/* ]]> */
Aug 262011
 

மீனம்

மீன ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருந்து வந்த சனி பகவான் இப்போது எட்டாமிடத்துக்கு அஷ்டம சனியாக வரப் போகிறார். ஏழாமிடத்தில் இருந்த சனி பகவான் பலவித சங்கடங்களைக் கொடுத்து வந்தார். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு, கூட்டுத் தொழிலில் சங்கடங்கள், உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு சக ஊழியர்களாலும் மேலதிகாரிகளாலும் சங்கடங்கள் என்று பலவித  தொல்லைகளை அனுபவித்து வந்தீர்கள். இப்போது  சனி பகவான் அஷ்டமத்து சனியாக சஞ்சரிக்கப் போகிறார்.  உங்க ராசிக்கு இயற்கையிலேயே அசுபர் சனீஸ்வரர். அப்படிப்பட்டவர் உங்க அஷ்டமத்தில் சஞ்சரிப்பது  விபரீத யோகம் என்று கூறப்படும். இப்படிப்பட்ட சனிபகவான் உங்கள் ஆயுள் பலனைக் கூட்டுவார். கெட்டவர் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறும்.  தேவ குருவின் ராசியில் பிறந்த உங்களுக்கு அசுர குருவில் ராசியில் அமைந்த சனீஸ்வரர் அசுப பலனைத் தரக்கூடும் தக்க வழிபாடுகளின் மூலம் எதிலும் ஜெயித்து வாழ முடியும். உங்கள் ராசிக்கு பனிரெண்டுக்குரிய சனி பகவான் 8ல் உச்சம் பெறுவதால், பாதிப்புகள் அதிகம் இருக்காது. ஆனாலும் அஷ்டம சனிக்கென்று சில பயமுறுத்தல்கள் இல்லாமல் இருக்காது.  ஏழாம் இடத்தில் சஞ்சரித்த காலத்தில் கொடுத்த அதிருப்தியான பலன்களைவிட அதிக அளவில் அதிருப்தியான பலன்களைக் கொடுத்து உங்களைச் சஞ்சலப்படுத்துவார்.

சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சிலருக்கு உழைப்பதற்கே உருப்படியாக சந்தர்ப்பம் கிடைக்காது. வேலை தேடி அலைபவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்காது. அப்படியே வேலை கிடைத்தாலும் அது நல்ல ஊதியத்தைக் கொடுக்கும் வேலையாக இருக்காது.  புதிதாக தொடங்க நினைத்தாலும் தாமதமும் தடையும் ஏற்படும். அப்படியே தொடங்கிவிட்டாலும், தொடக்கத்தில் மந்தமான போக்கே காணப்படும். முயற்சியின் அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும், தடையும் தடங்கலும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். ஏற்கெனவே சொந்தமாக தொழில் செய்துகொண்டிருப்பவர்கள் புதிய நெருக்கடிகளை சந்திப்பார்கள். கவனமாக இல்லாவிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி இருக்கும். தற்காலிக வேலை நிக்கம் செய்யப்படலாம் . விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படும். பணநெருக்கடி ஏற்படும். பெரிய செல்வந்தராக இருந்தாலும் இந்தக் காலக் கட்டத்தில் ‘ஐந்துக்கும் பத்துக்கும் ஆலாய்ப் பறப்பார்கள் ‘ என்பார்களே அதுபோல பணத்துக்கு நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்க முடியாது. கொடுக்கல்-வாங்கலில் குளறுபடிகள் இருக்கும். கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு வாய்த் தகறாறு, அடிதடி என்று முடியும். குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். உடல் உபாதைகள் உண்டாகும். உரியவேளையில் செய்ய வேண்டியதை சரியாக செய்ய மாட்டீர்கள். மன பயம் இருக்கும். விரக்தி, விபரீத முடிவுகள் ,விரயங்கள், தடைகள் , தனக்கு எல்லாம்  இருந்தும் எதையும் சாதிக்க முடியாதநிலை இப்படி சில இடையூறுகளுக்கு உள்ளாக நேரும்.  வெளிநாட்டு பயணம் கைகூடாது.  அவ்வப்போது ஆரோக்கிய பாதிப்பு இருக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். நெருங்கிய உறவினரிடம்  சுமுக நிலை குறையும். தன் பிள்ளை, பேரன்-பேத்திகள் இவர்களின் திருமண வைபவம் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு சந்தான பிராப்தி இவை எல்லாவற்றிலும் பூர்ண அம்சங்கள் இருக்காது.

இனி, சனி பகவானின் பார்வை பலன்களைப் பற்றிப் பார்க்கலாம். சனி பகவான் தன்னுடைய  3, 7, 10 இடத்துப் பார்வைகளால், உங்களுடைய ஜீவன- காரிய ஸ்தானம், தன-குடும்ப- வாக்கு ஸ்தானம் , பூர்வ புன்ணீய ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.
சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கலுடைய ஜீவன காரிய ஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய வருமானத்திற்கு ஆதாரமான எதிலும் கடினமான உழைப்போ அல்லது பிரச்சினையோ அடிக்கடி ஏற்படும். ஒரு காரியத்தை செய்வதற்குள் நீங்கள் கசக்கிப் பிழியப்பட்டு விடுவீர்கள்.  சனி பகவான் உமது ராசிக்கு பத்தாம் வீட்டைப் பார்வை செய்வதால்,  தொழில்வளம் பெருகும். நேரடி கவனம் அவசியம். புதிய முதலீடு செய்ய கடன் கிடைக்கும். பழைய கடன் அடைபடும் .சிலர் தந்தையின் தொழிலை ஏற்று நடத்துவர். புத்திர பாக்கியம் ஏற்படும். மாமன் -மைத்துனர் வழியில் சுபச் செலவு ஏற்படும்.
சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய ராசிக்கு இரண்டாமிடத்தைப் பார்ப்பதால், வாக்கினால் ஜீவனம் புரிபவர்கள் அதிக லாபம் அடைவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணம் கையாளும் பணியில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், பணம் கையிழப்பு ஏற்படும்.
சனி பகவான் தனது ஏழாம் பார்வையினால், பணவரவுகளில் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்.  நாணயம் பாதிக்கப்படும். குடும்பத்தில் வாக்குவாதங்கள், பிரிவினைகள், நிம்மதியின்மை போன்றவை ஏற்படும். பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையாது. வீண் வாக்குவாதம் செய்தல் தாறுமாறாகப் பேசுதல் போன்றவற்றால் பகை உண்டாகும்.

சனிபகவான்  தன்னுடைய பத்தாம் பார்வையினால், உங்களுடைய பூர்வ- புண்ணிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். அவ்வப்போது மறதி, மந்தத்தன்மை, தாமதக்குணம், கவனக்குறைவு  தவறான முடிவுகளை எடுத்தல், கோணல் மாணலாக சிந்தித்தல் போன்றவை ஏற்படும். இந்த நேரத்தில் தவறான முடிவுகளே உங்களுக்கு சரியான முடிவாகத் தெரியும்.  எது சரி, எது தப்பு என்று புரியாமல் தவிப்பீர்கள். பிரபலங்கள், பெரிய மனிதர்களின் தயவை நாடிச் சென்றாலும், அந்த முயற்சி சரிவர கைகூடாது. பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் தீரும். கணவன் (அ) மனைவி வழியில் அனுகூலம் கிட்டும். விரோதிகள் விலகிச் செல்வர். கோர்ட், கேஸ்களில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். நேரடி கவனம் செலுத்தினால், தொழிலில் அபிவிருத்தி கிட்டும். சுற்றத்தாரிடையே நிலவிய சங்கடம் விலகும்.  திருமணம், வளைகாப்பு முதலிய சுப நிகழ்வுகள் நிகழும்.

இந்த சனிபெயர்ச்சிக்குரிய இரண்டரை வருட கால கட்டத்தில் மூன்று முறை சனி வக்கிர சஞ்சாரம் செய்யவிருக்கிறார்.

அதற்குரிய பலன்களைப் பார்க்கலாம்.

(1).9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:
இப்போது சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார்.  இந்தக் காலக் கட்டத்தில்  வம்பு சண்டைகள் தேடி வரும்.  ஒதுங்கிப் போய்விடுவது நல்லது. வாக்குவாதங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பதுபோல் விட்டுக்கொடுத்துப் போய் விடுங்கள். சமாதானவிரும்பியாக ஒரு தோற்றத்தைக் கொடுத்து பின்வாங்கிவிடுங்கள். கால் தவறிக் கீழே விழுதல், வாகனத்திலிருந்து கீழே விழுதல் போன்றவற்றால் ரத்தக் காயம் ஏற்படலாம். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. வரவேண்டிய பணம் மொத்தமாக வராமல், சிறிதுசிறிதாக வரும். அதனால் அதை உருப்படியாக செலவு பண்ண முடியாமல் போகும். கொடுக்கல்- வாங்கலில் மந்தமான போக்கு காணப்படும். வருமானம் தொடர்பான செலவுகளில் தடையும் தடங்கல்களும் ஏற்படும். எந்தக் காரியத்தையும் எளிதாக செய்து முடித்துவிட முடியாது. தீவிர முயற்சி தேவைப்படும். நேற்றுவரை உங்களுடன் இருந்தவர்கள் இன்று திடீரென உங்களைவிட்டு விலகிச் சென்று உங்களைப் பற்றித் தப்பாகப் பேசுவார்கள். வியாபாரத்தில் மந்தமான போக்கு நிலவும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். வேலைப்பளு அதிகமாகக் காணப்படும்.  எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்காது. தொழிலாளர்கள் கிடைக்கவேண்டிய சம்பள உயர்வைக்கூட போராடித்தான் பெற வேண்டியிருக்கும்.. குடும்பத்தில் தாயார் அல்லது மனைவியால் பிரச்சினைகள் ஏற்படும். போதாக்குறைக்கு உறவினர்களும் வந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.

(2).  16.2.13.முதல், 12.7.13.வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:
இப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் செலவுகள் அதிகம் ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அளவில் குறைகள் ஏற்பட்டாலும் உங்கள் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படாது. உழைப்புக் கிரகமான சனிபகவான் பாதகமாக சஞ்சரிப்பதால், உங்களுடைய உழைப்பு எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்காது. இந்த நேரத்தில் பாதிப் பலன் கிடைத்தாலும் சந்தோஷப்படுக்க வேண்டியதுதான். கொடுக்கல்- வாங்கலில் மனஸ்தாபம் ஏற்படும். இப்போது உங்களுடைய சிந்தனை சரியான பாதையில் செல்லாது. தவறான முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவுகள் சில விரயங்களை ஏற்படுத்தும். எதிலும் திட்டமிடாமல் செயல்படுவீர்கள். அதனால் வெற்றி பெறுவது  அரிதாக இருக்கும். அதிகமாக அறிமுகமில்லாதவர்களிடமிருந்து நல்ல உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் பிஸியாக நடைபெறுவதாக  தோன்றினாலும், லாபத்தைப் பார்க்க முடியாது. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில், மேலதிகாரிகளிடமிருந்தும்,  சக ஊழியர்களிடமிருந்தும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். கலைஞர்களுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கடன் பிரச்சினைகள் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் மூலமாக சில நல்ல உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு.

(3). 3.3.13.முதல், 23.7.14. வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:
இப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் பண வரவுகளில் தடைகளும் சறுக்கல்களும் ஏற்பட்டாலும் எப்படியாவது செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். நண்பர்களுடன் அடிக்கடி கருத்துவேறுபாடுகள்  ஏற்படும். பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. வாகனம் வாங்குதல், ஓட்டுதல், பழுது பார்த்தல் ஆகிய அனைத்திலும் குறைக்ளும் குளறுபடிகளும் ஏற்படும். ஆரோக்கியத்தில் குறைபாடுகள் வந்தாலும் அது உங்கள் செயல்பாடுகளைப் பாதிக்காது. நீண்ட தூரப் பயணங்கள், இடமாற்றங்கள் போன்றவை ஏற்படும். பொறுப்புகளின் சுமை அதிகமாகி உங்களைத் திணற வைக்கும். கடமைகளை சரிவர செய்ய முடியாது. தாமதமும் தேக்கமும் உண்டாகும்.   உங்களுடைய முக்கியத்துவம் குறையும். முன்னேற்றமும் தடைப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் பார்ப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைத் தாங்க முடியாமல், கலங்கிப் போவார்கள். கடினமாக வேலைவாங்கி கசக்கிப் பிழிவார்கள். தாங்கமுடியாமல்,  கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் பற்றாக்குறைப் பிரச்சினை கணவ்ன்-மனைவிக்கிடையே பெரும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
இந்த மூன்று வக்கிர சஞ்சாரங்களும் நீங்கப்பெற்றபின் ஓரளவுக்கு நிலைமையில் முன்னேற்றம் தெரியும். உங்களிடம் குடிகொண்டிருந்த மந்தத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். உடம்பில் ஊக்கமும் ஊட்டமும் அதிகமாகும். எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். முடக்கநிலை மாறி முயற்சிகள் எடுக்க ஆரம்பிப்பீர்கள் . முட்டுக்கட்டைகள் நீங்கும். வசதிகளும் வாய்ப்புகளும் பெருகும். மதிப்பும் மரியாதையும் உயரும். பணவரவில் எந்தவித தடையோ தாமதமோ ஏற்படாமல் பொருளாதார நிலை மேம்படும். வற்றாத அருவி போல கைக்கு பணம் வந்துகொண்டே இருக்கும்.  தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம், ப்ணி உயர்வு, சம்பள உய்ர்வு முதலியவை கிடைக்கும். திருமணப்பேச்சுவார்த்தைகள் தொடரும். திருமணமும் நிச்சயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரம்:

1. குரு பிரதோஷம், சனிப் பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம் ஆகிய விஷேஷ தினங்களில் சிவாலயம் சென்று, அபிஷேக திரவியங்கள் முடிந்த அளவு வாங்கித் தரலாம். சிவ புராணம் படிக்கவும்.
2. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி வழிபட நன்று.
3 தசரதர் அருளிய தாரித்ரய தகன ஸ்தோத்திர தீபம் பாராயணம் செய்க.
4. வழிபாடுகளில் பிரதோஷம், குறிப்பாக வியாழன், சனியில் வரும் பிரதோஷம், இதே கிழமைகலில் வரும் தேய்பிறை அஷ்டமி, பைரவர், துர்க்கை, காளி வழிபாடு, ராகுகால சரபேஷ்வரர் வழிபாடு குபேர லட்சுமி பூஜை , காயத்ரி உபாசணை,  பிரம்மா சரஸ்வதி வழிபாடு அல்லது மூவருமாக இணைந்த தாத்தாத்ரேயர் வழிபாடு, ஆஞ்சனேயர் உபாசனை, ஆறுமுகப் பெருமான் வழிபாடு யாவும் ஏற்றதே.
5. அஷ்ட கணபதி, மற்றும் சனீஸ்வரர் மகன் மாந்தி வழிபட்ட  ஆலயம், நர்த்தன பள்ளியறை கொண்ட மணக்குழ வினாயகர், பாண்டி, எட்டு கைகளுடன் கூடிய துர்க்கை, எமகண்டீஸ்வரம் பிரம்மஸ்தான ஆஞ்சனேயர்., சுவாமிமலை முருகன் இதன் ஸ்தலங்களுக்கு சென்று அர்ச்சனை, ஆராதனை , சனி, வியாழக் கிழமைகளில் வழிபடுதல் நலம்.
6. சுயம்பு லிங்கமாகக் காட்சி தரும் குச்சானூர் சனீஸ்வரர், ஆரணி ஏரிக்குப்பத்தில் எழுந்தளியுள்ள எந்திர வடிவிலான சனீஸ்வரர், கோளாறு நீக்கும் திருநள்ளாறு சனீஸ்வரர் இவர்களைத் தரிசித்து தகுந்த பரிகாரங்களை செய்து வரவும்.
சுபம் உண்டாகும்.! வாழ்க வளமுடன்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>