள்ளவும். உங்களுடைய தொழில், வியாபாரம் உங்களுக்கு தொல்லை தரும். கூட்டுத்தொழில் தலைவலியைக் கொடுக்கும்.

குடும்பத்தில் உறவினர் வருகையால் நிறைய குழப்பங்கள் ஏற்படலாம். செலவுகளைக் குறைக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறாமல் போகலாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் தவறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தனுசு : தனுசு ராசி சனி வக்ர பலன் :

உங்களுடைய முக்கியத்துவம் மற்றவர்களால் புரிந்துகொள்ளப்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய வியாபாரம், தொழில் தொடங்கவும் ஏற்ற நேரம். உங்கள் அந்தஸ்து உயரும். முக்கிய மனிதர்களும் பிரபலங்களும் உங்களைப் பார்க்க வருவார்கள். உங்கள் நிதி நிலைமை மிகவும் சூப்பராக இருக்கும். பணம் உங்களுக்கு பல வழிகளிலிருந்தும் வரும். பன வரவைப் பெருக்கக்கூடிய வழிகளும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த குளறுபடிகளை சரிபண்ணுவீர்கள். அதிகமாக முதலீடு செய்வீர்கள். அது லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு, பணிச்சுமை குறையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். நின்று போன திருமணங்கள் இப்போது கைகூடும்,

மகரம் : மகர ராசி சனி வக்ர பலன் :

பொருளாதாரப் பற்றாக்குறையால் கஷ்ட நேரிடலாம். பணம் வரும் வழிகள் அடைபடும். எந்தக் காரியத்தை தொட்டாலும் தடைகள்  வரலாம். உங்கள் அவசரமும் ஆத்திரமும் மேலும் மேலும் கெடுதியைக் கொடுக்கும். மறதி, தயக்கம், அவநம்பிக்கை மற்றும் கோபம் ஆகியவை உங்களுடைய குணங்களாக மாறும். ஆரோக்கியமும்  தொல்லை கொடுக்கும். ஒன்று மாற்றி ஒன்று என்று ஏதாவதொரு வியாதி உங்களை ஆக்கிரமிக்கும். வியாபாரத்தில் நீங்கள் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. கொஞ்சமாக வந்தாலும் சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான், ஏனென்றால் நஷ்டம் வராமலிருந்தால் சரி. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். பணப்பற்றாக்குறை குடும்பத்தை வெகுவாக பாதிக்கும். ஆகவே இந்த சனி பெயர்ச்சி வக்ர காலத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கும்பம் : கும்ப ராசி சனி வக்ர பலன் :

உங்கள் வழிகளிலெல்லாம் தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியம் உங்களுக்கு தொல்லை கொடுக்கும். உங்களிடம் பணப்புழக்கும் இருக்காது. ஆனால், எப்படியாவது சமாளித்துவிடுவீர்கள். கடன்களை அடைக்க முடியாமல், புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். உங்கள் வியாபாரத்தில் பலவித பிரச்சினைகள் எழும். ஆனால், மிகக் குறைந்த அளவில் லாபம் வரும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை கூடும். குழந்தைகளின் கல்விச் செலவு கூடும். தம்பதியரிடையே ஒற்றுமை இருக்கும்.

மீனம் : மீன ராசி சனி வக்ர பலன் :

வாக்குவாதங்களௌக்கு இடம் கொடுக்க வேண்டாம். அது சண்டையில்போய் முடியும். கால்தடுக்கியோ அல்லது வாகனத்திலிருது விழுவதாலொ ரத்த காயம் ஏற்படும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப வராது. நீங்களும் உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும்.  இதனால் உங்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுவதோடு உங்கள் மதிப்பும் குறையும். எந்த வேலையையும் எளிதாக செய்து விட முடியாது. தீவிர முயற்சி எடுத்தால்தான் நடக்கும். பணியிலுள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும். சம்பள உயர்வுக்காக கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் மனைவி அல்லது  தாயாரால் பிரச்சினை உண்டாகும். இது போதாதென்று உறவினர்கள் வேறு புகுந்து குழப்புவார்கள். அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது.

 பரிகாரம் :

இந்த சனி வக்ரம் சரியாக இல்லாத ராசிகள் குச்சானூர் அல்லது ஏரிக்குப்பம் சனீஸ்வரனை வணங்கி எல்லா வளமும் பெற்றிட பிராத்திக்கிறோம்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>