/* ]]> */
Aug 192011
 

மிதுனம்

 

mithuna rasi

இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்போது ராசிக்கு ஐந்தாமிடத்தில் பிரவேசிக்கப் போகிறார். இவ்வாறு ராசி மாறி வரும் சனிபகவான், முன்போல கடுமையான பலன்களைக் கொடுக்க மாட்டார்.ஓரளவுக்கு நற்பலன்களையே கொடுப்பார்.  தற்போதுள்ள சனிப் பெயர்ச்சியில் உங்களுடைய பொருளாதார  நிலையில் மிகப் பெரிய முன்னேற்றம்  ஏற்படவில்லையென்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். நகை நட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்க முடியும். அது மட்டுமல்ல. வீடு மனை வாங்கவோ அல்லது சொந்தமாக வீடு கட்டவோ கூட முடியும். இருக்கும் இடத்தைப் பழுது பார்த்து வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளவும் முடியும்.

சுகஸ்தானமான நான்காம் இடத்திலிருந்து சனி இடம் பெயர்வதால்,  உங்களுடைய ஆரோக்கியத்தில் சொல்லத் தகுந்த அளவு முன்னேற்றம் உண்டாகும். அலுப்பு சலிப்பு அசௌகரியங்கள் நீங்கும். வேளாவேளைக்கு சாப்பிட முடியும். தளர்வடையாமல் தொடர்ந்து உழைக்க முடியும். நோய்கள் வந்தாலும் உடனுக்குடன் குணமடையும்.
நான்காம் இடம்  என்பது மாத்ரு ஸ்தானம் ஆனதால்,  அங்கிருந்து சனி விலகிவிட்டதால், உங்கள் தாயாரின் உடல்நிலையில் அபிவிருத்தி ஏற்படும். மருத்துவ செலவு குறையும் உங்கள் தந்தையார் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அவ்ருடைய வேலைச் சுமைகள் குறையும்.  தந்தையாரின் தொழில் மற்றும் சமூக அந்தஸ்து இவை உயரும். அவருடைய முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக இருந்து வந்த தடைகள் விலகும் .

உங்கள் தொழில் மற்றும் உத்தியோகத்தில் இதுவரை  நீங்கள் வருமானத்துக்கும் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது . அப்படிப்பட்ட அதிகப்படியான வேலைப்பளு  இப்போது குறையும். இதுவரை இருந்து வந்த அதிகமான உழைப்பு சற்று குறையும். அங்கேயும் இங்கேயும் அலைமோதித் திரிதல், அலைந்து அலைந்து பயனற்றுப் போதல், எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்காமல் போதல்,  நெருங்கிப் பழகுபவர்களே நம்பிக்கை துரோகம் செய்தல் போன்றவை இனி   நடைபெறாது. பல அவசியமான திருப்பங்களுக்கு அடைப்பாக இருந்த பல வழிகள் திறந்துகொள்ளும். கடுமையான உபத்திரவங்களும் காலதாமதங்களும் இனி குறையும்.

ஈனத்தானதிற்கும் பாக்கிய ஸ்தானத்திற்கும், காரகம் வகிக்கும் சனீஸ்வரர் , ராசிக்கு பஞ்சமத்தில், உச்ச நிலையில் துலாத்தில் பெயர்ச்சியாகி , ராசிக்குரிய களத்திர ஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் தன் குடும்ப வீட்டையும் பார்வையிடுகிறார். இதனால், ராசிநாதர்களின் பாக்கிய இனங்கள் பெருகி தனம் , கீர்த்தி, புகழ், பெருமை சந்தான விருத்தி, , புதிய சொத்துக்களை அடைந்து ஜீவன வகைகளை பெருக்கி, சுகமான வளமான வாழ்க்கையை அடையப் போகிறீர்கள். வர்த்தகர்கள், முதலீட்டு ஆதாயங்களை அடைவர். அரசு சலுகைகளையும், , மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பையும், நீதிமன்ற விவகாரங்களில் சாதகமான தீர்ப்பையும், எதிர்பார்க்கலாம். தன கீர்த்தியடைந்து வாழ்க்கை வளங்களைப் பெருக்கிக்கொள்ளும் நேரமிது. தன்னுடைய மகன், மகள் திருமணம் மற்றும், பன்னாட்டுக் கல்வி போன்றவற்றை திறம்பட நிறைவேற்றி வைத்து ராசிக்காரர்கள் இனிமை காண்பார்கள். இறையருளால், இழப்பு, நஷ்டம், கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு கரையேறி விடுவீர்கள்.

சனி பகவானின் சஞ்சார பலத்தைவிட அவருடைய பார்வை பலம் மிகவும் சக்தி வாய்ந்தது. துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவன், தன்னுடைய 3,7, 10 ஆகிய பார்வைகளால், உங்களுடைய களத்திர ஸ்தனம், லாப ஸ்தானம், குடும்ப ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். இந்தப் பார்வைகள் கெட்ட பார்வைகள் என்பதால், உங்களுக்கு பார்வைகள் நற்பலன்களைத் தரப்போவதில்லை.  சனி பகவானின் மூன்றாம் பார்வை, உங்களுடைய ஏழாமிடத்தை பார்வையிடுவதால், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கணவன் / மனைவியின் உடல்நலம் பாதிக்கப்படும். வேலை காரணமாகச் சிலகாலம் பிரிந்திருக்க நேரலாம். திருமண வயதில் உள்ள ஆண்கள் அல்லது பெண்களுக்கு திருமணமாவதில் கால தமதம் ஏற்படலாம். அல்லது நிச்சயமான திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படலாம். சனி பகவானின் ஏழாம் பார்வை, பதினோராம் இடமான லாபஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய ஆதார வரவுகள் தாமதப்படும் அல்லது தடைப்படும். கைநிறைய ஆதாயம் கிடைக்கும் என்று காத்திருப்பீர்களானால், எதுவுமே கிடைக்காமல், உங்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும். பதினோராம் இடம் மூத்த சகோதரர்களின் இடம் என்றும் குறிக்கப்படுவதால், அண்ணன், அக்கா போன்ற மூத்த சகோதரர்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும். அவர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கவேண்டிய அன்பும் ஆதரவும் தற்காலிகமாகத் தடைப்படும். அவர்களால், வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும். சனி பகவானின் பத்தாம் பார்வை இரண்டாமிடமான குடும்பஸ்தானத்தில் பதிவதால், பண வரவு பாதிக்கப்படும். வரவேண்டிய பணம் நிறைய இருந்தாலும், கைக்கு வந்து சேரும் பணம் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்காது. கொடுகல்- வாங்கலில் குளறுபடிகள், குறைபாடுகள், கோபதாபங்கள் போன்றவை இருக்கும். சில சமயங்களில் உங்கள் நாணயத்தைக் காப்பாற்ற முடியாமல் போகும். வேறு சில சமயங்களில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்திலும் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் தலை தூக்கும்.

இனி இந்த சனிப் பெயர்ச்சியில் மூன்றுமுறை நிகழப்போகும் சனி பகவானின் வக்கிர சஞ்சாரங்களைப் பார்ப்போம்:

( 1)   9.2.12 முதல், 24.6.12.வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:
இந்தக் காலத்தில் சனி முதல்முறையாக வக்கிர சஞ்சாரத்தை மேற்கொள்ளப் போகிறார். இப்போது வருமானம் சிறப்பாக இருக்கும். அதைப் பெருக்கிக்கொள்ளவும் நல்ல வாய்ப்புகள் உருவாகும். ஆனால், அதே சமயம் செலவுகள் கடுமையாக ஏற்படும். நீங்களும் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். ஆனால், உங்கள் முயற்சி தோல்வியடையும். நீங்கள் எந்தக் காரியத்தையும் விரும்பும் வகையில் செய்யமுடியாது. சில காரியங்கள் எதிர்பாராத வகையில் திசை மாறிப் போகும். வெளிவட்டாரத்தில் உங்களுக்குச் சாதகமான போக்கு காணப்படும். முக்கியமான மனிதர்களை அவசரமாக சந்தித்துப் பேச நினைப்பீர்கள். ஆனால் முடியாது. நாலைந்து முறை அலைந்த பிறகே அவர்களைச் சந்திக்க முடியும். அப்படியே சந்தித்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் உதவி தாமதமாகத்தான் கிட்டும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கு காணப்பட்டாலும், எதிர்பார்க்கும் லாபம் கிட்டாது. உத்தியோகம் பார்ப்பவர்கள் கடினமாக உழைத்தாலும், மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க முடியாது. கலைஞர்களுக்கு புதிய தொடர்புகளால், வருமானம் பெருகும். ஆனால், அதைவிட அதிகமாகச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்கிக்கொண்டே இருக்கும். குடும்பச் செலவைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். இந்தக் காலத்தில் நிலம், வீடு,வாகனம் முதலியவற்றை வாங்குவது, அல்லது விற்பதில் கவனம் தேவை.  அந்த வேலைகளை தள்ளிப்போடுவது நல்லது. தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வயிற்றுப் பிரச்சினைகள், அஜீரணக் கோளாறுகள்  தோன்றலாம். பிரயாணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.

(2) 16.2.13. முதல் 12.7.13.வரையிலான  4 மாதம் 26 நாட்கள்:
இந்தக் காலக் கட்டத்தில் சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிரமடைகிறார். இந்தக் காலத்தில் உங்கள் கைக்கு பணம் வந்த்தும் பறந்தோடிவிடும். செலவுகள் ஒருமடங்கிற்கு இரு மடங்காக வரும். வருமானம் ஒரு வழியில் அல்லது இரு வழியில் வருகிறது என்றாலும், செலவுகள் பல வழிகளில் வருகிறது. இந்தக் காரியத்திற்கு இன்றைக்கு இவ்வளவுதான் செலவழிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் செல்லுபடியாகாது.  எதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையெல்லாம் உங்களால் ஊகிக்கவே முடியாது. இதில் ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால், எல்லா வகையான செலவுகளையும் சமாளிக்கும் அளவுக்கு எப்படியாவது வருமானம் வந்து விடும் என்பதுதான்.

இந்தக் காலத்தில் பொது சேவையில் கௌரவக் குறைவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். பூர்வீக சொத்துக்களில் கவனம் தேவை. உய்ர் அதிகாரிகளிடமும் உடன் பணி புரிபவர்களிடமும் மனஸ்தாபம் வராமல் பார்த்துக்கொள்ளவும். குழந்தைகள்  வழியில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் கைக்கு வராமல், இழுபறியாக்கும்.

காலில் ஏதாவது இடர்ப்பாடுகள் தோன்றி மறையும். சிலருக்கு நீரிழிவு நோய் ஏற்படும். கடுமையான உழைப்பு, அதிகப்படியான அலைச்சல், இவை உடலில் அழற்சியை ஏற்படுத்தும். இருக்கிற வீட்டை புதுப்பித்தல், புதிய மனை வாங்குதல், புது வீடு கட்டுதல், போன்றவற்றிற்கு உங்களால் பணம் புரட்ட முடியும். அதே சமயம் மறு பக்கம் கடன்களும் தொல்லை கொடுக்கும்.

(3). 3.3.2014 முதல்23.7.14. வரையில் 4 மாதம் 20 நாட்கள்:

இது மூன்றாவது முறையாக சனி வக்கிர சஞ்சாரம் செய்யும் காலமாகும். இந்தக்  காலக் கட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், பொறுப்பு, கடமை ஆகியவற்றில், குறை, தவறு ஏற்படும். உங்களுடைய குறியும் இலக்கும் அடிக்கடி தவறிப் போகும். நல்லது கெட்டது புரியாத குழப்பம் ஏற்படும். சாண் ஏறினால், முழம் சறுக்கும். உங்களுடைய முன்னேற்றமும் முடக்கமாகும். அபிவிருத்திகளைக் காண்பது அரிதாகிப் போகும். நிலையில்லாத அலை மோதல்கள் இக்கட்டான விவகாரங்கள் போன்றவற்றால், வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும். கணிசமான தொகை ஒன்றை எதிர்பார்த்திருப்பீர்கள். அது கைக்கு வராது.  தடங்கல்களும் குறுக்கிடுகளும் ஏற்படுவதால், வட்டிக்குக் கடன் வாங்கி சில அவசர செலவுகளை சமாளிக்க வேண்டி வரும். பற்றாக்குறைப் பிரச்சினை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். கடுமையான தட்டுப்பாடுகளும் அவசியமான தேவைகளும் கழுத்தை நெறிக்கும்போது, மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பணம், குடும்ப நிர்வாகம் சம்பந்தமாக கணவன் -மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பிள்ளைகளின் ஆசைகளையும் தேவைகளையும்கூட உங்களால் உடனுக்குடன் நிறைவேற்ற முடியாது. அவர்களால் மருத்துவச் செலவுகளும் மற்ற விரயங்களும் ஏற்படும். இந்தக் காலத்தில் உடல் நலனிலும் மன நலனிலும் கவனமாக  இருக்கவேண்டும். கௌரவம், அந்தஸ்து, மரியாதை ஆகியவைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் நன்மை ஏற்படும். பண வரவுகள் நன்மையைத் தரும். குடும்பத்தில்  நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்:

1. சனியின் குருவான பைரவருக்கு, அஷ்டமி திதியில் ஹோமம் மற்றும் பூஜைகளை மேற்கொண்டு, சாந்தி செய்துகொள்வது  நல்லது.
2. குடும்பப் பெண்கள் அஷ்ட லட்சுமிகளும் கூடிய உருவப் படத்தை வைத்து, விளக்கேற்றி, காலை  6.00 மணியளவிலும், நவக்கிரக மாக்கோலமிட்டு, துளசி மற்றும் முல்லை, நந்தியாவட்டைசெண்பக பூக்களால், லக்ஷ்மி அஷ்டோத்ரத்தைப் பாராயணம் செய்து பால் பாயசம் நைவேத்தியம் செய்வது  நல்லது.
3.இவை தவிர சனிபகவானுக்குரிய வழிபாட்டு ஸ்தலங்களான  குச்சானூர், திருநள்ளாறு முதலிய தலங்களுக்குச் சென்று  உரிய வழிபாடுகளை முறைப்படி செய்து வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.
4. சனிக்கிழமைதோறும், காக்கைக்கு அன்னமிடல், நவக்கிரக கோவிலுக்குச் சென்று சனீஸ்வரனுக்கு எள்ளுதீபம் ஏற்றுதல், முதலியவை தொல்லைகளையும் குழப்பங்களையும் தீர்க்கும் . வாழ்க வளமுடன்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>