/* ]]> */
Aug 172011
 

ரிஷபம்

ரிஷப ராசி சனி பெயர்ச்சி பலன்

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் அதாவது துலா ராசியில் சஞ்சரிக்கப் போகிரார்.  இந்த ஆறாமிடத்து சனி பகவான் உங்களுக்கு பல நன்மைகளை செய்யப் போகிறார். பல ஆதாயங்கள் கிடைக்கும் நேரமிது.
இந்த சனிப் பெயர்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு தனது பார்வையால், 3, 8, 12 ஆகிய இடங்களைப் பார்வை செய்து அதற்குரிய பலன்களை வழங்குகிறார்.  இந்தக் காலத்தில் உங்களுடைய எதிரிகள் யாவரும் மறைவார்கள்; அல்லது சரணடைவார்கள். உங்களுடைய பழைய கடன்கள் யாவும் நல்ல முறையில் திரும்பிக் கிடைக்கும். உங்களுடைய புதிய கடன்கள்  நல்ல முறையில் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கையில் பணம் சரளமாக புழக்கத்தில் இருக்கும்.
முதற்கண் ,உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதனால் நோய்கள் வந்தாலும் உடனுக்குடன் குணமாகிவிடும்.  உங்கள் மனைவி, நண்பர்கள் வகை , மற்றும் கூட்டுத் தொழில் விரயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வம்பு வழக்குகள், கோர்ட், வழக்குகள் நல்ல தீர்வுக்கு வரும்.  குடும்பத்தில் நிலவி வந்த குதர்க்கமான நிலை மாறி, மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறையும். நோய் நொடிகள் இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.  உறவினர்கள் பகை நீங்கி நெருங்கி வந்து இயல்பாகப் பழகுவார்கள்.
போட்டி, பொறாமை, மறைமுகமான எதிர்ப்பு, வம்பு, வழக்கு போன்றவற்றையெல்லாம்  பலத்துடன் முறியடிப்பீர்கள். புதிய நண்பர்களிடமிருந்து நல்ல உதவிகள் கிட்டும். வறுமை, சிக்கல், சிரமம் போன்றவற்றை விரட்டியடித்துவிட்டு  வளமான வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
சனி உழைப்புக் கிரகம். அது உங்களுக்கு சாதகமாக இருப்பதால், உங்கள் உழைப்பு வீண் போகாது. எல்லாவற்றிலும் நல்ல பலன் கிடைக்கும். வேலை கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பணி உயர்வு, விரும்பிய இட மாற்றம்,  மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு முதலியவற்றை ஒருசேரக் கிடைக்கும் . புதிய தொழில் அல்லது வியாரம் செய்ய நினைப்பவர்களுக்கு அதற்கான யோகம் கூடி வரும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுடைய முயற்சிகளில் முன்னைவிட அதிகத் தெளிவும் உறுதியும் காணப்படும். ஆக்கபூர்வமான காரியங்களை எல்லாம் ஊக்கத்துடன் செய்து முடிப்பீர்கள். கடமைகளையும் பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய பொருளாதார நிலை படிப்படியாக உயரும். கடன்கள் கட்டுக்கடங்கும். வீடு, வாசல், தோட்டம், துரவு வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் வந்து சேரும். வாகன வசதியும் ஏற்படும். வெளிவட்டாரங்களில் உங்கள் மதிப்பு உயரும். பலவகையிலும் திரண்ட செல்வத்தை அடைந்து உலகம் சுற்றும் வாலிபனாக சுகபோக ஆடம்பர வாழ்க்கையை அடைந்து நட்சத்திர ஓட்டல்களில் ஓய்வெடுத்துக்கொண்டும், சொர்கலோகத்தில் சஞ்சரிப்பதுபோல  மகிழும் நேரமிது.
உங்கள் குழந்தைகள் நலனிலும் தந்தையின் உடல்நிலையிலும் கவனம் தேவை.
8.11.12. முதல் 4.11.2013 வரையிலான காலகட்டத்தில், குரு ரிஷபத்திற்கு பெயர்ந்து, சர்ப்பத்தின் பிடியில் சிக்கி, தோஷத்துக்கு ஆளாகினும், சர்ப்பங்கள் சுக்கிரனுக்கு கட்டுப்பட்டவர்களாவதால், நன்மைகளை மிகுந்து செய்யாவிடினும், அதிகமான கெடுபலன்களைத் தரார். இந்தக் காலக் கட்டத்தில் முழுமையான சர்ப்ப  வளையத்துக்குள் சனி  சிக்கி விடுவதால், கொஞ்சம் எச்சரிக்கை தேவை.  இந்த காலக்கட்டத்தின் பிற்பகுதியில் வளரும் இளம் கலைஞர்கள் கலைத் துறையில் சாதனையாளராகத் திகழ்வார்கள்.  மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு,  சின்னத் திரையிலும் பிரகாசிப்பார்கள். பணம் காய்ச்சி மரமாக செல்வம் நிரம்பி வழியும். பொதுவாக அனைத்து தொழிலில் ஈடுபடுபவர்களும் ஜீவன மேன்மையை அடைவார்கள் . ராசிக்காரர்கள் கருமயோகத்தை தொடர்ந்து பெற்று மேன்மையடைவார்கள். எனினும் ஒரு சிலருக்கு வர்த்தகம், தொழில் மற்றும் பணியில் பிரச்சினைகள் தோன்றி,  பெருத்த துயரை சந்திக்க நேரும். செய்யும் பணியில் குற்றங்குறைகள் தென்பட்டு மேலிடத்து அதிகாரிகளால், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அவமானத்திற்கும் ஆளாகக்கூடும். இதுவரை மனைவி மக்களுடன் மகிழ்ந்திருந்த நீங்கள் இப்போது, பெரிய குழப்பத்திற்கும் வருத்தத்திற்கும், ஆளாக நேரும்.  இந்தக் காலக்கட்ட பிற்பகுதியில், வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

சனி பகவானின் சஞ்சார பலத்தால்  அவருடைய பார்வை பலம் சக்தி வாய்ந்தது. துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் தம்முடைய 3,7,10 ஆகிய பார்வைகளால், உங்களுடைய அஷ்டம ஸ்தானம், விரய ஸ்தானம், தைரிய ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சனி பகவான் மூன்றாம் பார்வையாக உங்கள் அஷ்டம ஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நோய்கள் வந்தாலும் உடனுக்குடன் குணமாகிவிடும்.
சனி பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால், உங்களுடைய உழைப்பை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது. உங்கள் உழைப்பு உங்களுக்கு நல்ல ஆதாயத்தைக் கொடுக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமான போக்கு காணப்படும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும்.

சனி பகவான் ஏழாம் பார்வையாக உங்களுடைய  விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால், செலவுகள் கட்டுக்கடங்கி நிற்கும். அப்படியே செலவானாலும், அது பயனுள்ள செலவாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள், எலெக்ட் ரானிக் பொருட்கள், புத்தாடைகள் போன்றவற்றை வாங்குவீர்கள். பொன்னும் பொருளும் சேரும். வீடும் நிலமும் வாங்கக்கூடும்.

சனி பகவான் பத்தாம் பார்வையாக உங்கள் தைரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்கள் உள்ளத்தில் ஊக்கமும் உறுதியும் உண்டாகி உங்களை எழுச்சியுடன் இயங்க வைக்கும். முயற்சியின் வேகம் மும்முரப்படும். உழைக்கும் சக்தி உங்களை தூண்டிவிட்டுக்கொண்டே இருப்பதால், மேலும் மேலும் உழைத்து சாதனை புரிவீர்கள்.

வறுமையும் சிறுமையும் வாட்டங்களும் பறந்து போகும். வசதியும் வாய்ப்புகளும் பெருகி வாழ்க்கையில் வளம் மிகுந்து நிற்கும். சுப காரியச் சுபிட்சங்கள் அனைத்தும் எளிதாகக் கைகூடும். தள்ளிக்கொண்டே போகும் திருமணப் பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு ஏற்படும்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் ஏற்படும். புத்திர புத்திரிகளுக்கும் இனிமேல் அபிவிருத்தி உண்டு. போட்டிகளும் எதிர்ப்புகளும் முன்வரமுடியாமல் முடங்கிப் போகும். கடமைகளையும் காரியங்களையும் சீராகச் செய்து முடிக்க முடியும்.

சனி பகவான் கீழே குறிப்பிட்டுள்ள தருணங்களில் மூன்று முறை வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார். அந்தக் காலக் கட்டத்தின் சிறப்புப் பலன்கள் தரப்பட்டிருக்கின்றன.:
1. 9.2.12.முதல், 24.6.12வரையில் 4 மாதம், 15 நாட்கள்(சனி வக்கரம்) :
இந்தக் காலகட்டத்தில் தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. நிலம், வீடு, வாகனம் வாங்குவது, விற்பதை தள்ளீப் போடவும். காரியத் தடைகள் ஏற்படலாம். சுற்றத்தாரிடம் கவனமாக உறவாடவும்.  பயணங்களைத் தவிர்க்கவும் அல்லது தள்ளிப் போடவும்.
2. 16.2.2013 முதல் 12.7.13 வரையில் 4 மாதம் 26 நாட்கள்( சனி வக்கிரம்):
இந்தக் காலக் கட்டத்தில் நல்ல அற்புதமான பலன்களாக நிகழும். எதிரிகள் அனைவரும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். வசூலாகாத பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். புதிய கடன்கள் அனைத்தும் நன்மையைத் தரும். நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். உடல் நலம் சிறப்படையும். பங்காளித் தகறாறுகள் நல்ல முறையில் தீர்வடையும்.
3. 3.3. 2014 முதல்,23.7.14 வரையிலான 4 மாதம் 20 நாட்கள்( சனி வக்கிரம் ):
இந்தக் காலத்தில் 19.6.2014 வரையில் வாக்கு வன்மை ஏற்படும். பணம் வரவு இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் உண்டாகும். கல்வி சிறப்படையும். குடும்பத்தில் கணவன் -மனைவிக்கிடையே அன்னியோன்னியம் ஏற்படும். செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம் கூடும். சொல்வாக்கும் சிறப்படையும்.
இந்தக் காலத்தில் கடைசி 23.7. 14 வரையில் எதிலும் காரியத் தடைகள் ஏற்படும். முயற்சிகள் பலனடையாது. தோல்விகள் ஏற்படும். வேலைக்காரர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். சகோதரர்களிடம் வீண் சண்டைகள் வரும். தைர்யம், தன்னம்பிக்கை குறையும். பொன்னாபரணங்கள் வாங்குவதிலும் விரயம் ஏற்படும். உத்தியோகம், இடமாற்றம் போன்றவைகளால் வருத்தம் ஏற்படும்.
எந்த காரியத்தை எடுத்தாலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால், அமைதியோடு வாழலாம். இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு யோகமானதே. வக்கிர காலங்களைத் தவிர மீதி காலங்கள் சிறப்பான பலன்களையே தரும்.

பரிகாரம்:

1. காளிங்க நர்த்தனனை  போற்றித் துதித்து வெண்ணெய், பால், தயிர் சாற்றி மகிழ்வித்திட நற்பலன் கூடும்.
2. தன்வந்திரி மகாமந்திர ஜப ஹோமம், மிருத்துஞ்ஜயஹோமம் போன்றவைகளை உரிய முறையில் வேத மந்திரங்களை ஓதும் மறையவர்களை வைத்து, உரிய பரிகாரங்களை செய்துகொள்ளவும்.
3. ஈரோட்டில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வணங்கி வரவும்.
இவை தவிர சனிபகவானுக்குரிய வழிபாடுகளை விடாமல் செய்து வரவும். பரிகார ஸ்தலங்காளான சனீஸ்வரன் ஆலயங்களைப் பற்றியெல்லாம் ஏற்கெனவே விரிவாகக் கூறியிருக்கிறோம். குச்சானூர், திருநள்ளாறு முதலிய ஸ்தலங்களுக்கு முடிந்தபோதெல்லாம் சென்று வாருங்கள். அனைத்திலும்  சுபம் காணலாம். வாழ்க வளமுடன்.!

Tags : sani peyarchi palangal for the astrology rasi rishabam or rishaba rasi palan for the sani peyarchi that happens in novemeber 2011 .

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>