/* ]]> */
Aug 262011
 

கும்பம்:

 

கும்ப ராசி

இந்த சனிப் பெயற்சி மூலம் உங்களுக்கு அஷ்டம சனியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதுவே பெரிய நன்மைதான். சனியின் அசுப பலன்கள் அமையாமல் இருந்தாலே பெரிய நன்மைதான். ” அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி” என்று ஒரு பழமொழி உண்டு. பணிச்சுமையும் குடும்பப் பொறுப்பும் கூடி உங்களை ஒரு வழியாக்கியது.  தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்திலிருந்து ஒன்பதாமிடத்திற்கு மாறப் போகிறார்.  ஒன்பதாமிடத்திற்கு பாக்கிய ஸ்தானம் என்றும் மகாலட்ஸ்மி ஸ்தானம் என்றும் பெயருண்டு. உமது ராசிநாதனான சனி பகவான் ஒன்பதில் உச்சம் பெறுவது மிகவும் விஷேஷம். இதனால், ஓரளவு யோகத்தையும் தரும். தங்க சனியாக இந்தத் தரணியில் ஒளி வீசப் போகிறீர்கள். அஷ்டம சனியில் இருந்துவந்த சில இடையூறுகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும். உங்க முயற்சி, முதலீடு எதிர்பார்ப்பு இவற்றில் சற்று சாதகம் அமையக்கூடும். ராசிநாதன் ஒன்பதில் உச்சம் பெறுவது மிகவும் விஷேஷம். தந்தை மூலம் தனலாபம் கிட்டும். வீடுகட்ட கடன் கிடைக்கும். புதிய வண்டி, வாகனம் வாங்க இடமேற்படும்.புத்திர பாக்கியம் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையில் இருந்து வந்த கருத்துவேற்றுமை அகலும்.  சனி பகவானின் ஒன்பதாமிடத்து சஞ்சாரம் உங்களுக்கு அடிப்படையான பாதிப்பு எதுவும் ஏற்படாது. எனினும் கடினமான வேலைப்பளு, காரியச் சிரமங்கள் அதிகமான செலவினங்கள், அசௌகரியங்கள் போன்றவை ஏற்படும்.  நீங்கள் இதுவரை செய்துவந்த தான தருமங்கள், தடைப்படும். தைரியமும் தெம்பும் குறைந்தது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படும்.மனதில் அச்சம் குடிகொள்ளும் .மனபலவீனம் ஒருவித தளர்ச்சியை ஏற்படுத்தும். பொருளாதார நிலை மிகமிக சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாவிட்டாலும், தேவைக்கேற்ற பணம் எப்படியாவது கிடைத்துவிடும். வருமானம் அதிகமானால், செலவுகளும் அதிகமாவதால், உங்களுக்கு சேமிப்பு என்று எதுவும் தங்க வழியில்லை. ஆனால், வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துகள் வாங்க வழி ஏற்படும். சண்டை சச்சரவுகள் வராமலிருக்காது. ஆனால், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. விட்டுக்கொடுத்து பின்வாங்கிவிடுவீர்கள். வழக்கு, விவகாரங்கள் இழுபறியாகவே இருக்கும். நோய் நொடிகள் வந்தலும் உடனுக்குடன் குணமாகிவிடும். சிறு அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்; என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். சிறு விபத்துக்களில் சிக்கிக்கொள்ள வாய்ப்புண்டு. கணவன்-மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் அது வெளியே தெரியாது. உடன்பிறந்தவர்களால், செலவினங்களும் ஏற்படும். விரயங்களும் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தையில் மந்தமான போக்கு காணப்படும். சிலர் வெளிநாடு சென்று படிக்க நேரும். ஏதேனும் ஒரு நூதன கலையால் விளம்பரம் ஆவீர்கள். ஒன்பதாமிட்ம் என்பது லட்சுமியின் ஸ்தானமாகும். இதனால் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பயப்படக்கூடிய அளவு   இருக்காது. தன்னுடைய முக்கியத் தேவைகளை தனக்கும் , தன் குடும்பத்திற்கும் வாரிசுகளுக்கும் பயன்படுத்திக்கொள்வீர்கள். அத்துடன்  மனைவி., பிள்ளை பேரன் பேத்திகளுக்கு என்று  பிற்காலத்துக்கு தேவையான திட்டங்களும் முதலீடுகளும் செய்வீர்கள். நல்ல வேலை, நல்ல அதிகாரி முதலாளி, தொழிலாளி  ஒத்துழைப்பு என்று  யாவும் சற்று சாதகமாக இருக்கும்.

சனி பகவானின் பார்வை பலன்களைப்பற்றிப் பார்ப்போம்:

சனி பகவான் தனது 3,7,10-ம் பார்வைகளால், உங்களுடைய லாப ஸ்தானம், தைரிய- பராக்கிரம ஸ்தானம், பகை- ரோக- கடன் ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்களுடைய லாப ஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய வருமானம் பாதிப்படையக்கூடும். உங்கள் பொருளாதார நிலை எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கும். வருமானம் தொடர்பான செயல்களில் தடைகள், தடங்கல்கள், தாமதங்கள், இடையூறுகள் போன்றவை ஏற்படும்.  உழைப்புக் கிரகமான சனி உங்களுக்குப் பாதகமாக சஞ்சரிப்பதால், உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டாது. சில சமயங்களில்  உங்கள்  உழைப்பின் பயனைப் பிறர் தட்டிச் சென்று விடுவார்கள். இருப்பினும் உங்கள் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வந்து விடும்.

சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய – பராக்கிரம ஸ்தானத்தில் பதிவதால், மனதில் தைரியம் குறையும். எதையும் உங்களால் எதிர்க்க முடியாது. எதிர்க்க வேண்டிய மிக அவசியமான பிரச்சினைகளைக் கூட நீங்கள் சமாதாதானமாய்ப் போய்விடலாமா என்றுதான் யோசிப்பீர்களேயொழிய  நியாயத்தை தட்டிக் கேட்கத் தயங்குவீர்கள். மனதில் தைரியம் குறையும்.  துணிச்சலாக செயல்படத் தயங்குவீர்கள். மனதில் நம்பிக்கை இல்லாமல் போய் அவநம்பிக்கை குடிகொள்ளும். எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அதை வெற்றிகரமாக செய்யமுடியுமா என்ற சந்தேகம் வந்துவிடுவதால்,  அந்த விஷயத்தில் உங்களுக்குத் தோல்வியே கிடைக்கும். எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு வெற்றிகள் கிடைக்கும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர்  வழியில் ஏற்றமான நிகழ்வுகள் நடைபெறும். தாயார் வழியில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். தூர தேசத்திலிருந்து நற்செய்திகள் வரும். மனைவி வழியில் சுப நிகழ்ச்சியும் அதனால், கணிசமான செலவுகள் உண்டாகும்.  வீடு, மனை, பூமிபோன்றவற்றில் சீர்திருத்தம் செய்வீர்கள். உமது பெயரும் புகழும் ஓங்கும்.

சனி பகவானின் பத்தாம் பார்வை பகை- ரோக – கடன் ஸ்தானத்தில் பதிவதால், அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுதல், வாக்குவாதங்களின்போது தரக்குறைவாகப் பேசுதல், போன்றவை காரணமாக சிலரைப் பகைத்துக்கொள்ள நேரும். ஆரோக்கியம் சீராக இருக்காது. அடிக்கடி நோய் நொடிகள் ஏற்பட்டு  உங்களை முடக்கிப் போடும். அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் . அதிக செலவுகளை சமாளிக்க  கடன் வாங்குவீர்கள். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். பழைய கடன்களும் அவ்வப்போது தொல்லை கொடுக்கும். இது தவிர எதிரிகள் விலகுவர். உங்களுக்கு முன்னால், அவர்கள் மிகவும் பலவீனமடைந்து பின்வாங்குவர். கடன் தீரும். உங்களுடைய கவலைகள் சற்று குறையும். வீடுகட்ட, கார் வாங்க கடன் கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையில் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வருமானம் குறைவில்லாமல் இருக்கும்.

சனி பகவான்  இந்த இரண்டரை  வருட சஞ்சாரத்தில் மூன்று முறை வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.

(1). 9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் :
இப்போது சனி பகவான் வக்கிரமடைந்து சஞ்சரிக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் சில சிரமங்கள் ஏற்படும். தடைகளும் தாமதங்களும் ஏற்படும். அஷ்டம சனியின் பிடியிலிருந்து முழுவதுவதுமாக விலகிவிட்டோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாது. சனிபகவானின் சஞ்சாரம் உங்களுக்குப் பாதகமாக இருப்பதால், அவர் கொடுக்கும் தொல்லைகளை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். நோய் நொடிகள் என்று வந்துகொண்டிருக்கும். உரிய நேரத்தில் தக்க சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து விடுவீர்கள். உங்கள் வேலைகளை தொடர்ந்து கவனிப்பீர்கள். உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. ஆயினும் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணம் கிடைத்துவிடும். கொடுக்கல்- வாங்கலில் குளறுபடிகள் ஏற்படும்.  பழைய கடன்களைத் தீர்க்க புதிய கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் பிரச்சினைகள் தோன்றினாலும், ஓரளவுக்கு லாபம் கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடினமாக உழைத்து  மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறுவீர்கள். கடன் வசதியும் கிடைக்கும்.  கடன்கள் தடங்கலின்றிக் கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையே நல்ல உறவு நிலவும். பிள்ளையின் படிப்பு வகையில் அதிக செலவு ஏற்படும்.

(2). 16.2.13. முதல் 12.7.13. வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:

இப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரத்தில் இருக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் எதுவுமே நீங்கள் நினைப்பதுபோல் நடக்காது.  நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும். நடப்பது வேறொன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எது சொன்னாலும் அது மற்றவர்களுக்கு தப்பாவே தெரியும். நீங்கள் சொல்லும் நல்ல யோசனைகூட வீணாகிப் போகும். தற்போது உங்களிடம் காணப்படும் கவனக் குறைவினால், செய்யும் காரியங்களில் அதிகமான  குளறுபடிகள் காணப்படும். கைகால்களில் அடிபடுதல், முதுகுவலி கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பேற்படும். உங்களுடைய பொருளாதார  நிலைமை சிறப்பாக இல்லையென்றாலும், நிதி நெருக்கடிகளை எப்படியாவது சமாளித்து விடுவீர்கள். பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதில் சற்று தொய்வு ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வீட்டுத் திருமணங்களில் குடுப்ம்பத்துடன் கலந்துகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். உத்தியோகம் பார்ப்பவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படாது. கலைஞர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பு நிரந்தரமாக இருக்காது. ஒருநாள் இருக்கும் சந்தோஷம்  அடுத்த நாள் இருக்காது. யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் காணாமல்  குடும்பத்தில் மகிழ்ச்சி போயிருக்கும்.

(3). 3.3.14. முதல் 23.7.14. வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:

இப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.  இந்த்க் காலக் கட்டத்தில் உங்களிடம் ஒரு நிலையற்ற போக்கு தென்படும். ஒரு நாள் சுறுசுறுப்பாக இருந்தால், இரண்டு நாட்கள் உம்மென்று உட்கார்ந்திருப்பீர்கள்.  ஒருநாள் உற்சாகம்; ஒரு நாள் கவலை என்று இருப்பீர்கள்.  நீங்கள் முடித்துவிடலாம் என்று லேசாக நினைத்த காரியங்கள் இழுத்துக்கொண்டே போகும்.  கடினமானது என்று நீங்கள் நினைக்கும் வேறு சில காரிய்ங்கள்  சுலபமாக  முடிவடையும். , ஒரு காரியத்தை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்; அதே சமயம் அடுத்த காரியயத்தை பாதியிலேயே நிறுத்திவிடுவீர்கள். ஒருநாள் கை நிறைய பணம் இருக்கும் இன்னொரு நாள் பத்துரூபாய்கூட இருக்காது. சின்னச் சின்ன செலவுக்குக்கூட தவிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அலட்சியம் காட்டாமல், முழு கவனம் காட்டினால்தான் லாபம் ஏற்படும் ; லாபம்  இல்லையென்றாலும் நஷ்டத்திலிருந்தாவது தப்பிக்கலாம். ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்தவேண்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும் .  அவைகளை தீர்க்கிறேன் பேர்வழி என்று இறங்கிவிட வேண்டாம். மனைவியோ  குடும்பப் பெரியவர்கள் யாரோ தீர்த்துக்கொள்வார்கள்.  ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வக்கிர சஞ்சாரங்களும் இல்லாத காலங்களிலும் , மூன்றும் முடிந்த பிறகும், உங்களுக்கு சற்று ஆறுதலான  காலமாக இருக்கும். நற்பயன்களாக  நடக்கும்.  எதிர்பார்த்த இடங்களிலிருந்தும் பணம் வரும்; எதிர்பாராத் இடங்களிலிருந்தும் பணம் வரும். செலவுகளை சமாளிப்பதில் சிரமம் இருக்காது. நகை, நட்டு, விலை உயர்ந்த பொருட்கள், வசதிகளைப் பெருக்கும் சாதனங்கள், மின் பொருட்கள் முதலியவற்றை வாங்குவீர்கள். மனதில் குழப்பமின்றி தெளிவாக சிந்தித்து நல்ல முடிவாக எடுத்து வெற்றிக்கொடி நாட்டுவிர்கள். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் காணப்படும்.  அனைத்துவிதமான பலன்களும் நற்பலன்களாகவே இருக்கும்.
பரிகாரம்:

1. தத்தம் குலதெய்வங்கள், இஷ்ட தெய்வங்கள் மற்றும் குருமார்கள், சித்த புருஷர்கள் ஆகியோரை வணங்கவும்.
2. சனியின் குருவான பைரவ மூர்த்தி, ராம ஆஞ்சநேயர், அரசன்கோவில் சுந்தர மகாலட்சுமி, திருப்பட்டூர் புருஷோத்தம நாயகி;   ஆகியோரை வழிபடவும்.
3. ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சித்த புருஷர்கள் , திருவக்கரை வக்கிர காளி ஆகியோரை வணங்கவும்.
4. பிரதோஷம், ஏகாதசி, அஷ்டமி, பைரவர், துர்க்கை பூஜைகள், நூல், தாமரை இவற்றின் திரியின் முலம் தீபம் ஏற்றுவது, லட்சுமி வழிபாடு யாவும் உகந்ததே.
5. குபேர கணபதி- பிள்ளையார்பட்டி; லிங்க வடிவில் உள்ள எந்திர சனீஸ்வரர் ஏரிக்குப்பம்; காயத்ரி விஷ்ணு துர்க்கையோடு  உள்ள தனி ஸ்தலமான சிதம்பரம்; குபேரன் சங்கநிதி , பதுமநிதியோடு  உள்ள  சென்னை ரத்தின மங்களம் போன்ற இடங்களுக்குச் சென்று அர்ச்சனை ஆராதனைகள் செய்து வழிபாடுகளை மேற்கொள்ளவும்
6. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி கருங்குவளை சாற்றி ” ஓம் சனீஸ்வராய நமஹ ” என்று சொல்லி 9 முறை வலம் வந்து வணங்கவும்.
7. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு காராம் பசுவின் பாலினால், அபிஷேகம் செய்து ” ஓம் நம சிவாய நம ஓம் ” என்று சொல்லிக்கொண்டு 11 முறை வலம் வந்து வணங்கவும்.
8. தவறாமல் திருநள்ளாறு, குச்சானூர் முதலிய சனீஸ்வர ஸ்தலங்களுக்குச் சென்று வரவும்.
9. தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும்.
சுபமுண்டாகும். வாழ்க வளமுடன்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>